
31. வெகுளாமை
| 1 தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம் |
| பொருள்(விளக்கம்): ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும் இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும் |
| Transliteration: Thannaiththaan Kaakkin Sinangaakka KaavaakkaalThannaiye Kollunj Chinam |
| Couplet: If thou would'st guard thyself, guard against wrath alway; 'Gainst wrath who guards not, him his wrath shall slay |
| Explanation: If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 31 - வெகுளாமை, குறள் : 301 |
| 2 சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும் |
| பொருள்(விளக்கம்): சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும் |
| Transliteration: Sinamennum Serndhaaraik Kolli InamennumEmap Punaiyaich Chutum |
| Couplet: Wrath, the fire that slayeth whose draweth near, Will burn the helpful 'raft' of kindred dear |
| Explanation: The fire of anger will burn up even the pleasant raft of friendship |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 31 - வெகுளாமை, குறள் : 302 |
| 3 சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று |
| பொருள்(விளக்கம்): நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும் அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும் |
| Transliteration: Sinaththaip Porulendru Kontavan KetuNilaththaraindhaan Kaipizhaiyaa Thatru |
| Couplet: The hand that smites the earth unfailing feels the sting; So perish they who nurse their wrath as noble thing |
| Explanation: Destruction will come upon him who ragards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 31 - வெகுளாமை, குறள் : 303 |
| 4 இணரெரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று |
| பொருள்(விளக்கம்): தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது |
| Transliteration: Inareri Thoivanna Innaa SeyinumPunarin Vekulaamai Nandru |
| Couplet: Though men should work thee woe, like touch of tongues of fire 'Tis well if thou canst save thy soul from burning ire |
| Explanation: Though one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you, it will be well, to refrain, if possible, from anger |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 31 - வெகுளாமை, குறள் : 304 |
| 5 உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி யெனின் |
| பொருள்(விளக்கம்): உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும் |
| Transliteration: Ulliya Thellaam Utaneydhum UllaththaalUllaan Vekuli Enin |
| Couplet: If man his soul preserve from wrathful fires, He gains with that whate'er his soul desires |
| Explanation: If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 31 - வெகுளாமை, குறள் : 305 |
| 6 இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை |
| பொருள்(விளக்கம்): எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார் சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார் |
| Transliteration: Irandhaar Irandhaar Anaiyar SinaththaithThurandhaar Thurandhaar Thunai |
| Couplet: Men of surpassing wrath are like the men who've passed away; Who wrath renounce, equals of all-renouncing sages they |
| Explanation: Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death) |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 31 - வெகுளாமை, குறள் : 306 |
| 7 செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கினென் காவாக்கா லென் |
| பொருள்(விளக்கம்): தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன? |
| Transliteration: Sellitaththuk Kaappaan Sinangaappaan AllitaththukKaakkinen Kaavaakkaal En? |
| Couplet: Where thou hast power thy angry will to work, thy wrath restrain; Where power is none, what matter if thou check or give it rein |
| Explanation: He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ? |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 31 - வெகுளாமை, குறள் : 307 |
| 8 செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்லதனின் தீய பிற |
| பொருள்(விளக்கம்): வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும் மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை |
| Transliteration: Sellaa Itaththuch Chinandheedhu SellitaththumIladhanin Theeya Pira |
| Couplet: Where power is none to wreak thy wrath, wrath importent is ill; Where thou hast power thy will to work, 'tis greater, evil still |
| Explanation: Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 31 - வெகுளாமை, குறள் : 308 |
| 9 மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய பிறத்தல் அதனான் வரும் |
| பொருள்(விளக்கம்): யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும் இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும் |
| Transliteration: Maraththal Vekuliyai Yaarmaattum TheeyaPiraththal Adhanaan Varum |
| Couplet: If any rouse thy wrath, the trespass straight forget; For wrath an endless train of evils will beget |
| Explanation: Forget anger towards every one, as fountains of evil spring from it |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 31 - வெகுளாமை, குறள் : 309 |
| 10 நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின் பகையும் உளவோ பிற |
| பொருள்(விளக்கம்): சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும் |
| Transliteration: Nakaiyum Uvakaiyum Kollum SinaththinPakaiyum Ulavo Pira |
| Couplet: Wrath robs the face of smiles, the heart of joy, What other foe to man works such annoy |
| Explanation: What other foe to man works such annoy? |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 31 - வெகுளாமை, குறள் : 310 |