
14. ஒழுக்கமுடைமை
| 1 ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் |
| பொருள்(விளக்கம்): ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது |
| Transliteration: Ozhukkam Vizhuppan Tharalaan OzhukkamUyirinum Ompap Patum |
| Couplet: 'Decorum' gives especial excellence; with greater care 'Decorum' should men guard than life, which all men share |
| Explanation: Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than life |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 14 - ஒழுக்கமுடைமை, குறள் : 131 |
| 2 பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை |
| பொருள்(விளக்கம்): எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும் |
| Transliteration: Parindhompik Kaakka Ozhukkam TherindhompithTherinum Aqdhe Thunai |
| Couplet: Searching, duly watching, learning, 'decorum' still we find; Man's only aid; toiling, guard thou this with watchful mind |
| Explanation: Let propriety of conduct be laboriously preserved and guarded; though one know and practise and excel in many virtues, that will be an eminent aid |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 14 - ஒழுக்கமுடைமை, குறள் : 132 |
| 3 ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் |
| பொருள்(விளக்கம்): ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும் ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர் |
| Transliteration: Ozhukkam Utaimai Kutimai IzhukkamIzhindha Pirappaai Vitum |
| Couplet: 'Decorum's' true nobility on earth; 'Indecorum's' issue is ignoble birth |
| Explanation: Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 14 - ஒழுக்கமுடைமை, குறள் : 133 |
| 4 மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் |
| பொருள்(விளக்கம்): பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான் |
| Transliteration: Marappinum Oththuk Kolalaakum PaarppaanPirappozhukkang Kundrak Ketum |
| Couplet: Though he forget, the Brahman may regain his Vedic lore; Failing in 'decorum due,' birthright's gone for evermore |
| Explanation: A Brahman though he should forget the Vedas may recover it by reading; but, if he fail in propriety of conduct even his high birth will be destroyed |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 14 - ஒழுக்கமுடைமை, குறள் : 134 |
| 5 அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு |
| பொருள்(விளக்கம்): பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது |
| Transliteration: Azhukkaa Rutaiyaankan Aakkampondru IllaiOzhukka Milaankan Uyarvu |
| Couplet: The envious soul in life no rich increase of blessing gains, So man of 'due decorum' void no dignity obtains |
| Explanation: Just as the envious man will be without wealth, so will the man of destitute of propriety of conduct be without greatness |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 14 - ஒழுக்கமுடைமை, குறள் : 135 |
| 6 ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து |
| பொருள்(விளக்கம்): மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள் |
| Transliteration: Ozhukkaththin Olkaar Uravor IzhukkaththinEdham Patupaak Karindhu |
| Couplet: The strong of soul no jot abate of 'strict decorum's' laws, Knowing that 'due decorum's' breach foulest disgrace will cause |
| Explanation: Those firm in mind will not slacken in their observance of the proprieties of life, knowing, as they do, the misery that flows from the transgression from them |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 14 - ஒழுக்கமுடைமை, குறள் : 136 |
| 7 ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவ ரெய்தாப் பழி |
| பொருள்(விளக்கம்): நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும் |
| Transliteration: Ozhukkaththin Eydhuvar Menmai IzhukkaththinEydhuvar Eydhaap Pazhi |
| Couplet: 'Tis source of dignity when 'true decorum' is preserved; Who break 'decorum's' rules endure e'en censures undeserved |
| Explanation: From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 14 - ஒழுக்கமுடைமை, குறள் : 137 |
| 8 நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் |
| பொருள்(விளக்கம்): நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும் தீயொழுக்கம், தீராத துன்பம் தரும் |
| Transliteration: Nandrikku Viththaakum Nallozhukkam TheeyozhukkamEndrum Itumpai Tharum |
| Couplet: 'Decorum true' observed a seed of good will be; 'Decorum's breach' will sorrow yield eternally |
| Explanation: Propriety of conduct is the seed of virtue; impropriety will ever cause sorrow |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 14 - ஒழுக்கமுடைமை, குறள் : 138 |
| 9 ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல் |
| பொருள்(விளக்கம்): தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும் |
| Transliteration: Ozhukka Mutaiyavarkku Ollaave TheeyaVazhukkiyum Vaayaar Solal |
| Couplet: It cannot be that they who 'strict decorum's' law fulfil, E'en in forgetful mood, should utter words of ill |
| Explanation: Those who study propriety of conduct will not speak evil, even forgetfully |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 14 - ஒழுக்கமுடைமை, குறள் : 139 |
| 10 உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங் கல்லா ரறிவிலா தார் |
| பொருள்(விளக்கம்): உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள் |
| Transliteration: Ulakaththotu Otta Ozhukal PalakatrumKallaar Arivilaa Thaar |
| Couplet: Who know not with the world in harmony to dwell, May many things have learned, but nothing well |
| Explanation: Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 14 - ஒழுக்கமுடைமை, குறள் : 140 |