
47. தெரிந்து செயல்வகை
| 1 வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு |
| பொருள்(விளக்கம்): முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும் |
| Transliteration: Vakaiyarach Choozhaa Thezhudhal PakaivaraipPaaththip Patuppadho Raaru |
| Couplet: With plans not well matured to rise against your foe, Is way to plant him out where he is sure to grow |
| Explanation: One way to promote the prosperity of an enemy, is (for a king) to set out (to war) without having thoroughly weighed his ability (to cope with its chances) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 47 - தெரிந்து செயல்வகை, குறள் : 461 |
| 2 செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க செய்யாமை யானுங் கெடும் |
| பொருள்(விளக்கம்): செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும் |
| Transliteration: Seydhakka Alla Seyak Ketum SeydhakkaSeyyaamai Yaanung Ketum |
| Couplet: 'Tis ruin if man do an unbefitting thing; Fit things to leave undone will equal ruin bring |
| Explanation: 58 He will perish who does not what is not fit to do; and he also will perish who does not do what it is fit to |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 47 - தெரிந்து செயல்வகை, குறள் : 462 |
| 3 எண்ணித் துணிக கருமந் துணிந்தபின் எண்ணுவ மென்ப திழுக்கு |
| பொருள்(விளக்கம்): நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு |
| Transliteration: Ennith Thunika Karumam ThunindhapinEnnuvam Enpadhu Izhukku |
| Couplet: Think, and then dare the deed! Who cry, 'Deed dared, we'll think,' disgraced shall be |
| Explanation: Consider, and then undertake a matter; after having undertaken it, to say 'We will consider,' is folly |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 47 - தெரிந்து செயல்வகை, குறள் : 463 |
| 4 ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும் |
| பொருள்(விளக்கம்): எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும் |
| Transliteration: Aatrin Varundhaa Varuththam PalarnindruPotrinum Poththup Patum |
| Couplet: On no right system if man toil and strive, Though many men assist, no work can thrive |
| Explanation: The work, which is not done by suitable methods, will fail though many stand to uphold it |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 47 - தெரிந்து செயல்வகை, குறள் : 464 |
| 5 நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர் பண்பறிந் தாற்றாக் கடை |
| பொருள்(விளக்கம்): ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும் |
| Transliteration: Nandraatra Lullun Thavuruntu AvaravarPanparin Thaatraak Katai |
| Couplet: Though well the work be done, yet one mistake is made, To habitudes of various men when no regard is paid |
| Explanation: There are failures even in acting well, when it is done without knowing the various dispositions of men |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 47 - தெரிந்து செயல்வகை, குறள் : 465 |
| 6 எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு கொள்ளாத கொள்ளா துலகு |
| பொருள்(விளக்கம்): தம்முடைய நிலைமைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்டமாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திடல் வேண்டும் |
| Transliteration: Ellaadha Ennich Cheyalventum ThammotuKollaadha Kollaadhu Ulaku |
| Couplet: Plan and perform no work that others may despise; What misbeseems a king the world will not approve as wise |
| Explanation: Let a man reflect, and do things which bring no reproach; the world will not approve, with him, of things which do not become of his position to adopt |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 47 - தெரிந்து செயல்வகை, குறள் : 466 |
| 7 அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமுஞ் சூழ்ந்து செயல் |
| பொருள்(விளக்கம்): எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும் |
| Transliteration: Azhivadhooum Aavadhooum Aaki VazhipayakkumOodhiyamum Soozhndhu Seyal |
| Couplet: Expenditure, return, and profit of the deed In time to come; weigh these- than to the act proceed |
| Explanation: Let a man reflect on what will be lost, what will be acquired and (from these) what will be his ultimate gain, and (then, let him) act |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 47 - தெரிந்து செயல்வகை, குறள் : 467 |
| 8 தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க் கரும்பொருள் யாதொன்று மில் |
| பொருள்(விளக்கம்): தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன், சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை |
| Transliteration: Therindha Inaththotu Therndhennich CheyvaarkkuArumporul Yaadhondrum Il |
| Couplet: With chosen friends deliberate; next use the private thought; Then act By those who thus proceed all works with ease are wrought |
| Explanation: There is nothing too difficult to (be attained by) those who, before they act, reflect well themselves, and thoroughly consider (the matter) with chosen friends |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 47 - தெரிந்து செயல்வகை, குறள் : 468 |
| 9 ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை ஊக்கா ரறிவுடை யார் |
| பொருள்(விளக்கம்): பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள் |
| Transliteration: Aakkam Karudhi Mudhalizhakkum SeyvinaiOokkaar Arivutai Yaar |
| Couplet: To risk one's all and lose, aiming at added gain, Is rash affair, from which the wise abstain |
| Explanation: Wise men will not, in the hopes of profit, undertake works that will consume their principal |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 47 - தெரிந்து செயல்வகை, குறள் : 469 |
| 10 தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பா டஞ்சு பவர் |
| பொருள்(விளக்கம்): களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள் |
| Transliteration: Thelivi Ladhanaith Thotangaar IlivennumEdhappaatu Anju Pavar |
| Couplet: A work of which the issue is not clear, Begin not they reproachful scorn who fear |
| Explanation: Those who fear reproach will not commence anything which has not been (thoroughly considered) and made clear to them |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 47 - தெரிந்து செயல்வகை, குறள் : 470 |