
122. கனவுநிலையுரைத்தல்
| 1 காதலர் தூதொடு வந்த கனவினுக் கியாதுசெய் வேன்கொல் விருந்து |
| பொருள்(விளக்கம்): வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது? |
| Transliteration: Kaadhalar Thoodhotu Vandha KanavinukkuYaadhusey Venkol Virundhu |
| Couplet: It came and brought to me, that nightly vision rare, A message from my love,- what feast shall I prepare |
| Explanation: Where with shall I feast the dream which has brought me my dear one's messenger ? |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 122 - கனவுநிலையுரைத்தல், குறள் : 1211 |
| 2 கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க் குயலுண்மை சாற்றுவேன் மன் |
| பொருள்(விளக்கம்): நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன் |
| Transliteration: Kayalunkan Yaanirappath Thunjir KalandhaarkkuUyalunmai Saatruven Man |
| Couplet: If my dark, carp-like eye will close in sleep, as I implore, The tale of my long-suffering life I'll tell my loved one o'er |
| Explanation: If my fish-like painted eyes should, at my begging, close in sleep, I could fully relate my sufferings to my lord |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 122 - கனவுநிலையுரைத்தல், குறள் : 1212 |
| 3 நனவினான் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர் |
| பொருள்(விளக்கம்): நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது |
| Transliteration: Nanavinaal Nalkaa Thavaraik KanavinaalKaantalin Unten Uyir |
| Couplet: Him, who in waking hour no kindness shows, In dreams I see; and so my lifetime goes |
| Explanation: My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 122 - கனவுநிலையுரைத்தல், குறள் : 1213 |
| 4 கனவினான் உண்டாகும் காமம் நனவினான் நல்காரை நாடித் தரற்கு |
| பொருள்(விளக்கம்): நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது |
| Transliteration: Kanavinaan Untaakum Kaamam NanavinaanNalkaarai Naatith Thararku |
| Couplet: Some pleasure I enjoy when him who loves not me In waking hours, the vision searches out and makes me see |
| Explanation: There is pleasure in my dream, because in it I seek and obtain him who does not visit me in my wakefulness |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 122 - கனவுநிலையுரைத்தல், குறள் : 1214 |
| 5 நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் கண்ட பொழுதே இனிது |
| பொருள்(விளக்கம்): காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது! |
| Transliteration: Nanavinaal Kantadhooum Aange KanavundhaanKanta Pozhudhe Inidhu |
| Couplet: As what I then beheld in waking hour was sweet, So pleasant dreams in hour of sleep my spirit greet |
| Explanation: I saw him in my waking hours, and then it was pleasant; I see him just now in my dream, and it is (equally) pleasant |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 122 - கனவுநிலையுரைத்தல், குறள் : 1215 |
| 6 நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற் காதலர் நீங்கலர் மன் |
| பொருள்(விளக்கம்): நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே |
| Transliteration: Nanavena Ondrillai Aayin KanavinaalKaadhalar Neengalar Man |
| Couplet: And if there were no waking hour, my love In dreams would never from my side remove |
| Explanation: Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 122 - கனவுநிலையுரைத்தல், குறள் : 1216 |
| 7 நனவினான் நல்காக் கொடியார் கனவினான் என்னெம்மைப் பீழிப் பது |
| பொருள்(விளக்கம்): நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்? |
| Transliteration: Nanavinaal Nalkaak Kotiyaar KanavanaalEnemmaip Peezhip Padhu |
| Couplet: The cruel one, in waking hour, who all ungracious seems, Why should he thus torment my soul in nightly dreams |
| Explanation: The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams? |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 122 - கனவுநிலையுரைத்தல், குறள் : 1217 |
| 8 துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்தார் ஆவர் விரைந்து |
| பொருள்(விளக்கம்): தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார் |
| Transliteration: Thunjungaal Tholmelar Aaki VizhikkungaalNenjaththar Aavar Viraindhu |
| Couplet: And when I sleep he holds my form embraced; And when I wake to fill my heart makes haste |
| Explanation: When I am asleep he rests on my shoulders, (but) when I awake he hastens into my soul |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 122 - கனவுநிலையுரைத்தல், குறள் : 1218 |
| 9 நனவினான் நல்காரை நோவர் கனவினான் காதலர்க் காணா தவர் |
| பொருள்(விளக்கம்): கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர் |
| Transliteration: Nanavinaal Nalkaarai Novar KanavinaalKaadhalark Kaanaa Thavar |
| Couplet: In dreams who ne'er their lover's form perceive, For those in waking hours who show no love will grieve |
| Explanation: They who have no dear ones to behold in their dreams blame him who visits me not in my waking hours |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 122 - கனவுநிலையுரைத்தல், குறள் : 1219 |
| 10 நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான் காணார்கொல் இவ்வூ ரவர் |
| பொருள்(விளக்கம்): என் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற தமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ? |
| Transliteration: Nanavinaal Namneeththaar Enpar KanavinaalKaanaarkol Ivvoo Ravar |
| Couplet: They say, that he in waking hours has left me lone; In dreams they surely see him not,- these people of the town; |
| Explanation: The women of this place say he has forsaken me in my wakefulness I think they have not seen him visit me in my dreams |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 122 - கனவுநிலையுரைத்தல், குறள் : 1220 |