srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


பொருட்பால்

92. வரைவின் மகளீர்

1  அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்
பொருள்(விளக்கம்): அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும்
Transliteration: Anpin Vizhaiyaar Porulvizhaiyum AaidhotiyaarInsol Izhukkuth Tharum
Couplet: Those that choice armlets wear who seek not thee with love,
But seek thy wealth, their pleasant words will ruin prove
Explanation: The sweet words of elegant braceleted (prostitutes) who desire (a man) not from affection but from avarice, will cause sorrow
பால் : பொருட்பால், அதிகாரம் : 92 - வரைவின் மகளீர், குறள் : 911
2  பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்
பொருள்(விளக்கம்): ஆதாயத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு பாகுமொழிபேசும் பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாது
Transliteration: Payandhookkip Panpuraikkum Panpin MakalirNayandhookki Nallaa Vital
Couplet: Who weigh the gain, and utter virtuous words with vicious heart,
Weighing such women's worth, from their society depart
Explanation: One must ascertain the character of the ill-natured women who after ascertaining the wealth (of a man) speak (as if they were) good natured-ones, and avoid intercourse (with them)
பால் : பொருட்பால், அதிகாரம் : 92 - வரைவின் மகளீர், குறள் : 912
3  பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று
பொருள்(விளக்கம்): விலைமாதர்கள் பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவிப் பொய்யன்பு காட்டி நடிப்பது, இருட்டறையில் ஓர் அந்நியப் பிணத்தை அணைத்துக் கிடப்பது போன்றதாகும்
Transliteration: Porutpentir Poimmai Muyakkam IruttaraiyilEdhil Pinandhazheei Atru
Couplet: As one in darkened room, some stranger corpse inarms,
Is he who seeks delight in mercenary women's charms
Explanation: The false embraces of wealth-loving women are like (hired men) embracing a strange corpse in a dark room
பால் : பொருட்பால், அதிகாரம் : 92 - வரைவின் மகளீர், குறள் : 913
4  பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்
பொருள்(விளக்கம்): அருளை விரும்பி ஆராய்ந்திடும் அறிவுடையவர்கள் பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாகக் கருதுவார்கள்
Transliteration: Porutporulaar Punnalan Thoyaar ArutporulAayum Arivi Navar
Couplet: Their worthless charms, whose only weal is wealth of gain,
From touch of these the wise, who seek the wealth of grace, abstain
Explanation: The wise who seek the wealth of grace will not desire the base favours of those who regard wealth (and not pleasure) as (their) riches
பால் : பொருட்பால், அதிகாரம் : 92 - வரைவின் மகளீர், குறள் : 914
5  பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்
பொருள்(விளக்கம்): இயற்கையறிவும் மேலும் கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்கள் பொதுமகளிர் தரும் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள்
Transliteration: Podhunalaththaar Punnalam Thoyaar MadhinalaththinMaanta Arivi Navar
Couplet: From contact with their worthless charms, whose charms to all are free,
The men with sense of good and lofty wisdom blest will flee;
Explanation: Those whose knowledge is made excellent by their (natural) sense will not covet the trffling delights
பால் : பொருட்பால், அதிகாரம் : 92 - வரைவின் மகளீர், குறள் : 915
6  தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்
பொருள்(விளக்கம்): புகழ்ச்சிக்குரிய சான்றோர் எவரும், இகழ்ச்சிக்குரிய இன்பவல்லிகளின் தோளில் சாய்ந்து கிடக்க மாட்டார்
Transliteration: Thannalam Paarippaar Thoyaar ThakaiserukkipPunnalam Paarippaar Thol
Couplet: From touch of those who worthless charms, with wanton arts, display,
The men who would their own true good maintain will turn away
Explanation: Those who would spread (the fame of) their own goodness will not desire the shoulders of those,who rejoice in their accomplishments and bestow their despicable favours (on all who pay)
பால் : பொருட்பால், அதிகாரம் : 92 - வரைவின் மகளீர், குறள் : 916
7  நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்
பொருள்(விளக்கம்): உள்ளத்தில் அன்பு இல்லாமல் தன்னலத்துக்காக உடலுறவு கொள்ளும் பொதுமகளிர் தோளை, உறுதியற்ற மனம் படைத்தோர் மட்டும் நம்பிக் கிடப்பர்
Transliteration: Nirainenjam Illavar Thoivaar PiranenjirPenip Punarpavar Thol
Couplet: Who cherish alien thoughts while folding in their feigned embrace,
These none approach save those devoid of virtue's grace
Explanation: Those who are destitute of a perfectly (reformed) mind will covet the shoulders of those who embrace (them) while their hearts covet other things
பால் : பொருட்பால், அதிகாரம் : 92 - வரைவின் மகளீர், குறள் : 917
8  ஆயும் அறிவினர் அல்லார்க் கணங்கென்ப
மாய மகளிர் முயக்கு
பொருள்(விளக்கம்): வஞ்சக எண்ணங்கொண்ட ``பொதுமகள்'' ஒருத்தியிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட ``மோகினி மயக்கம்'' என்று கூறுவார்கள்
Transliteration: Aayum Arivinar Allaarkku AnangenpaMaaya Makalir Muyakku
Couplet: As demoness who lures to ruin woman's treacherous love
To men devoid of wisdom's searching power will prove
Explanation: The wise say that to such as are destitute of discerning sense the embraces of faithless women are (as ruinous as those of) the celestail female
பால் : பொருட்பால், அதிகாரம் : 92 - வரைவின் மகளீர், குறள் : 918
9  வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு
பொருள்(விளக்கம்): விலைமகளை விரும்பி அவள் பின்னால் போவதற்கும் ``நரகம்'' எனச் சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை
Transliteration: Varaivilaa Maanizhaiyaar Mendhol PuraiyilaapPooriyarkal Aazhum Alaru
Couplet: The wanton's tender arm, with gleaming jewels decked,
Is hell, where sink degraded souls of men abject
Explanation: The delicate shoulders of prostitutes with excellent jewels are a hell into which are plunged the ignorant base
பால் : பொருட்பால், அதிகாரம் : 92 - வரைவின் மகளீர், குறள் : 919
10  இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு
பொருள்(விளக்கம்): இருமனம் கொண்ட பொதுமகளிருடனும், மதுவுடனும், சூதாட்டத்தினிடமும் தொடர்பு கொண்டு உழல்வோரைவிட்டு வாழ்வில் அமைய வேண்டிய சிறப்பு அகன்றுவிடும்
Transliteration: 920 Irumanap Pentirum Kallum KavarumThiruneekkap Pattaar Thotarpu
Couplet: Women of double minds, strong drink, and dice; to these giv'n o'er,
Are those on whom the light of Fortune shines no more
Explanation: Treacherous women, liquor, and gambling are the associates of such as have forsaken by Fortune
பால் : பொருட்பால், அதிகாரம் : 92 - வரைவின் மகளீர், குறள் : 920
Page 92 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com