
125. நெஞ்சொடுகிளித்தல்
| 1 நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கு மருந்து |
| பொருள்(விளக்கம்): எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட ஏதாவது ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து, நெஞ்சே! உன்னால் சொல்ல முடியுமா? |
| Transliteration: Ninaiththondru Sollaayo Nenje EnaiththondrumEvvanoi Theerkkum Marundhu |
| Couplet: My heart, canst thou not thinking of some med'cine tell, Not any one, to drive away this grief incurable |
| Explanation: O my soul, will you not think and tell me some medicine be it what it may, that can cure this incurable malady? |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 125 - நெஞ்சொடுகிளித்தல், குறள் : 1241 |
| 2 காத லவரிலர் ஆகநீ நோவது பேதமை வாழியென் நெஞ்சு |
| பொருள்(விளக்கம்): அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க |
| Transliteration: Kaadhal Avarilar Aakanee NovadhuPedhaimai Vaazhiyen Nenju |
| Couplet: Since he loves not, thy smart Is folly, fare thee well my heart |
| Explanation: Is folly, fare thee well my heart! |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 125 - நெஞ்சொடுகிளித்தல், குறள் : 1242 |
| 3 இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல் |
| பொருள்(விளக்கம்): பிரிவுத் துன்பம் தந்த காதலருக்கு நம்மிடம் இரக்கமில்லாத போது, நெஞ்சே! நீ மட்டும் இங்கிருந்து கொண்டு அவரை எண்ணிக் கலங்குவதால் என்ன பயன்? |
| Transliteration: Irundhulli Enparidhal Nenje ParindhullalPaidhalnoi Seydhaarkan Il |
| Couplet: What comes of sitting here in pining thought, O heart? He knows No pitying thought, the cause of all these wasting woes |
| Explanation: O my soul! why remain (here) and suffer thinking (of him)? There are no lewd thoughts (of you) in him who has caused you this disease of sorrow |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 125 - நெஞ்சொடுகிளித்தல், குறள் : 1243 |
| 4 கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று |
| பொருள்(விளக்கம்): நெஞ்சே! நீ காதலரிடம் செல்லும் போது கண்களையும்கூட அழைத்துக்கொண்டு போ; இல்லையேல் அவரைக் காண வேண்டுமென்று என்னையே அவை தின்று விடுவது போல் இருக்கின்றன |
| Transliteration: Kannum Kolachcheri Nenje IvaiyennaithThinnum Avarkkaanal Utru |
| Couplet: O rid me of these eyes, my heart; for they, Longing to see him, wear my life away |
| Explanation: O my soul! take my eyes also with you, (if not), these would eat me up (in their desire) to see him |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 125 - நெஞ்சொடுகிளித்தல், குறள் : 1244 |
| 5 செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர் |
| பொருள்(விளக்கம்): நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா? |
| Transliteration: Setraar Enakkai Vitalunto NenjeyaamUtraal Uraaa Thavar |
| Couplet: O heart, as a foe, can I abandon utterly Him who, though I long for him, longs not for me |
| Explanation: O my soul! can he who loves not though he is beloved, be forsaken saying he hates me (now)? |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 125 - நெஞ்சொடுகிளித்தல், குறள் : 1245 |
| 6 கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய் பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு |
| பொருள்(விளக்கம்): நெஞ்சே! கூடிக் கலந்து ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால் ஒரு தடவைகூடப் பிணங்கியறியாத நீ இப்போது அவர் மீது கொள்ளுகிற கோபம் பொய்யானது தானே? |
| Transliteration: Kalandhunarththum Kaadhalark Kantaar PulandhunaraaiPoikkaaivu Kaaidhien Nenju |
| Couplet: My heart, false is the fire that burns; thou canst not wrath maintain, If thou thy love behold, embracing, soothing all thy pain |
| Explanation: O my soul! when you see the dear one who remove dislike by intercourse, you are displeased and continue to be so Nay, your displeasure is (simply) false |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 125 - நெஞ்சொடுகிளித்தல், குறள் : 1246 |
| 7 காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேனிவ் விரண்டு |
| பொருள்(விளக்கம்): நல்ல நெஞ்சமே! ஒன்று காதலால் துடிப்பதையாவது விட்டு விடு; அல்லது அதனைத் துணிந்து சொல்ல முடியாமல் தடுக்கும் நாணத்தையாவது விட்டு விடு இந்த இரண்டு செய்லகளையும் ஒரே நேரத்தில் தாங்கிக் கொள்ள என்னால் முடியாது |
| Transliteration: Kaamam Vituondro Naanvitu NannenjeYaano Poreniv Virantu |
| Couplet: Or bid thy love, or bid thy shame depart; For me, I cannot bear them both, my worthy heart |
| Explanation: O my good soul, give up either lust or honour, as for me I can endure neither |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 125 - நெஞ்சொடுகிளித்தல், குறள் : 1247 |
| 8 பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதையென் நெஞ்சு |
| பொருள்(விளக்கம்): நம்மீது இரக்கமின்றிப் பிரிந்து விட்டாரேயென்று ஏங்கிடும் அதே வேளையில் பிரிந்தவர் பின்னாலேயே சென்று கொண்டிருக்கும் என் நெஞ்சம் ஓர் அறிவற்ற பேதை போன்றதாகும் |
| Transliteration: Parindhavar Nalkaarendru Engip PirindhavarPinselvaai Pedhaien Nenju |
| Couplet: Thou art befooled, my heart, thou followest him who flees from thee; And still thou yearning criest: 'He will nor pity show nor love to me.' |
| Explanation: You are a fool, O my soul! to go after my departed one, while you mourn that he is not kind enough to favour you |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 125 - நெஞ்சொடுகிளித்தல், குறள் : 1248 |
| 9 உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ யாருழைச் சேறியென் நெஞ்சு |
| பொருள்(விளக்கம்): உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்? |
| Transliteration: Ullaththaar Kaadha Lavaraal UllineeYaaruzhaich Cheriyen Nenju |
| Couplet: My heart! my lover lives within my mind; Roaming, whom dost thou think to find |
| Explanation: O my soul! to whom would you repair, while the dear one is within yourself? |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 125 - நெஞ்சொடுகிளித்தல், குறள் : 1249 |
| 10 துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா இன்னும் இழத்தும் கவின் |
| பொருள்(விளக்கம்): சேராமல் பிரிந்து சென்ற காதலரைச் சிந்தையில் வைத்திருப்பதால் மேலும் மேனியெழில் இழந்து மெலிந்து அழிய வேண்டியுள்ளது |
| Transliteration: Thunnaath Thurandhaarai Nenjaththu UtaiyemaaInnum Izhaththum Kavin |
| Couplet: If I should keep in mind the man who utterly renounces me, My soul must suffer further loss of dignity |
| Explanation: If I retain in my heart him who has left me without befriending me, I shall lose even the (inward) beauty that remains |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 125 - நெஞ்சொடுகிளித்தல், குறள் : 1250 |