srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


அறத்துப்பால்

21. தீவினையச்சம்

1  தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செறுக்கு
பொருள்(விளக்கம்): தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்
Transliteration: Theevinaiyaar Anjaar Vizhumiyaar AnjuvarTheevinai Ennum Serukku
Couplet: With sinful act men cease to feel the dread of ill within,
The excellent will dread the wanton pride of cherished sin
Explanation: Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 21 - தீவினையச்சம், குறள் : 201
2  தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
பொருள்(விளக்கம்): தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்
Transliteration: Theeyavai Theeya Payaththalaal TheeyavaiTheeyinum Anjap Patum
Couplet: Since evils new from evils ever grow,
Evil than fire works out more dreaded woe
Explanation: Because evil produces evil, therefore should evil be feared more than fire
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 21 - தீவினையச்சம், குறள் : 202
3  அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்குஞ் செய்யா விடல்
பொருள்(விளக்கம்): தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்
Transliteration: Arivinul Ellaan Thalaiyenpa TheeyaSeruvaarkkum Seyyaa Vital
Couplet: Even to those that hate make no return of ill;
So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil
Explanation: So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 21 - தீவினையச்சம், குறள் : 203
4  மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு
பொருள்(விளக்கம்): மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும்
Transliteration: Marandhum Piranketu Soozharka SoozhinAranjoozham Soozhndhavan Ketu
Couplet: Though good thy soul forget, plot not thy neighbour's fall,
Thy plans shall 'virtue's Power' by ruin to thyself forestall
Explanation: Even though forgetfulness meditate not the ruin of another Virtue will meditate the ruin of him who thus meditates
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 21 - தீவினையச்சம், குறள் : 204
5  இலனென்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றுப் பெயர்த்து
பொருள்(விளக்கம்): வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது; அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்
Transliteration: Ilan Endru Theeyavai Seyyarka SeyyinIlanaakum Matrum Peyarththu
Couplet: Make not thy poverty a plea for ill;
Thy evil deeds will make thee poorer still
Explanation: Commit not evil, saying, 'I am poor': if you do, you will become poorer still
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 21 - தீவினையச்சம், குறள் : 205
6  தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்
பொருள்(விளக்கம்): வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்
Transliteration: Theeppaala Thaanpirarkan Seyyarka NoippaalaThannai Atalventaa Thaan
Couplet: What ranks as evil spare to do, if thou would'st shun
Affliction sore through ill to thee by others done
Explanation: Let him not do evil to others who desires not that sorrows should pursue him
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 21 - தீவினையச்சம், குறள் : 206
7  எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென் றடும்
பொருள்(விளக்கம்): ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்
Transliteration: Enaippakai Yutraarum Uyvar VinaippakaiVeeyaadhu Pinsendru Atum
Couplet: From every enmity incurred there is to 'scape, a way;
The wrath of evil deeds will dog men's steps, and slay
Explanation: However great be the enmity men have incurred they may still live The enmity of sin will incessantly pursue and kill
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 21 - தீவினையச்சம், குறள் : 207
8  தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயா தடியுறைந் தற்று
பொருள்(விளக்கம்): ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்
Transliteration: Theeyavai Seydhaar Ketudhal NizhaldhannaiVeeyaadhu Atiurain Thatru
Couplet: Man's shadow dogs his steps where'er he wends;
Destruction thus on sinful deeds attends
Explanation: Destruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them not
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 21 - தீவினையச்சம், குறள் : 208
9  தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்
துன்னற்க தீவினைப் பால்
பொருள்(விளக்கம்): தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது
Transliteration: Thannaiththaan Kaadhala Naayin EnaiththondrumThunnarka Theevinaip Paal
Couplet: Beware, if to thyself thyself is dear,
Lest thou to aught that ranks as ill draw near
Explanation: If a man love himself, let him not commit any sin however small
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 21 - தீவினையச்சம், குறள் : 209
10  அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்
பொருள்(விளக்கம்): வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க
Transliteration: Arungetan Enpadhu Arika MarungotithTheevinai Seyyaan Enin
Couplet: The man, to devious way of sin that never turned aside,
From ruin rests secure, whatever ills betide
Explanation: Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 21 - தீவினையச்சம், குறள் : 210
Page 21 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com