
69. தூது
| 1 அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு |
| பொருள்(விளக்கம்): அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும் |
| Transliteration: Anputaimai Aandra Kutippiraththal VendhavaamPanputaimai Thoodhuraippaan Panpu |
| Couplet: Benevolence high birth, the courtesy kings love:- These qualities the envoy of a king approve |
| Explanation: The qualification of an ambassador are affection (for his relations) a fitting birth, and the possession of attributes pleasing to royalty |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 69 - தூது, குறள் : 681 |
| 2 அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க் கின்றி யமையாத மூன்று |
| பொருள்(விளக்கம்): தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள் அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை |
| Transliteration: Anparivu Aaraaindha Solvanmai ThoodhuraippaarkkuIndri Yamaiyaadha Moondru |
| Couplet: Love, knowledge, power of chosen words, three things, Should he possess who speaks the words of kings |
| Explanation: Love (to his sovereign), knowledge (of his affairs), and a discriminating power of speech (before other sovereigns) are the three sine qua non qualifications of an ambassador |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 69 - தூது, குறள் : 682 |
| 3 நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு |
| பொருள்(விளக்கம்): வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும் |
| Transliteration: Noolaarul Noolvallan Aakudhal VelaarulVendri Vinaiyuraippaan Panpu |
| Couplet: Mighty in lore amongst the learned must he be, Midst jav'lin-bearing kings who speaks the words of victory |
| Explanation: To be powerful in politics among those who are learned (in ethics) is the character of him who speaks |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 69 - தூது, குறள் : 683 |
| 4 அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு |
| பொருள்(விளக்கம்): தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும் |
| Transliteration: Arivuru Vaaraaindha Kalviim MoondranSerivutaiyaan Selka Vinaikku |
| Couplet: Sense, goodly grace, and knowledge exquisite Who hath these three for envoy's task is fit |
| Explanation: He may go on a mission (to foreign rulers) who has combined in him all these three viz, (natural) sense, an attractive bearing and well-tried learning |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 69 - தூது, குறள் : 684 |
| 5 தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாந் தூது |
| பொருள்(விளக்கம்): சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத் தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும் |
| Transliteration: Thokach Chollith Thoovaadha Neekki NakachcholliNandri Payappadhaan Thoodhu |
| Couplet: In terms concise, avoiding wrathful speech, who utters pleasant word, An envoy he who gains advantage for his lord |
| Explanation: He is an ambassador who (in the presence of foreign rulers) speaks briefly, avoids harshness, talks so as to make them smile, and thus brings good (to his own sovereign) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 69 - தூது, குறள் : 685 |
| 6 கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்க தறிவதாந் தூது |
| பொருள்(விளக்கம்): கற்றறிவாளனாகவும், பகைவரின் கனல்கக்கும் பார்வைக்கு அஞ்சாதவனாகவும், உள்ளத்தில் பதியுமாறு உரைப்பவனாகவும், உரிய நேரத்தில் உணரவேண்டியதை உணர்ந்து கொள்பவனாகவும் இருப்பவனே சிறந்த தூதனாவான் |
| Transliteration: Katrukkan Anjaan Selachchollik KaalaththaalThakkadhu Arivadhaam Thoodhu |
| Couplet: An envoy meet is he, well-learned, of fearless eye Who speaks right home, prepared for each emergency |
| Explanation: He is an ambassador who having studied (politics) talks impressively, is not afraid of angry looks, and knows (to employ) the art suited to the time |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 69 - தூது, குறள் : 686 |
| 7 கடனறிந்து காலங் கருதி இடனறிந் தெண்ணி உரைப்பான் தலை |
| பொருள்(விளக்கம்): ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான் |
| Transliteration: Katanarindhu Kaalang Karudhi ItanarindhuEnni Uraippaan Thalai |
| Couplet: He is the best who knows what's due, the time considered well, The place selects, then ponders long ere he his errand tell |
| Explanation: He is chief (among ambassadors) who understands the proper decorum (before foreign princes), seeks the (proper) occasion, knows the (most suitable) place, and delivers his message after (due) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 69 - தூது, குறள் : 687 |
| 8 தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு |
| பொருள்(விளக்கம்): துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும் |
| Transliteration: Thooimai Thunaimai Thunivutaimai ImmoondrinVaaimai Vazhiyuraippaan Panpu |
| Couplet: Integrity, resources, soul determined, truthfulness Who rightly speaks his message must these marks possess |
| Explanation: The qualifications of him who faithfully delivers his (sovereign's) message are purity, the support (of foreign ministers), and boldness, with truthfulness in addition to the (aforesaid) three |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 69 - தூது, குறள் : 688 |
| 9 விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம் வாய்சோரா வன்க ணவன் |
| பொருள்(விளக்கம்): ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும் |
| Transliteration: Vitumaatram Vendharkku Uraippaan VatumaatramVaaiseraa Vanka Navan |
| Couplet: His faltering lips must utter no unworthy thing, Who stands, with steady eye, to speak the mandates of his king |
| Explanation: He alone is fit to communicate (his sovereign's) reply, who possesses the firmness not to utter even inadvertently what may reflect discredit (on the latter) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 69 - தூது, குறள் : 689 |
| 10 இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற் குறுதி பயப்பதாம் தூது |
| பொருள்(விளக்கம்): தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து விடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான் |
| Transliteration: Irudhi Payappinum Enjaadhu IraivarkuUrudhi Payappadhaam Thoodhu |
| Couplet: Death to the faithful one his embassy may bring; To envoy gains assured advantage for his king |
| Explanation: He is the ambassador who fearlessly seeks his sovereign's good though it should cost him his life (to deliver his message) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 69 - தூது, குறள் : 690 |