
127. அவர்வயின்விதும்பல்
| 1 வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல் |
| பொருள்(விளக்கம்): வருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன |
| Transliteration: Vaalatrup Purkendra Kannum AvarsendraNaalotrith Theyndha Viral |
| Couplet: My eyes have lost their brightness, sight is dimmed; my fingers worn, With nothing on the wall the days since I was left forlorn |
| Explanation: My finger has worn away by marking (on the wall) the days he has been absent while my eyes have lost their lustre and begin to fail |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 127 - அவர்வயின்விதும்பல், குறள் : 1261 |
| 2 இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல் கலங்கழியும் காரிகை நீத்து |
| பொருள்(விளக்கம்): காதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரை மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகு நீங்கி மெலிந்து போய் வளையல்களும் கழன்று விழுவது உறுதியடி என் தோழி |
| Transliteration: Ilangizhaai Indru Marappinen TholmelKalangazhiyum Kaarikai Neeththu |
| Couplet: O thou with gleaming jewels decked, could I forget for this one day, Henceforth these bracelets from my arms will slip, my beauty worn away |
| Explanation: O you bright-jewelled maid, if I forget (him) today, my shoulders will lose their beauty even in the other life and make my bracelets loose |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 127 - அவர்வயின்விதும்பல், குறள் : 1262 |
| 3 உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரல்நசைஇ இன்னும் உளேன் |
| பொருள்(விளக்கம்): ஊக்கத்தையே உறுதுணையாகக் கொண்டு வெற்றியை விரும்பிச் சென்றுள்ள காதலன், திரும்பி வருவான் என்பதற்காகவே நான் உயிரோடு இருக்கிறேன் |
| Transliteration: Urannasaii Ullam Thunaiyaakach ChendraarVaralnasaii Innum Ulen |
| Couplet: On victory intent, His mind sole company he went; And I yet life sustain And long to see his face again |
| Explanation: I still live by longing for the arrival of him who has gone out of love for victory and with valour as his guide |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 127 - அவர்வயின்விதும்பல், குறள் : 1263 |
| 4 கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகொ டேறுமென் நெஞ்சு |
| பொருள்(விளக்கம்): காதல் வயப்பட்டுக் கூடியிருந்து பிரிந்து சென்றவர் எப்போது வருவார் என்று என் நெஞ்சம், மரத்தின் உச்சிக் கொம்பில் ஏறிப் பார்க்கின்றது |
| Transliteration: Kootiya Kaamam Pirindhaar VaravullikKotuko Terumen Nenju |
| Couplet: 'He comes again, who left my side, and I shall taste love's joy,'- My heart with rapture swells, when thoughts like these my mind employ |
| Explanation: My heart is rid of its sorrow and swells with rapture to think of my absent lover returning with his love |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 127 - அவர்வயின்விதும்பல், குறள் : 1264 |
| 5 காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் நீங்குமென் மென்தோள் பசப்பு |
| பொருள்(விளக்கம்): கண்ணார என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும் |
| Transliteration: Kaankaman Konkanaik Kannaarak KantapinNeengumen Mendhol Pasappu |
| Couplet: O let me see my spouse again and sate these longing eyes! That instant from my wasted frame all pallor flies |
| Explanation: May I look on my lover till I am satisfied and thereafter will vanish the sallowness of my slender shoulders |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 127 - அவர்வயின்விதும்பல், குறள் : 1265 |
| 6 வருகமன் கொண்கண் ஒருநாட் பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட |
| பொருள்(விளக்கம்): என்னை வாடவிட்டுப் பிரிந்துள்ள காதலன், ஒருநாள் வந்துதான் ஆகவேண்டும் வந்தால் என் துன்பம் முழுவதும் தீர்ந்திட அவனிடம் இன்பம் துய்ப்பேன் |
| Transliteration: Varukaman Konkan Orunaal ParukuvanPaidhalnoi Ellaam Keta |
| Couplet: O let my spouse but come again to me one day! I'll drink that nectar: wasting grief shall flee away |
| Explanation: May my husband return some day; and then will I enjoy (him) so as to destroy all this agonizing sorrow |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 127 - அவர்வயின்விதும்பல், குறள் : 1266 |
| 7 புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்ணன்ன கேளிர் வரின் |
| பொருள்(விளக்கம்): கண்ணின் மணியாம் என் காதலர் வந்தவுடன், பிரிந்திருந்த துயரின் காரணமாக அவருடன் ஊடல், கொள்வேனோ? அல்லது கட்டித் தழுவிக் கொள்வேனோ? அல்லது ஊடுதல் கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனோ? ஒன்றுமே புரியவில்லையே எனக்கு; அந்த இன்பத்தை நினைக்கும்போது |
| Transliteration: Pulappenkol Pulluven Kollo KalappenkolKananna Kelir Viran |
| Couplet: Shall I draw back, or yield myself, or shall both mingled be, When he returns, my spouse, dear as these eyes to me |
| Explanation: On the return of him who is as dear as my eyes, am I displeased or am I to embrace (him); or am I to do both? |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 127 - அவர்வயின்விதும்பல், குறள் : 1267 |
| 8 வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து |
| பொருள்(விளக்கம்): தலைவன், தான் மேற்கொண்டுள்ள செயலில் வெற்றி பெறுவானாக; அவன் வெண்றால் என் மனைவியுடன் எனக்கு மாலைப்பொழுதில் இன்ப விருந்துதான் |
| Transliteration: Vinaikalandhu Vendreeka Vendhan ManaikalandhuMaalai Ayarkam Virundhu |
| Couplet: O would my king would fight, o'ercome, devide the spoil; At home, to-night, the banquet spread should crown the toil |
| Explanation: Let the king fight and gain (victories); (but) let me be united to my wife and feast the evening |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 127 - அவர்வயின்விதும்பல், குறள் : 1268 |
| 9 ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் வருநாள்வைத் தேங்கு பவர்க்கு |
| பொருள்(விளக்கம்): நெடுந்தொலைவு சென்ற காதலர் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து ஏங்குபவர்க்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றும் |
| Transliteration: Orunaal Ezhunaalpol Sellumsen SendraarVarunaalvaiththu Engu Pavarkku |
| Couplet: One day will seem like seven to those who watch and yearn For that glad day when wanderers from afar return |
| Explanation: To those who suffer waiting for the day of return of their distant lovers one day is as long as seven days |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 127 - அவர்வயின்விதும்பல், குறள் : 1269 |
| 10 பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம் உள்ளம் உடைந்துக்கக் கால் |
| பொருள்(விளக்கம்): துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து போயிவிடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக் கூடவதினாலோ, என்ன பயன்? |
| Transliteration: Perinennaam Petrakkaal Ennaam UrinennaamUllam Utaindhukkak Kaal |
| Couplet: What's my return, the meeting hour, the wished-for greeting worth, If she heart-broken lie, with all her life poured forth |
| Explanation: After (my wife) has died of a broken heart, what good will there be if she is to receive me, has received me, or has even embraced me? |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 127 - அவர்வயின்விதும்பல், குறள் : 1270 |