srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


பொருட்பால்

63. இடுக்கண் அழியாமை

1  இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்
பொருள்(விளக்கம்): சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்
Transliteration: Itukkan Varungaal Nakuka AdhanaiAtuththoorvadhu Aqdhoppa Thil
Couplet: Smile, with patient, hopeful heart, in troublous hour;
Meet and so vanquish grief; nothing hath equal power
Explanation: If troubles come, laugh; there is nothing like that, to press upon and drive away sorrow
பால் : பொருட்பால், அதிகாரம் : 63 - இடுக்கண் அழியாமை, குறள் : 621
2  வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்
பொருள்(விளக்கம்): வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும்
Transliteration: Vellath Thanaiya Itumpai ArivutaiyaanUllaththin Ullak Ketum
Couplet: Though sorrow, like a flood, comes rolling on,
When wise men's mind regards it,- it is gone
Explanation: A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow
பால் : பொருட்பால், அதிகாரம் : 63 - இடுக்கண் அழியாமை, குறள் : 622
3  இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
கிடும்பை படாஅ தவர்
பொருள்(விளக்கம்): துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்
Transliteration: Itumpaikku Itumpai Patuppar ItumpaikkuItumpai Pataaa Thavar
Couplet: Who griefs confront with meek, ungrieving heart,
From them griefs, put to grief, depart
Explanation: They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow
பால் : பொருட்பால், அதிகாரம் : 63 - இடுக்கண் அழியாமை, குறள் : 623
4  மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பா டுடைத்து
பொருள்(விளக்கம்): தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும்
Transliteration: Matuththavaa Yellaam Pakatannaan UtraItukkan Itarppaatu Utaiththu
Couplet: Like bullock struggle on through each obstructed way;
From such an one will troubles, troubled, roll away
Explanation: Troubles will vanish (i.e., will be troubled) before the man who (struggles against difficulties) as a
பால் : பொருட்பால், அதிகாரம் : 63 - இடுக்கண் அழியாமை, குறள் : 624
5  அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்
பொருள்(விளக்கம்): துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும்
Transliteration: Atukki Varinum Azhivilaan UtraItukkan Itukkat Patum
Couplet: When griefs press on, but fail to crush the patient heart,
Then griefs defeated, put to grief, depart
Explanation: The troubles of that man will be troubled (and disappear) who, however thickly they may come upon him, does not abandon (his purpose)
பால் : பொருட்பால், அதிகாரம் : 63 - இடுக்கண் அழியாமை, குறள் : 625
6  அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்
றோம்புதல் தேற்றா தவர்
பொருள்(விளக்கம்): இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?
Transliteration: Atremendru Allar Patupavo PetremendruOmpudhal Thetraa Thavar
Couplet: Who boasted not of wealth, nor gave it all their heart,
Will not bemoan the loss, when prosperous days depart
Explanation: Will those men ever cry out in sorrow, 'we are destitute' who, (in their prosperity), give not way to (undue desire) to keep their wealth
பால் : பொருட்பால், அதிகாரம் : 63 - இடுக்கண் அழியாமை, குறள் : 626
7  இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதா மேல்
பொருள்(விளக்கம்): துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள்
Transliteration: Ilakkam Utampitumpaik Kendru KalakkaththaikKaiyaaraak Kollaadhaam Mel
Couplet: 'Man's frame is sorrow's target', the noble mind reflects,
Nor meets with troubled mind the sorrows it expects
Explanation: The great will not regard trouble as trouble, knowing that the body is the butt of trouble
பால் : பொருட்பால், அதிகாரம் : 63 - இடுக்கண் அழியாமை, குறள் : 627
8  இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்ப முறுதல் இலன்
பொருள்(விளக்கம்): இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை
Transliteration: Inpam Vizhaiyaan Itumpai IyalpenpaanThunpam Urudhal Ilan
Couplet: He seeks not joy, to sorrow man is born, he knows;
Such man will walk unharmed by touch of human woes
Explanation: That man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man)
பால் : பொருட்பால், அதிகாரம் : 63 - இடுக்கண் அழியாமை, குறள் : 628
9  இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்ப முறுதல் இலன்
பொருள்(விளக்கம்): இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள் இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு
Transliteration: Inpaththul Inpam Vizhaiyaadhaan ThunpaththulThunpam Urudhal Ilan
Couplet: Mid joys he yields not heart to joys' control
Mid sorrows, sorrow cannot touch his soul
Explanation: He does not suffer sorrow, in sorrow who does not look for pleasure in pleasure
பால் : பொருட்பால், அதிகாரம் : 63 - இடுக்கண் அழியாமை, குறள் : 629
10  இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு
பொருள்(விளக்கம்): துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்
Transliteration: Innaamai Inpam Enakkolin AakundhanOnnaar Vizhaiyunj Chirappu
Couplet: Who pain as pleasure takes, he shall acquire
The bliss to which his foes in vain aspire
Explanation: The elevation, which even his enemies will esteem, will be gained by him, who regards pain as pleasure
பால் : பொருட்பால், அதிகாரம் : 63 - இடுக்கண் அழியாமை, குறள் : 630
Page 63 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com