
130. நெஞ்சொடுபுலத்தல்
| 1 அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீயெமக் காகா தது |
| பொருள்(விளக்கம்): நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்? |
| Transliteration: Avarnenju Avarkkaadhal Kantum EvannenjeNeeemakku Aakaa Thadhu |
| Couplet: You see his heart is his alone O heart, why not be all my own |
| Explanation: O my soul! although you have seen how his soul stands by him, how is it you do not stand by me? |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 130 - நெஞ்சொடுபுலத்தல், குறள் : 1291 |
| 2 உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரெனச் சேறியென் நெஞ்சு |
| பொருள்(விளக்கம்): நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே |
| Transliteration: Uraaa Thavarkkanta Kannum AvaraichCheraaarenach Cheriyen Nenju |
| Couplet: 'Tis plain, my heart, that he 's estranged from thee; Why go to him as though he were not enemy |
| Explanation: O my soul! although you have known him who does not love me, still do you go to him, saying 'he will not be displeased.' |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 130 - நெஞ்சொடுபுலத்தல், குறள் : 1292 |
| 3 கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ பெட்டாங் கவர்பின் செலல் |
| பொருள்(விளக்கம்): நெஞ்சே! நீ எனை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவோ? |
| Transliteration: Kettaarkku Nattaaril Enpadho NenjeneePettaangu Avarpin Selal |
| Couplet: 'The ruined have no friends, 'they say; and so, my heart, To follow him, at thy desire, from me thou dost depart |
| Explanation: O my soul! do you follow him at pleasure under the belief that the ruined have no friends? |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 130 - நெஞ்சொடுபுலத்தல், குறள் : 1293 |
| 4 இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று |
| பொருள்(விளக்கம்): நெஞ்சே! முதலில் ஊடல் செய்து பிறகு அதன் பயனைக் கூடலில் நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார் பேசப் போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லை |
| Transliteration: Inianna Ninnotu Soozhvaaryaar NenjeThuniseydhu Thuvvaaikaan Matru |
| Couplet: 'See, thou first show offended pride, and then submit,' I bade; Henceforth such council who will share with thee my heart |
| Explanation: O my soul! you would not first seem sulky and then enjoy (him); who then would in future consult you about such things? |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 130 - நெஞ்சொடுபுலத்தல், குறள் : 1294 |
| 5 பெறாஅமை அஞ்சும் பெறினபிரி வஞ்சும் அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு |
| பொருள்(விளக்கம்): என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும் |
| Transliteration: Peraaamai Anjum Perinpirivu AnjumAraaa Itumpaiththen Nenju |
| Couplet: I fear I shall not gain, I fear to lose him when I gain; And thus my heart endures unceasing pain |
| Explanation: My soul fears when it is without him; it also fears when it is with him; it is subject to incessant sorrow |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 130 - நெஞ்சொடுபுலத்தல், குறள் : 1295 |
| 6 தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததென் நெஞ்சு |
| பொருள்(விளக்கம்): காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது |
| Transliteration: Thaniye Irundhu Ninaiththakkaal EnnaithThiniya Irundhadhen Nenju |
| Couplet: My heart consumes me when I ponder lone, And all my lover's cruelty bemoan |
| Explanation: My mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitude |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 130 - நெஞ்சொடுபுலத்தல், குறள் : 1296 |
| 7 நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென் மாணா மடநெஞ்சிற் பட்டு |
| பொருள்(விளக்கம்): அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாது நாணத்தையும் மறந்து விட்டேன் |
| Transliteration: Naanum Marandhen Avarmarak KallaaenMaanaa Matanenjir Pattu |
| Couplet: Fall'n 'neath the sway of this ignoble foolish heart, Which will not him forget, I have forgotten shame |
| Explanation: I have even forgotten my modesty, having been caught in my foolish mind which is not dignified enough to forget him |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 130 - நெஞ்சொடுபுலத்தல், குறள் : 1297 |
| 8 எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு |
| பொருள்(விளக்கம்): பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும் |
| Transliteration: Ellin Ilivaamendru Enni AvardhiramUllum Uyirkkaadhal Nenju |
| Couplet: If I contemn him, then disgrace awaits me evermore; My soul that seeks to live his virtues numbers o'er |
| Explanation: My soul which clings to life thinks only of his (own) gain in the belief that it would be disgraceful for it to despise him |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 130 - நெஞ்சொடுபுலத்தல், குறள் : 1298 |
| 9 துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய நெஞ்சந் துணையல் வழி |
| பொருள்(விளக்கம்): துன்பம் வரும்போது அதனைத் தாங்குவதற்கு நெஞ்சமே துணையாக இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்? |
| Transliteration: Thunpaththirku Yaare Thunaiyaavaar ThaamutaiyaNenjan Thunaiyal Vazhi |
| Couplet: And who will aid me in my hour of grief, If my own heart comes not to my relief |
| Explanation: Who would help me out of one's distress, when one's own soul refuses help to one? |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 130 - நெஞ்சொடுபுலத்தல், குறள் : 1299 |
| 10 தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய நெஞ்சம் தமரல் வழி |
| பொருள்(விளக்கம்): நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும் |
| Transliteration: Thanjam Thamarallar Edhilaar ThaamutaiyaNenjam Thamaral Vazhi |
| Couplet: A trifle is unfriendliness by aliens shown, When our own heart itself is not our own |
| Explanation: It is hardly possible for strangers to behave like relations, when one's own soul acts like a stranger |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 130 - நெஞ்சொடுபுலத்தல், குறள் : 1300 |