srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


பொருட்பால்

41. கல்லாமை

1  அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்
பொருள்(விளக்கம்): நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்
Transliteration: Arangindri Vattaati Yatre NirampiyaNoolindrik Kotti Kolal
Couplet: Like those at draughts would play without the chequered square,
Men void of ample lore would counsels of the learned share
Explanation: To speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on a board) without squares
பால் : பொருட்பால், அதிகாரம் : 41 - கல்லாமை, குறள் : 401
2  கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று
பொருள்(விளக்கம்): கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது
Transliteration: Kallaadhaan Sorkaa Murudhal MulaiyirantumIllaadhaal Penkaamur Ratru
Couplet: Like those who doat on hoyden's undeveloped charms are they,
Of learning void, who eagerly their power of words display
Explanation: The desire of the unlearned to speak (in an assembly), is like a woman without breasts desiring (the enjoyment of ) woman-hood
பால் : பொருட்பால், அதிகாரம் : 41 - கல்லாமை, குறள் : 402
3  கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்
பொருள்(விளக்கம்): கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்
Transliteration: Kallaa Thavarum Naninallar KatraarmunSollaa Thirukkap Perin
Couplet: The blockheads, too, may men of worth appear,
If they can keep from speaking where the learned hear
Explanation: The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learned
பால் : பொருட்பால், அதிகாரம் : 41 - கல்லாமை, குறள் : 403
4  கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்
கொள்ளார் அறிவுடை யார்
பொருள்(விளக்கம்): கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்
Transliteration: Kallaadhaan Otpam Kazhiyanan RaayinumKollaar Arivutai Yaar
Couplet: From blockheads' lips, when words of wisdom glibly flow,
The wise receive them not, though good they seem to show
Explanation: Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge
பால் : பொருட்பால், அதிகாரம் : 41 - கல்லாமை, குறள் : 404
5  கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்
பொருள்(விளக்கம்): கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்
Transliteration: Kallaa Oruvan Thakaimai ThalaippeydhuSollaatach Chorvu Patum
Couplet: As worthless shows the worth of man unlearned,
When council meets, by words he speaks discerned
Explanation: 51 The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (of
பால் : பொருட்பால், அதிகாரம் : 41 - கல்லாமை, குறள் : 405
6  உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்
பொருள்(விளக்கம்): கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்
Transliteration: Ularennum Maaththiraiyar Allaal PayavaakKalaranaiyar Kallaa Thavar
Couplet: 'They are': so much is true of men untaught;
But, like a barren field, they yield us nought
Explanation: The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they exist
பால் : பொருட்பால், அதிகாரம் : 41 - கல்லாமை, குறள் : 406
7  நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம்
மண்மாண் புனைபாவை யற்று
பொருள்(விளக்கம்): அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்
Transliteration: Nunmaan Nuzhaipulam Illaan EzhilnalamManmaan Punaipaavai Yatru
Couplet: Who lack the power of subtle, large, and penetrating sense,
Like puppet, decked with ornaments of clay, their beauty's vain pretence
Explanation: The beauty and goodness of one who is destitute of knowledge by the study of great and exquisite works, is like (the beauty and goodness) of a painted earthen doll
பால் : பொருட்பால், அதிகாரம் : 41 - கல்லாமை, குறள் : 407
8  நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு
பொருள்(விளக்கம்): முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்
Transliteration: Nallaarkan Patta Varumaiyin InnaadheKallaarkan Patta Thiru
Couplet: To men unlearned, from fortune's favour greater-evil springs
Than poverty to men of goodly wisdom brings
Explanation: Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon the learned
பால் : பொருட்பால், அதிகாரம் : 41 - கல்லாமை, குறள் : 408
9  மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு
பொருள்(விளக்கம்): கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்
Transliteration: Merpirandhaa Raayinum Kallaadhaar KeezhppirandhumKatraar Anaiththilar Paatu
Couplet: Lower are men unlearned, though noble be their race,
Than low-born men adorned with learning's grace
Explanation: The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste
பால் : பொருட்பால், அதிகாரம் : 41 - கல்லாமை, குறள் : 409
10  விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்
பொருள்(விளக்கம்): மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு
Transliteration: Vilangotu Makkal Anaiyar IlangunoolKatraarotu Enai Yavar
Couplet: Learning's irradiating grace who gain,
Others excel, as men the bestial train
Explanation: As beasts by the side of men, so are other men by the side of those who are learned in celebrated works
பால் : பொருட்பால், அதிகாரம் : 41 - கல்லாமை, குறள் : 410
Page 41 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com