srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


பொருட்பால்

50. இடனறிதல்

1  தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது
பொருள்(விளக்கம்): ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்
Transliteration: Thotangarka Evvinaiyum Ellarka MutrumItanganta Pinal Ladhu
Couplet: Begin no work of war, depise no foe,
Till place where you can wholly circumvent you know
Explanation: Let not (a king) despise (an enemy), nor undertake any thing (against him), until he has obtained (a suitable) place for besieging him
பால் : பொருட்பால், அதிகாரம் : 50 - இடனறிதல், குறள் : 491
2  முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்
பொருள்(விளக்கம்): வரும்பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும்
Transliteration: Muranserndha Moimpi Navarkkum AranserndhaamAakkam Palavun Tharum
Couplet: Though skill in war combine with courage tried on battle-field,
The added gain of fort doth great advantage yield
Explanation: Even to those who are men of power and expedients, an attack in connection with a fortification will yield many advantages
பால் : பொருட்பால், அதிகாரம் : 50 - இடனறிதல், குறள் : 492
3  ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்
பொருள்(விளக்கம்): தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும் காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றி கிட்டும்
Transliteration: Aatraarum Aatri Atupa ItanarindhuPotraarkan Potrich Cheyin
Couplet: E'en weak ones mightily prevail, if place of strong defence,
They find, protect themselves, and work their foes offence
Explanation: Even the powerless will become powerful and conquer, if they select a proper field (of action), and guard themselves, while they make war on their enemies
பால் : பொருட்பால், அதிகாரம் : 50 - இடனறிதல், குறள் : 493
4  எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்
பொருள்(விளக்கம்): ஏற்ற இடமறிந்து தொடர்ந்து தாக்கினால் பகைவர்கள், வெற்றி என்பதை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள்
Transliteration: Enniyaar Ennam Izhappar ItanarindhuThunniyaar Thunnich Cheyin
Couplet: The foes who thought to triumph, find their thoughts were vain,
If hosts advance, seize vantage ground, and thence the fight maintain
Explanation: If they who draw near (to fight) choose a suitable place to approach (their enemy), the latter, will have to relinquish the thought which they once entertained, of conquering them
பால் : பொருட்பால், அதிகாரம் : 50 - இடனறிதல், குறள் : 494
5  நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற
பொருள்(விளக்கம்): தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்; தண்ணீரைவிட்டு வெளியே வந்து விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும்
Transliteration: Netumpunalul Vellum Mudhalai AtumpunalinNeengin Adhanaip Pira
Couplet: The crocodile prevails in its own flow of water wide,
If this it leaves, 'tis slain by anything beside
Explanation: In deep water, a crocodile will conquer (all other animals); but if it leave the water, other animals will conquer it
பால் : பொருட்பால், அதிகாரம் : 50 - இடனறிதல், குறள் : 495
6  கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து
பொருள்(விளக்கம்): ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் `தேர் கடலிலே ஓடாது' `கப்பல் நிலத்தில் போகாது' என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும்
Transliteration: Katalotaa Kaalval Netundher KatalotumNaavaayum Otaa Nilaththu
Couplet: The lofty car, with mighty wheel, sails not o'er watery main,
The boat that skims the sea, runs not on earth's hard plain
Explanation: Wide chariots, with mighty wheels, will not run on the ocean; neither will ships that the traverse ocean, move on the earth
பால் : பொருட்பால், அதிகாரம் : 50 - இடனறிதல், குறள் : 496
7  அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி யிடத்தாற் செயின்
பொருள்(விளக்கம்): ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை
Transliteration: Anjaamai Allaal Thunaiventaa EnjaamaiEnni Itaththaal Seyin
Couplet: Save their own fearless might they need no other aid,
If in right place they fight, all due provision made
Explanation: You will need no other aid than fearlessness, if you thoroughly reflect (on what you are to do), and select (a suitable) place for your operations
பால் : பொருட்பால், அதிகாரம் : 50 - இடனறிதல், குறள் : 497
8  சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்
பொருள்(விளக்கம்): சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும்
Transliteration: Sirupataiyaan Sellitam Serin UrupataiyaanOokkam Azhindhu Vitum
Couplet: If lord of army vast the safe retreat assail
Of him whose host is small, his mightiest efforts fail
Explanation: The power of one who has a large army will perish, if he goes into ground where only a small army can act
பால் : பொருட்பால், அதிகாரம் : 50 - இடனறிதல், குறள் : 498
9  சிறைநலனுஞ் சீறும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோ டொட்ட லரிது
பொருள்(விளக்கம்): பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல
Transliteration: Sirainalanum Seerum Ilareninum MaandharUrainilaththotu Ottal Aridhu
Couplet: Though fort be none, and store of wealth they lack,
'Tis hard a people's homesteads to attack
Explanation: It is a hazardous thing to attack men in their own country, although they may neither have power nor a good fortress
பால் : பொருட்பால், அதிகாரம் : 50 - இடனறிதல், குறள் : 499
10  காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு
பொருள்(விளக்கம்): வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும்
Transliteration: Kaalaazh Kalaril Nariyatum KannanjaaVelaal Mukaththa Kaliru
Couplet: The jackal slays, in miry paths of foot-betraying fen,
The elephant of fearless eye and tusks transfixing armed men
Explanation: A fox can kill a fearless, warrior-faced elephant, if it go into mud in which its legs sink down
பால் : பொருட்பால், அதிகாரம் : 50 - இடனறிதல், குறள் : 500
Page 50 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com