
22. ஒப்புரவறிதல்
| 1 கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ உலகு |
| பொருள்(விளக்கம்): கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர் |
| Transliteration: Kaimmaaru Ventaa Katappaatu MaarimaattuEn Aatrung Kollo Ulaku |
| Couplet: Duty demands no recompense; to clouds of heaven, By men on earth, what answering gift is given |
| Explanation: Benevolence seeks not a return. What does the world give back to the clouds ? |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 22 - ஒப்புரவறிதல், குறள் : 211 |
| 2 தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு |
| பொருள்(விளக்கம்): தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும் |
| Transliteration: Thaalaatrith Thandha Porulellaam ThakkaarkkuVelaanmai Seydhar Poruttu |
| Couplet: The worthy say, when wealth rewards their toil-spent hours, For uses of beneficence alone 'tis ours |
| Explanation: All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 22 - ஒப்புரவறிதல், குறள் : 212 |
| 3 புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற |
| பொருள்(விளக்கம்): பிறர்க்கு உதவிடும் பண்பாகிய ``ஒப்புரவு'' என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது |
| Transliteration: Puththe Lulakaththum Eentum PeralaridheOppuravin Nalla Pira |
| Couplet: To 'due beneficence' no equal good we know, Amid the happy gods, or in this world below |
| Explanation: It is difficult to obtain another good equal to benevolence either in this world or in that of the gods |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 22 - ஒப்புரவறிதல், குறள் : 213 |
| 4 ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும் |
| பொருள்(விளக்கம்): ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான் |
| Transliteration: Oththa Tharavon Uyirvaazhvaan MatraiyaanSeththaarul Vaikkap Patum |
| Couplet: Who knows what's human life's befitting grace, He lives; the rest 'mongst dead men have their place |
| Explanation: He truly lives who knows (and discharges) the proper duties (of benevolence) He who knows them not will be reckoned among the dead |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 22 - ஒப்புரவறிதல், குறள் : 214 |
| 5 ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு |
| பொருள்(விளக்கம்): பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும் |
| Transliteration: Ooruni Neernirain Thatre UlakavaamPerari Vaalan Thiru |
| Couplet: The wealth of men who love the 'fitting way,' the truly wise, Is as when water fills the lake that village needs supplies |
| Explanation: The wealth of that man of eminent knowledge who desires to exercise the benevolence approved of by the world, is like the full waters of a city-tank |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 22 - ஒப்புரவறிதல், குறள் : 215 |
| 6 பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின் |
| பொருள்(விளக்கம்): ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும் |
| Transliteration: Payanmaram Ulloorp Pazhuththatraal SelvamNayanutai Yaankan Patin |
| Couplet: A tree that fruits in th' hamlet's central mart, Is wealth that falls to men of liberal heart |
| Explanation: The wealth of a man (possessed of the virtue) of benevolence is like the ripening of a fruitful tree in the midst of a town |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 22 - ஒப்புரவறிதல், குறள் : 216 |
| 7 மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின் |
| பொருள்(விளக்கம்): பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம், செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும் |
| Transliteration: Marundhaakith Thappaa Maraththatraal SelvamPerundhakai Yaankan Patin |
| Couplet: Unfailing tree that healing balm distils from every part, Is ample wealth that falls to him of large and noble heart |
| Explanation: If wealth be in the possession of a man who has the great excellence (of benevolence), it is like a tree which as a medicine is an infallible cure for disease |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 22 - ஒப்புரவறிதல், குறள் : 217 |
| 8 இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார் கடனறி காட்சி யவர் |
| பொருள்(விளக்கம்): தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர் |
| Transliteration: Itanil Paruvaththum Oppuravirku OlkaarKatanari Kaatchi Yavar |
| Couplet: E'en when resources fall, they weary not of 'kindness due,'- They to whom Duty's self appears in vision true |
| Explanation: The wise who know what is duty will not scant their benevolence even when they are without wealth |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 22 - ஒப்புரவறிதல், குறள் : 218 |
| 9 நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யா தமைகலா வாறு |
| பொருள்(விளக்கம்): பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான் |
| Transliteration: Nayanutaiyaan Nalkoorndhaa Naadhal SeyumneeraSeyyaadhu Amaikalaa Vaaru |
| Couplet: The kindly-hearted man is poor in this alone, When power of doing deeds of goodness he finds none |
| Explanation: The poverty of a benevolent man, is nothing but his inability to exercise the same |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 22 - ஒப்புரவறிதல், குறள் : 219 |
| 10 ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து |
| பொருள்(விளக்கம்): பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக் கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும் |
| Transliteration: Oppuravi Naalvarum Ketenin AqdhoruvanVitrukkol Thakka Thutaiththu |
| Couplet: Though by 'beneficence,' the loss of all should come, 'Twere meet man sold himself, and bought it with the sum |
| Explanation: If it be said that loss will result from benevolence, such loss is worth being procured even by the sale of one's self |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 22 - ஒப்புரவறிதல், குறள் : 220 |