
70. மன்னரைச் செர்ந்தொழுகல்
| 1 அகலா தணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் |
| பொருள்(விளக்கம்): முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருப்பார்கள் |
| Transliteration: Akalaadhu Anukaadhu Theekkaaivaar PolkaIkalvendharch Cherndhozhuku Vaar |
| Couplet: Who warm them at the fire draw not too near, nor keep too much aloof; Thus let them act who dwell beneath of warlike kings the palace-roof |
| Explanation: Thus let them act who dwell beneath of warlike kings the palace-roof |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 70 - மன்னரைச் செர்ந்தொழுகல், குறள் : 691 |
| 2 மன்னர் விழைப விழையாமை மன்னரான் மன்னிய ஆக்கந் தரும் |
| பொருள்(விளக்கம்): மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும் விரும்பாமலிருத்தால் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும் |
| Transliteration: Mannar Vizhaipa Vizhaiyaamai MannaraalManniya Aakkan Tharum |
| Couplet: To those who prize not state that kings are wont to prize, The king himself abundant wealth supplies |
| Explanation: For ministers not to cover the things desired by their kings will through the kings themselves yield them everlasting wealth |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 70 - மன்னரைச் செர்ந்தொழுகல், குறள் : 692 |
| 3 போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது |
| பொருள்(விளக்கம்): தமக்கு மேலேயுள்ளவர்களிடத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் பொறுத்துக் கொள்ள முடியாத குற்றங்களைச் செய்யாமல் இருக்கவேண்டும் அப்படி செய்துவிட்டால் அதன் பிறகு தம் மீது ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவது எளிதான காரியமல்ல |
| Transliteration: Potrin Ariyavai Potral KatuththapinThetrudhal Yaarkkum Aridhu |
| Couplet: Who would walk warily, let him of greater faults beware; To clear suspicions once aroused is an achievement rare |
| Explanation: Ministers who would save themselves should avoid (the commission of) serious errors for if the king's suspicion is once roused, no one can remove it |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 70 - மன்னரைச் செர்ந்தொழுகல், குறள் : 693 |
| 4 செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியா ரகத்து |
| பொருள்(விளக்கம்): ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து, அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும் |
| Transliteration: Sevichchollum Serndha Nakaiyum AviththozhukalAandra Periyaa Rakaththu |
| Couplet: All whispered words and interchange of smiles repress, In presence of the men who kingly power possess |
| Explanation: While in the presence of the sovereign, ministers should neither whisper to nor smile at others |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 70 - மன்னரைச் செர்ந்தொழுகல், குறள் : 694 |
| 5 எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை விட்டக்காற் கேட்க மறை |
| பொருள்(விளக்கம்): பிறருடன் மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக் கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவிடவும் கூடாது அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும் |
| Transliteration: Epporulum Oraar Thotaraarmar RapporulaiVittakkaal Ketka Marai |
| Couplet: Seek not, ask not, the secret of the king to hear; But if he lets the matter forth, give ear |
| Explanation: (When the king is engaged) in secret counsel (with others), ministers should neither over-hear anything whatever nor pry into it with inquisitive questions, but (wait to) listen when it is divulged (by |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 70 - மன்னரைச் செர்ந்தொழுகல், குறள் : 695 |
| 6 குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல் |
| பொருள்(விளக்கம்): ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்க காலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக்குரியவைகளை விலக்கி, விரும்பத் தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும் |
| Transliteration: Kuripparindhu Kaalang Karudhi VeruppilaVentupa Vetpach Cholal |
| Couplet: Knowing the signs, waiting for fitting time, with courteous care, Things not displeasing, needful things, declare |
| Explanation: Knowing the (king's disposition and seeking the right time, (the minister) should in a pleasing manner suggest things such as are desirable and not disagreeable |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 70 - மன்னரைச் செர்ந்தொழுகல், குறள் : 696 |
| 7 வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல் |
| பொருள்(விளக்கம்): விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப் பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும் |
| Transliteration: Vetpana Solli Vinaiyila EgngnaandrumKetpinum Sollaa Vital |
| Couplet: Speak pleasant things, but never utter idle word; Not though by monarch's ears with pleasure heard |
| Explanation: Ministers should (always) give agreeable advice but on no occasion recommend useless actions, though requested (to do so) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 70 - மன்னரைச் செர்ந்தொழுகல், குறள் : 697 |
| 8 இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற ஒளியோ டொழுகப் படும் |
| பொருள்(விளக்கம்): எமக்கு இளையவர்தான்; இன்ன முறையில் உறவுடையவர் தான் என்று ஆட்சிப் பொறுப்பில் இருப்போரை இகழ்ந்துரைக்காமல், அவர்கள் அடைந்துள்ள பெருமைக்கேற்பப் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும் |
| Transliteration: Ilaiyar Inamuraiyar Endrikazhaar NindraOliyotu Ozhukap Patum |
| Couplet: Say not, 'He's young, my kinsman,' despising thus your king; But reverence the glory kingly state doth bring |
| Explanation: Ministers should behave in accordance with the (Divine) light in the person of kings and not despise them saying, 'He is our junior (in age) and connected with our family!' |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 70 - மன்னரைச் செர்ந்தொழுகல், குறள் : 698 |
| 9 கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர் |
| பொருள்(விளக்கம்): ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில், ஏற்றுகொள்ள முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள் |
| Transliteration: Kolappattem Endrennik Kollaadha SeyyaarThulakkatra Kaatchi Yavar |
| Couplet: 'We've gained his grace, boots nought what graceless acts we do', So deem not sages who the changeless vision view |
| Explanation: Those whose judgement is firm will not do what is disagreeable (to the sovereign) saying (within |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 70 - மன்னரைச் செர்ந்தொழுகல், குறள் : 699 |
| 10 பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும் |
| பொருள்(விளக்கம்): நெடுங்காலமாக நெருங்கிப் பழகுகிற காரணத்தினாலேயே தகாத செயல்களைச் செய்திட உரிமை எடுத்துக்கொள்வது கேடாகவே முடியும் |
| Transliteration: Pazhaiyam Enakkarudhip Panpalla SeyyumKezhudhakaimai Ketu Tharum |
| Couplet: Who think 'We're ancient friends' and do unseemly things; To these familiarity sure ruin brings |
| Explanation: The (foolish) claim with which a minister does unbecoming acts because of his (long) familiarity (with the king) will ensure his ruin |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 70 - மன்னரைச் செர்ந்தொழுகல், குறள் : 700 |