
9. விருந்தோம்பல்
| 1 இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு |
| பொருள்(விளக்கம்): இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே |
| Transliteration: Irundhompi Ilvaazhva Thellaam VirundhompiVelaanmai Seydhar Poruttu |
| Couplet: All household cares and course of daily life have this in view Guests to receive with courtesy, and kindly acts to do |
| Explanation: The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 9 - விருந்தோம்பல், குறள் : 81 |
| 2 விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று |
| பொருள்(விளக்கம்): விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல |
| Transliteration: Virundhu Puraththadhaath Thaanuntal SaavaaMarundheninum Ventarpaar Randru |
| Couplet: Though food of immortality should crown the board, Feasting alone, the guests without unfed, is thing abhorred |
| Explanation: It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 9 - விருந்தோம்பல், குறள் : 82 |
| 3 வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று |
| பொருள்(விளக்கம்): விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை |
| Transliteration: Varuvirundhu Vaikalum Ompuvaan VaazhkkaiParuvandhu Paazhpatudhal Indru |
| Couplet: Each day he tends the coming guest with kindly care; Painless, unfailing plenty shall his household share |
| Explanation: The domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by poverty |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 9 - விருந்தோம்பல், குறள் : 83 |
| 4 அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந் தோம்புவான் இல் |
| பொருள்(விளக்கம்): மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள் |
| Transliteration: Akanamarndhu Seyyaal Uraiyum MukanamarndhuNalvirundhu Ompuvaan Il |
| Couplet: With smiling face he entertains each virtuous guest, 'Fortune' with gladsome mind shall in his dwelling rest |
| Explanation: Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 9 - விருந்தோம்பல், குறள் : 84 |
| 5 வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம் |
| பொருள்(விளக்கம்): விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா? |
| Transliteration: Viththum Italventum Kollo VirundhompiMichchil Misaivaan Pulam |
| Couplet: Who first regales his guest, and then himself supplies, O'er all his fields, unsown, shall plenteous harvests rise |
| Explanation: Is it necessary to sow the field of the man who, having feasted his guests, eats what may remain ? |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 9 - விருந்தோம்பல், குறள் : 85 |
| 6 செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு |
| பொருள்(விளக்கம்): வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர் |
| Transliteration: Selvirundhu Ompi Varuvirundhu PaarththiruppaanNalvarundhu Vaanath Thavarkku |
| Couplet: The guest arrived he tends, the coming guest expects to see; To those in heavenly homes that dwell a welcome guest is he |
| Explanation: He who, having entertained the guests that have come, looks out for others who may yet come, will be a welcome guest to the inhabitants of heaven |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 9 - விருந்தோம்பல், குறள் : 86 |
| 7 இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன் |
| பொருள்(விளக்கம்): விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம் |
| Transliteration: Inaiththunaith Thenpadhon Rillai VirundhinThunaiththunai Velvip Payan |
| Couplet: To reckon up the fruit of kindly deeds were all in vain; Their worth is as the worth of guests you entertain |
| Explanation: The advantages of benevolence cannot be measured; the measure (of the virtue) of the guests (entertained) is the only measure |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 9 - விருந்தோம்பல், குறள் : 87 |
| 8 பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார் |
| பொருள்(விளக்கம்): செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள் |
| Transliteration: Parindhompip Patratrem Enpar VirundhompiVelvi Thalaippataa Thaar |
| Couplet: With pain they guard their stores, yet 'All forlorn are we,' they'll cry, Who cherish not their guests, nor kindly help supply |
| Explanation: Those who have taken no part in the benevolence of hospitality shall (at length lament) saying, 'we have laboured and laid up wealth and are now without support.' |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 9 - விருந்தோம்பல், குறள் : 88 |
| 9 உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு |
| பொருள்(விளக்கம்): விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள் |
| Transliteration: Utaimaiyul Inmai Virundhompal OmpaaMatamai Matavaarkan Untu |
| Couplet: To turn from guests is penury, though worldly goods abound; 'Tis senseless folly, only with the senseless found |
| Explanation: That stupidity which excercises no hospitality is poverty in the midst of wealth It is the property of the stupid |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 9 - விருந்தோம்பல், குறள் : 89 |
| 10 மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து |
| பொருள்(விளக்கம்): அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர் |
| Transliteration: Moppak Kuzhaiyum Anichcham MukandhirindhuNokkak Kuzhaiyum Virundhu |
| Couplet: The flower of 'Anicha' withers away, If you do but its fragrance inhale; If the face of the host cold welcome convey, The guest's heart within him will fail |
| Explanation: As the Anicham flower fades in smelling, so fades the guest when the face is turned away |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 9 - விருந்தோம்பல், குறள் : 90 |