
80. நட்பாராய்தல்
| 1 நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு |
| பொருள்(விளக்கம்): ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும் |
| Transliteration: Naataadhu Nattalir Ketillai NattapinVeetillai Natpaal Pavarkku |
| Couplet: To make an untried man your friend is ruin sure; For friendship formed unbroken must endure |
| Explanation: As those who are of a friendly nature will not forsake (a friend) after once loving (him), there is no evil so great as contracting a friendship without due inquiry |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 80 - நட்பாராய்தல், குறள் : 791 |
| 2 ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும் |
| பொருள்(விளக்கம்): திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும் |
| Transliteration: Aaindhaaindhu Kollaadhaan Kenmai KataimuraiThaansaam Thuyaram Tharum |
| Couplet: Alliance with the man you have not proved and proved again, In length of days will give you mortal pain |
| Explanation: The friendship contracted by him who has not made repeated inquiry will in the end grieve (him) to death |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 80 - நட்பாராய்தல், குறள் : 792 |
| 3 குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்தியாக்க நட்பு |
| பொருள்(விளக்கம்): குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும் |
| Transliteration: Kunamum Kutimaiyum Kutramum KundraaInanum Arindhiyaakka Natpu |
| Couplet: Temper, descent, defects, associations free From blame: know these, then let the man be friend to thee |
| Explanation: Make friendship (with one) after ascertaining (his) character, birth, defects and the whole of one's relations |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 80 - நட்பாராய்தல், குறள் : 793 |
| 4 குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு |
| பொருள்(விளக்கம்): பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும் |
| Transliteration: Kutippirandhu Thankan Pazhinaanu VaanaikKotuththum Kolalventum Natpu |
| Couplet: Who, born of noble race, from guilt would shrink with shame, Pay any price so you as friend that man may claim |
| Explanation: The friendship of one who belongs to a (good) family and is afraid of (being charged with) guilt, is worth even purchasing |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 80 - நட்பாராய்தல், குறள் : 794 |
| 5 அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறிய வல்லார்நட் பாய்ந்து கொளல் |
| பொருள்(விளக்கம்): தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரை வழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும் |
| Transliteration: Azhachcholli Alladhu Itiththu VazhakkariyaVallaarnatapu Aaindhu Kolal |
| Couplet: Make them your chosen friend whose words repentance move, With power prescription's path to show, while evil they reprove |
| Explanation: You should examine and secure the friendship of those who can speak so as to make you weep over a crime (before its commission) or rebuke you severely (after you have done it) and are able to teach |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 80 - நட்பாராய்தல், குறள் : 795 |
| 6 கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல் |
| பொருள்(விளக்கம்): தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது |
| Transliteration: Kettinum Untor Urudhi KilaignaraiNeetti Alappadhor Kol |
| Couplet: Ruin itself one blessing lends: 'Tis staff that measures out one's friends |
| Explanation: Even in ruin there is some good; (for) it is a rod by which one may measure fully (the affection of one's) relations |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 80 - நட்பாராய்தல், குறள் : 796 |
| 7 ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல் |
| பொருள்(விளக்கம்): ஒருவருக்குக் கிடைத்த நற்பயன் என்பது அவர் அறிவில்லாத ஒருவருடன் கொண்டிருந்த நட்பைத் துறந்து விடுவதேயாகும் |
| Transliteration: Oodhiyam Enpadhu Oruvarkup PedhaiyaarKenmai Oreei Vital |
| Couplet: 'Tis gain to any man, the sages say, Friendship of fools to put away |
| Explanation: It is indead a gain for one to renounce the friendship of fools |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 80 - நட்பாராய்தல், குறள் : 797 |
| 8 உள்ளற்க உள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு |
| பொருள்(விளக்கம்): ஊக்கத்தைச் சிதைக்கக்கூடிய செயல்களையும், துன்பம் வரும்போது விலகிவிடக்கூடிய நண்பர்களையும் நினைத்துப் பார்ககாமலே இருந்து விட வேண்டும் |
| Transliteration: Ullarka Ullam Sirukuva KollarkaAllarkan Aatraruppaar Natpu |
| Couplet: Think not the thoughts that dwarf the soul; nor take For friends the men who friends in time of grief forsake |
| Explanation: Do not think of things that discourage your mind, nor contract friendship with those who would forsake you in adversity |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 80 - நட்பாராய்தல், குறள் : 798 |
| 9 கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளஞ் சுடும் |
| பொருள்(விளக்கம்): ஒருவர் கொலைக்கு ஆளாகும் போது கூட, தனக்குக் கேடு வந்த நேரம் கைவிட்டு ஒதுங்கி ஓடிவிட்ட நண்பர்களை நினைத்து விட்டால் அந்த நினைப்பு அவரது நெஞ்சத்தைச் சுட்டுப் பொசுக்கும் |
| Transliteration: Ketungaalaik Kaivituvaar Kenmai AtungaalaiUllinum Ullanj Chutum |
| Couplet: Of friends deserting us on ruin's brink, 'Tis torture e'en in life's last hour to think |
| Explanation: The very thought of the friendship of those who have deserted one at the approach of adversity will burn one's mind at the time of death |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 80 - நட்பாராய்தல், குறள் : 799 |
| 10 மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்தும ஒருவுக ஒப்பிலார் நட்பு |
| பொருள்(விளக்கம்): மனத்தில் மாசு இல்லாதவர்களையே நண்பர்களாகப் பெற வேண்டும் மாசு உள்ளவர்களின் நட்பை, விலை கொடுத்தாவது விலக்கிட வேண்டும் |
| Transliteration: Maruvuka Maasatraar Kenmaion ReeththumOruvuka Oppilaar Natpu |
| Couplet: Cling to the friendship of the spotless one's; whate'er you pay Renounce alliance with the men of evil way |
| Explanation: Continue to enjoy the friendship of the pure; (but) renounce even with a gift, the friendship of those who do not agree (with the world) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 80 - நட்பாராய்தல், குறள் : 800 |