srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


பொருட்பால்

66. வினைத்தூய்மை

1  துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்
பொருள்(விளக்கம்): ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்; அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும்
Transliteration: Thunainalam Aakkam Tharuum VinainalamVentiya Ellaan Tharum
Couplet: The good external help confers is worldly gain;
By action good men every needed gift obtain
Explanation: The efficacy of support will yield (only) wealth; (but) the efficacy of action will yield all that is desired
பால் : பொருட்பால், அதிகாரம் : 66 - வினைத்தூய்மை, குறள் : 651
2  என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை
பொருள்(விளக்கம்): புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்
Transliteration: Endrum Oruvudhal Ventum PukazhotuNandri Payavaa Vinai
Couplet: From action evermore thyself restrain
Of glory and of good that yields no gain
Explanation: Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future)
பால் : பொருட்பால், அதிகாரம் : 66 - வினைத்தூய்மை, குறள் : 652
3  ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை
ஆஅது மென்னு மவர்
பொருள்(விளக்கம்): மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்
Transliteration: Oodhal Ventum Olimaazhkum SeyvinaiAaadhum Ennu Mavar
Couplet: Who tell themselves that nobler things shall yet be won
All deeds that dim the light of glory must they shun
Explanation: Those who say, 'we will become (better)' should avoid the performance of acts that would destroy (their fame)
பால் : பொருட்பால், அதிகாரம் : 66 - வினைத்தூய்மை, குறள் : 653
4  இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்
பொருள்(விளக்கம்): தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்
Transliteration: Itukkan Patinum Ilivandha SeyyaarNatukkatra Kaatchi Yavar
Couplet: Though troubles press, no shameful deed they do,
Whose eyes the ever-during vision view
Explanation: Those who have infallible judgement though threatened with peril will not do acts which have brought disgrace (on former ministers)
பால் : பொருட்பால், அதிகாரம் : 66 - வினைத்தூய்மை, குறள் : 654
5  எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று
பொருள்(விளக்கம்): `என்ன தவறு செய்துவிட்டோம்' என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று
Transliteration: Etrendru Iranguva Seyyarka SeyvaanelMatranna Seyyaamai Nandru
Couplet: Do nought that soul repenting must deplore,
If thou hast sinned, 'tis well if thou dost sin no more
Explanation: Let a minister never do acts of which he would have to grieve saying, 'what is this I have done'; (but) should he do (them), it were good that he grieved not
பால் : பொருட்பால், அதிகாரம் : 66 - வினைத்தூய்மை, குறள் : 655
6  ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
பொருள்(விளக்கம்): பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக்கூடாது
Transliteration: Eendraal Pasikaanpaan Aayinunj CheyyarkaSaandror Pazhikkum Vinai
Couplet: Though her that bore thee hung'ring thou behold, no deed
Do thou, that men of perfect soul have crime decreed
Explanation: Though a minister may see his mother starve; let him do not act which the wise would (treat with contempt)
பால் : பொருட்பால், அதிகாரம் : 66 - வினைத்தூய்மை, குறள் : 656
7  பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை
பொருள்(விளக்கம்): பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்
Transliteration: Pazhimalaindhu Eydhiya Aakkaththin SaandrorKazhinal Kurave Thalai
Couplet: Than store of wealth guilt-laden souls obtain,
The sorest poverty of perfect soul is richer gain
Explanation: Far more excellent is the extreme poverty of the wise than wealth obtained by heaping up of sinful
பால் : பொருட்பால், அதிகாரம் : 66 - வினைத்தூய்மை, குறள் : 657
8  கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்
பொருள்(விளக்கம்): தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களை ஒதுக்கிவிடாமல் செய்பவர்களுக்கு ஒரு வேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும்
Transliteration: Katindha Katindhoraar Seydhaarkku AvaidhaamMutindhaalum Peezhai Tharum
Couplet: To those who hate reproof and do forbidden thing
What prospers now, in after days shall anguish bring
Explanation: The actions of those, who have not desisted from doing deeds forbidden (by the great), will, even if they succeed, cause them sorrow
பால் : பொருட்பால், அதிகாரம் : 66 - வினைத்தூய்மை, குறள் : 658
9  அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை
பொருள்(விளக்கம்): பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும் நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும்
Transliteration: Azhak Konta Ellaam Azhappom IzhappinumPirpayakkum Narpaa Lavai
Couplet: What's gained through tears with tears shall go;
From loss good deeds entail harvests of blessings grow
Explanation: All that has been obtained with tears (to the victim) will depart with tears (to himself); but what has been by fair means; though with loss at first, will afterwards yield fruit
பால் : பொருட்பால், அதிகாரம் : 66 - வினைத்தூய்மை, குறள் : 659
10  சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துணீர் பெய்திரீஇ யற்று
பொருள்(விளக்கம்): தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக் காப்பாற்ற நினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான்
Transliteration: Salaththaal Porulseydhe Maarththal PasumanKalaththulneer Peydhireei Yatru
Couplet: In pot of clay unburnt he water pours and would retain,
Who seeks by wrong the realm in wealth and safety to maintain
Explanation: (For a minister) to protect (his king) with wealth obtained by foul means is like preserving a vessel of wet clay by filling it with water
பால் : பொருட்பால், அதிகாரம் : 66 - வினைத்தூய்மை, குறள் : 660
Page 66 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com