srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


பொருட்பால்

105. நல்குரவு

1  இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது
பொருள்(விளக்கம்): வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை
Transliteration: Inmaiyin Innaadhadhu Yaadhenin InmaiyinInmaiye Innaa Thadhu
Couplet: You ask what sharper pain than poverty is known;
Nothing pains more than poverty, save poverty alone
Explanation: There is nothing that afflicts (one) like poverty
பால் : பொருட்பால், அதிகாரம் : 105 - நல்குரவு, குறள் : 1041
2  இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்
பொருள்(விளக்கம்): பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது
Transliteration: Inmai Enavoru Paavi MarumaiyumImmaiyum Indri Varum
Couplet: Malefactor matchless! poverty destroys
This world's and the next world's joys
Explanation: When cruel poverty comes on, it deprives one of both the present and future (bliss)
பால் : பொருட்பால், அதிகாரம் : 105 - நல்குரவு, குறள் : 1042
3  தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குர வென்னும் நசை
பொருள்(விளக்கம்): ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்
Transliteration: Tholvaravum Tholum Ketukkum ThokaiyaakaNalkuravu Ennum Nasai
Couplet: Importunate desire, which poverty men name,
Destroys both old descent and goodly fame
Explanation: Hankering poverty destroys at once the greatness of (one's) ancient descent and (the dignity of one's) speech
பால் : பொருட்பால், அதிகாரம் : 105 - நல்குரவு, குறள் : 1043
4  இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்
பொருள்(விளக்கம்): இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும்
Transliteration: Irpirandhaar Kanneyum Inmai IlivandhaSorpirakkum Sorvu Tharum
Couplet: From penury will spring, 'mid even those of noble race,
Oblivion that gives birth to words that bring disgrace
Explanation: Even in those of high birth, poverty will produce the fault of uttering mean words
பால் : பொருட்பால், அதிகாரம் : 105 - நல்குரவு, குறள் : 1044
5  நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்
பொருள்(விளக்கம்): வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்
Transliteration: Nalkuravu Ennum Itumpaiyul PalkuraithThunpangal Sendru Patum
Couplet: From poverty, that grievous woe,
Attendant sorrows plenteous grow
Explanation: The misery of poverty brings in its train many (more) miseries
பால் : பொருட்பால், அதிகாரம் : 105 - நல்குரவு, குறள் : 1045
6  நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்
பொருள்(விளக்கம்): அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும்
Transliteration: Narporul Nankunarndhu Sollinum NalkoorndhaarSorporul Sorvu Patum
Couplet: Though deepest sense, well understood, the poor man's words convey,
Their sense from memory of mankind will fade away
Explanation: The words of the poor are profitless, though they may be sound in thought and clear in expression
பால் : பொருட்பால், அதிகாரம் : 105 - நல்குரவு, குறள் : 1046
7  அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்
பொருள்(விளக்கம்): வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள்
Transliteration: Aranjaaraa Nalkuravu Eendradhaa YaanumPiranpola Nokkap Patum
Couplet: From indigence devoid of virtue's grace,
The mother e'en that bare, estranged, will turn her face
Explanation: He that is reduced to absolute poverty will be regarded as a stranger even by his own mother
பால் : பொருட்பால், அதிகாரம் : 105 - நல்குரவு, குறள் : 1047
8  இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு
பொருள்(விளக்கம்): கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்
Transliteration: Indrum Varuvadhu Kollo NerunalumKondradhu Polum Nirappu
Couplet: And will it come today as yesterday,
The grief of want that eats my soul away
Explanation: Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?
பால் : பொருட்பால், அதிகாரம் : 105 - நல்குரவு, குறள் : 1048
9  நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பா டரிது
பொருள்(விளக்கம்): நெருப்புக்குள் படுத்துக் தூங்குவதைகூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும்
Transliteration: Neruppinul Thunjalum Aakum NirappinulYaadhondrum Kanpaatu Aridhu
Couplet: Amid the flames sleep may men's eyelids close,
In poverty the eye knows no repose
Explanation: One may sleep in the midst of fire; but by no means in the midst of poverty
பால் : பொருட்பால், அதிகாரம் : 105 - நல்குரவு, குறள் : 1049
10  துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று
பொருள்(விளக்கம்): ஒழுங்குமறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத் துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு
Transliteration: Thuppura Villaar Thuvarath ThuravaamaiUppirkum Kaatikkum Kootru
Couplet: Unless the destitute will utterly themselves deny,
They cause their neighbour's salt and vinegar to die
Explanation: The destitute poor, who do not renounce their bodies, only consume their neighbour's salt and water
பால் : பொருட்பால், அதிகாரம் : 105 - நல்குரவு, குறள் : 1050
Page 105 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com