srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


அறத்துப்பால்

11. செய்நன்றியறிதல்

1  செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது
பொருள்(விளக்கம்): ``வாராது வந்த மாமணி'' என்பதுபோல், ``செய்யாமற் செய்த உதவி'' என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா
Transliteration: Seyyaamal Seydha Udhavikku VaiyakamumVaanakamum Aatral Aridhu
Couplet: Assistance given by those who ne'er received our aid,
Is debt by gift of heaven and earth but poorly paid
Explanation: (The gift of) heaven and earth is not an equivalent for a benefit which is conferred where none had been received
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 11 - செய்நன்றியறிதல், குறள் : 101
2  காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
பொருள்(விளக்கம்): தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்
Transliteration: Kaalaththi Naarseydha Nandri SiridheninumGnaalaththin Maanap Peridhu
Couplet: A timely benefit, -though thing of little worth,
The gift itself, -in excellence transcends the earth
Explanation: A favour conferred in the time of need, though it be small (in itself), is (in value) much larger than the world
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 11 - செய்நன்றியறிதல், குறள் : 102
3  பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது
பொருள்(விளக்கம்): என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது
Transliteration: Payandhookkaar Seydha Udhavi NayandhookkinNanmai Katalin Peridhu
Couplet: Kindness shown by those who weigh not what the return may be:
When you ponder right its merit, 'Tis vaster than the sea
Explanation: If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 11 - செய்நன்றியறிதல், குறள் : 103
4  தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்
பொருள்(விளக்கம்): ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்
Transliteration: Thinaiththunai Nandri Seyinum PanaiththunaiyaakKolvar Payandheri Vaar
Couplet: Each benefit to those of actions' fruit who rightly deem,
Though small as millet-seed, as palm-tree vast will seem
Explanation: Though the benefit conferred be as small as a millet seed, those who know its advantage will consider it as large as a palmyra fruit
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 11 - செய்நன்றியறிதல், குறள் : 104
5  உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து
பொருள்(விளக்கம்): உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்
Transliteration: Udhavi Varaiththandru Udhavi UdhaviSeyappattaar Saalpin Varaiththu
Couplet: The kindly aid's extent is of its worth no measure true;
Its worth is as the worth of him to whom the act you do
Explanation: The benefit itself is not the measure of the benefit; the worth of those who have received it is its measure
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 11 - செய்நன்றியறிதல், குறள் : 105
6  மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு
பொருள்(விளக்கம்): மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது
Transliteration: Maravarka Maasatraar Kenmai ThuravarkaThunpaththul Thuppaayaar Natpu
Couplet: Kindness of men of stainless soul remember evermore
Forsake thou never friends who were thy stay in sorrow sore
Explanation: Forsake not the friendship of those who have been your staff in adversity Forget not be benevolence of the blameless
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 11 - செய்நன்றியறிதல், குறள் : 106
7  எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு
பொருள்(விளக்கம்): ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது
Transliteration: Ezhumai Ezhupirappum Ulluvar ThanganVizhuman Thutaiththavar Natpu
Couplet: Through all seven worlds, in seven-fold birth, Remains in mem'ry of the wise
Friendship of those who wiped on earth, The tears of sorrow from their eyes
Explanation: (The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their affliction
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 11 - செய்நன்றியறிதல், குறள் : 107
8  நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
பொருள்(விளக்கம்): ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது
Transliteration: Nandri Marappadhu Nandrandru NandralladhuAndre Marappadhu Nandru
Couplet: 'Tis never good to let the thought of good things done thee pass away;
Of things not good, 'tis good to rid thy memory that very day
Explanation: It is not good to forget a benefit; it is good to forget an injury even in the very moment (in which it is inflicted)
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 11 - செய்நன்றியறிதல், குறள் : 108
9  கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்
பொருள்(விளக்கம்): ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது
Transliteration: Kondranna Innaa Seyinum AvarseydhaOndrunandru Ullak Ketum
Couplet: Effaced straightway is deadliest injury,
By thought of one kind act in days gone by
Explanation: Though one inflict an injury great as murder, it will perish before the thought of one benefit (formerly) conferred
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 11 - செய்நன்றியறிதல், குறள் : 109
10  எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
பொருள்(விளக்கம்): எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை
Transliteration: Ennandri Kondraarkkum Uyvuntaam UyvillaiSeynnandri Kondra Makarku
Couplet: Who every good have killed, may yet destruction flee;
Who 'benefit' has killed, that man shall ne'er 'scape free
Explanation: He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 11 - செய்நன்றியறிதல், குறள் : 110
Page 11 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com