
89. உட்பகை
| 1 நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின் |
| பொருள்(விளக்கம்): இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும் அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும் |
| Transliteration: Nizhalneerum Innaadha Innaa ThamarneerumInnaavaam Innaa Seyin |
| Couplet: Water and shade, if they unwholesome prove, will bring you pain And qualities of friends who treacherous act, will be your bane |
| Explanation: Shade and water are not pleasant, (if) they cause disease; so are the qualities of (one's) relations not agreeable, (if) they cause pain |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 89 - உட்பகை, குறள் : 881 |
| 2 வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு |
| பொருள்(விளக்கம்): வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் |
| Transliteration: Vaalpola Pakaivarai Anjarka AnjukaKelpol Pakaivar Thotarpu |
| Couplet: Dread not the foes that as drawn swords appear; Friendship of foes, who seem like kinsmen, fear |
| Explanation: Fear not foes (who say they would cut) like a sword; (but) fear the friendship of foes (who seemingly |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 89 - உட்பகை, குறள் : 882 |
| 3 உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும் |
| பொருள்(விளக்கம்): உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் ஒரு சோதனையான நேரத்தில் பச்சை பாண்டத்தை அறுக்கும் கருவிபோல அந்த உட்பகை அழிவு செய்துவிடும் |
| Transliteration: Utpakai Anjiththar Kaakka UlaivitaththuMatpakaiyin Maanath Therum |
| Couplet: Of hidden hate beware, and guard thy life; In troublous time 'twill deeper wound than potter's knife |
| Explanation: Fear internal enmity and guard yourself; (if not) it will destroy (you) in an evil hour, as surely as the tool which cuts the potter's clay |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 89 - உட்பகை, குறள் : 883 |
| 4 மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா ஏதம் பலவும் தரும் |
| பொருள்(விளக்கம்): மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும் |
| Transliteration: Manamaanaa Utpakai Thondrin InamaanaaEdham Palavum Tharum |
| Couplet: If secret enmities arise that minds pervert, Then even kin unkind will work thee grievous hurt |
| Explanation: The secret enmity of a person whose mind in unreformed will lead to many evils causing disaffection among (one's) relations |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 89 - உட்பகை, குறள் : 884 |
| 5 உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் ஏதம் பலவும் தரும் |
| பொருள்(விளக்கம்): நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகையானது அவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்கும் |
| Transliteration: Uralmuraiyaan Utpakai Thondrin IralmuraiyaanEdham Palavum Tharum |
| Couplet: Amid one's relatives if hidden hath arise, 'Twill hurt inflict in deadly wise |
| Explanation: If there appears internal hatred in a (king's) family; it will lead to many a fatal crime |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 89 - உட்பகை, குறள் : 885 |
| 6 ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது |
| பொருள்(விளக்கம்): ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும் |
| Transliteration: Ondraamai Ondriyaar Katpatin EgngnaandrumPondraamai Ondral Aridhu |
| Couplet: If discord finds a place midst those who dwelt at one before, 'Tis ever hard to keep destruction from the door |
| Explanation: If hatred arises among (one's) own people, it will be hardly possible (for one) to escape death |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 89 - உட்பகை, குறள் : 886 |
| 7 செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி |
| பொருள்(விளக்கம்): செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல வெளித்தோற்றத்துக்கு மட்டுமே தெரியும் அவ்வாறே உட்பகையுள்ளவர்கள் உளமாரப் பொருந்தியிருக்க மாட்டார்கள் |
| Transliteration: Seppin Punarchchipol Kootinum KootaadheUtpakai Utra Kuti |
| Couplet: As casket with its cover, though in one they live alway, No union to the house where hate concealed hath sway |
| Explanation: Never indeed will a family subject to internal hatred unite (really) though it may present an apparent union like that of a casket and its lid |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 89 - உட்பகை, குறள் : 887 |
| 8 அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொரு துட்பகை உற்ற குடி |
| பொருள்(விளக்கம்): அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும் குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும் |
| Transliteration: Aramporudha Ponpolath Theyum UramporudhuUtpakai Utra Kuti |
| Couplet: As gold with which the file contends is worn away, So strength of house declines where hate concealed hath sway |
| Explanation: A family subject to internal hatred will wear out and lose its strength like iron that has been filed away |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 89 - உட்பகை, குறள் : 888 |
| 9 எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாங் கேடு |
| பொருள்(விளக்கம்): எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால் பெருங்கேடு விளையும் |
| Transliteration: Etpaka Vanna Sirumaiththe AayinumUtpakai Ulladhaang Ketu |
| Couplet: Though slight as shred of 'seasame' seed it be, Destruction lurks in hidden enmity |
| Explanation: Although internal hatred be as small as the fragment of the sesamum (seed), still does destruction dwell in it |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 89 - உட்பகை, குறள் : 889 |
| 10 உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போ டுடனுறைந் தற்று |
| பொருள்(விளக்கம்): உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும் |
| Transliteration: Utampaatu Ilaadhavar Vaazhkkai KutangarulPaampotu Utanurain Thatru |
| Couplet: Domestic life with those who don't agree, Is dwelling in a shed with snake for company |
| Explanation: Living with those who do not agree (with one) is like dwelling with a cobra (in the same) hut |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 89 - உட்பகை, குறள் : 890 |