
131. புலவி
| 1 புல்லா திராஅப் புலத்தை அவருறும் அல்லல்நோய் காண்கம் சிறிது |
| பொருள்(விளக்கம்): ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக |
| Transliteration: Pullaa Thiraaap Pulaththai Avar UrumAllalnoi Kaankam Siridhu |
| Couplet: Be still reserved, decline his profferred love; A little while his sore distress we 'll prove |
| Explanation: Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 131 - புலவி, குறள் : 1301 |
| 2 உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல் |
| பொருள்(விளக்கம்): ஊடலுக்கும் கூடலுக்கும் இடையில் உள்ள காலம் உணவில் இடும் உப்பு போல் ஓரளவுடன் இருக்க வேண்டும் அந்தக் கால அளவு நீடித்தால் உணவில் உப்பு மிகுதியானதற்கு ஒப்பாக ஆகிவிடும் |
| Transliteration: Uppamain Thatraal Pulavi AdhusiridhuMikkatraal Neela Vital |
| Couplet: A cool reserve is like the salt that seasons well the mess, Too long maintained, 'tis like the salt's excess |
| Explanation: A little dislike is like salt in proportion; to prolong it a little is like salt a little too much |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 131 - புலவி, குறள் : 1302 |
| 3 அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல் |
| பொருள்(விளக்கம்): ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது, ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பநோய்க்கு ஆளாக்கி வருத்துவதாகும் |
| Transliteration: Alandhaarai Allalnoi Seydhatraal ThammaipPulandhaaraip Pullaa Vital |
| Couplet: 'Tis heaping griefs on those whose hearts are grieved; To leave the grieving one without a fond embrace |
| Explanation: For men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 131 - புலவி, குறள் : 1303 |
| 4 ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று |
| பொருள்(விளக்கம்): ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும் |
| Transliteration: Ooti Yavarai Unaraamai VaatiyaValli Mudhalarin Thatru |
| Couplet: To use no kind conciliating art when lover grieves, Is cutting out the root of tender winding plant that droops |
| Explanation: Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 131 - புலவி, குறள் : 1304 |
| 5 நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை பூவன்ன கண்ணார் அகத்து |
| பொருள்(விளக்கம்): மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும் |
| Transliteration: Nalaththakai Nallavarkku Eer PulaththakaiPooanna Kannaar Akaththu |
| Couplet: Even to men of good and worthy mind, the petulance Of wives with flowery eyes lacks not a lovely grace |
| Explanation: An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 131 - புலவி, குறள் : 1305 |
| 6 துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று |
| பொருள்(விளக்கம்): பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும் |
| Transliteration: Thuniyum Pulaviyum Illaayin KaamamKaniyum Karukkaayum Atru |
| Couplet: Love without hatred is ripened fruit; Without some lesser strife, fruit immature |
| Explanation: Sexual pleasure, without prolonged and short-lived dislike, is like too ripe, and unripe fruit |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 131 - புலவி, குறள் : 1306 |
| 7 ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொல் என்று |
| பொருள்(விளக்கம்): கூடி மயங்கிக் களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்து விடுமோ என எண்ணுவதால் ஊடலிலும் ஒருவகைத் துன்பம் காதலர்க்கு உண்டு |
| Transliteration: Ootalin Untaangor Thunpam PunarvadhuNeetuva Thandru Kol Endru |
| Couplet: A lovers' quarrel brings its pain, when mind afraid Asks doubtful, 'Will reunion sweet be long delayed?' |
| Explanation: The doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 131 - புலவி, குறள் : 1307 |
| 8 நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும் காதலர் இல்லா வழி |
| பொருள்(விளக்கம்): நம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர் இல்லாத போது வருந்துவதால் என்ன பயன்? |
| Transliteration: Nodhal Evanmatru Nondhaarendru AqdhariyumKaadhalar Illaa Vazhi |
| Couplet: What good can grieving do, when none who love Are there to know the grief thy soul endures |
| Explanation: What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow? |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 131 - புலவி, குறள் : 1308 |
| 9 நீரும் நிழல தினிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது |
| பொருள்(விளக்கம்): நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்; அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும் |
| Transliteration: Neerum Nizhaladhu Inidhe PulaviyumVeezhunar Kanne Inidhu |
| Couplet: Water is pleasant in the cooling shade; So coolness for a time with those we love |
| Explanation: Like water in the shade, dislike is delicious only in those who love |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 131 - புலவி, குறள் : 1309 |
| 10 ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம் கூடுவேம் என்ப தவா |
| பொருள்(விளக்கம்): ஊடலைத் தணிக்காமல் வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத ஆசையே காரணம் |
| Transliteration: Ootal Unanga Vituvaarotu EnnenjamKootuvem Enpadhu Avaa |
| Couplet: Of her who leaves me thus in variance languishing, To think within my heart with love is fond desire |
| Explanation: It is nothing but strong desire that makes her mind unite with me who can leave her to her own dislike |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 131 - புலவி, குறள் : 1310 |