
100. பண்புடைமை
| 1 எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு |
| பொருள்(விளக்கம்): யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும் |
| Transliteration: Enpadhaththaal Eydhal Elidhenpa YaarmaattumPanputaimai Ennum Vazhakku |
| Couplet: Who easy access give to every man, they say, Of kindly courtesy will learn with ease the way |
| Explanation: If one is easy of access to all, it will be easy for one to obtain the virtue called goodness |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 100 - பண்புடைமை, குறள் : 991 |
| 2 அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு |
| பொருள்(விளக்கம்): அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்த நெறியாகும் |
| Transliteration: Anputaimai Aandra Kutippiraththal IvvirantumPanputaimai Ennum Vazhakku |
| Couplet: Benevolence and high born dignity, These two are beaten paths of courtesy |
| Explanation: Affectionateness and birth in a good family, these two constitute what is called a proper behaviour to all |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 100 - பண்புடைமை, குறள் : 992 |
| 3 உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு |
| பொருள்(விளக்கம்): நற்பண்பு இல்லாதவர்களை அவர்களின் உடல் உறுப்புகளை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்து மக்கள் இனத்தில் சேர்த்துப் பேசுவது சரியல்ல; நற்பண்புகளால் ஒத்திருப்பவர்களே மக்கள் எனப்படுவர் |
| Transliteration: Uruppoththal Makkaloppu Andraal VeruththakkaPanpoththal Oppadhaam Oppu |
| Couplet: Men are not one because their members seem alike to outward view; Similitude of kindred quality makes likeness true |
| Explanation: Resemblance of bodies is no resemblance of souls; true resemblance is the resemblance of qualities that attract |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 100 - பண்புடைமை, குறள் : 993 |
| 4 நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புள ராட்டும் உலகு |
| பொருள்(விளக்கம்): நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும் |
| Transliteration: Nayanotu Nandri Purindha PayanutaiyaarPanpupaa Raattum Ulaku |
| Couplet: Of men of fruitful life, who kindly benefits dispense, The world unites to praise the 'noble excellence.' |
| Explanation: The world applauds the character of those whose usefulness results from their equity and charity |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 100 - பண்புடைமை, குறள் : 994 |
| 5 நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு |
| பொருள்(விளக்கம்): விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும் அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள் |
| Transliteration: Nakaiyullum Innaa Thikazhchchi PakaiyullumPanpula Paatarivaar Maattu |
| Couplet: Contempt is evil though in sport They who man's nature know, E'en in their wrath, a courteous mind will show |
| Explanation: Reproach is painful to one even in sport; those (therefore) who know the nature of others exhibit (pleasing) qualities even when they are hated |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 100 - பண்புடைமை, குறள் : 995 |
| 6 பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன் |
| பொருள்(விளக்கம்): உலக நடைமுறைகள், பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும் இல்லையேல் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும் |
| Transliteration: Panputaiyaarp Pattuntu Ulakam AdhuindrelManpukku Maaivadhu Man |
| Couplet: The world abides; for 'worthy' men its weight sustain Were it not so, 'twould fall to dust again |
| Explanation: The (way of the) world subsists by contact with the good; if not, it would bury itself in the earth and perish |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 100 - பண்புடைமை, குறள் : 996 |
| 7 அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர் |
| பொருள்(விளக்கம்): அரம் போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும், மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார் |
| Transliteration: Arampolum Koormaiya Renum MarampolvarMakkatpanpu Illaa Thavar |
| Couplet: Though sharp their wit as file, as blocks they must remain, Whose souls are void of 'courtesy humane' |
| Explanation: He who is destitute of (true) human qualities (only) resembles a tree, though he may possess the sharpness of a file |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 100 - பண்புடைமை, குறள் : 997 |
| 8 நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும் பண்பாற்றார் ஆதல் கடை |
| பொருள்(விளக்கம்): நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையே செய்து கொண்டிருப்பவரிடம், நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடந்து கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும் |
| Transliteration: Nanpaatraar Aaki Nayamila SeyvaarkkumPanpaatraar Aadhal Katai |
| Couplet: Though men with all unfriendly acts and wrongs assail, 'Tis uttermost disgrace in 'courtesy' to fail |
| Explanation: It is wrong (for the wise) not to exhibit (good) qualities even towards those who bearing no friendship (for them) do only what is hateful |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 100 - பண்புடைமை, குறள் : 998 |
| 9 நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன் றிருள் |
| பொருள்(விளக்கம்): நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பது பகலில் கூட இருட்டாகத்தான் இருக்கும் |
| Transliteration: Nakalvallar Allaarkku Maayiru GnaalamPakalumpaar Pattandru Irul |
| Couplet: To him who knows not how to smile in kindly mirth, Darkness in daytime broods o'er all the vast and mighty earth |
| Explanation: To those who cannot rejoice, the wide world is buried darkness even in (broad) day light |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 100 - பண்புடைமை, குறள் : 999 |
| 10 பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்தீமை யால்திரிந் தற்று |
| பொருள்(விளக்கம்): பாத்திரம் களிம்பு பிடித்திருந்தால், அதில் ஊற்றி வைக்கப்படும் பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோலப் பண்பு இல்லாதவர்கள் பெற்ற செல்வமும் பயனற்றதாகி விடும் |
| Transliteration: Panpilaan Petra Perunjelvam NanpaalKalandheemai Yaaldhirin Thatru |
| Couplet: Like sweet milk soured because in filthy vessel poured, Is ample wealth in churlish man's unopened coffers stored |
| Explanation: The great wealth obtained by one who has no goodness will perish like pure milk spoilt by the |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 100 - பண்புடைமை, குறள் : 1000 |