
29. கள்ளாமை
| 1 எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங் கள்ளாமை காக்கதன் நெஞ்சு |
| பொருள்(விளக்கம்): எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும் |
| Transliteration: Ellaamai Ventuvaan Enpaan EnaiththondrumKallaamai Kaakkadhan Nenju |
| Couplet: Who seeks heaven's joys, from impious levity secure, Let him from every fraud preserve his spirit pure |
| Explanation: Let him, who desires not to be despised, keep his mind from (the desire of) defrauding another of the smallest thing |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 29 - கள்ளாமை, குறள் : 281 |
| 2 உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வே மெனல் |
| பொருள்(விளக்கம்): பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும் |
| Transliteration: Ullaththaal Ullalum Theedhe PiranporulaikKallaththaal Kalvem Enal |
| Couplet: 'Tis sin if in the mind man but thought conceive; 'By fraud I will my neighbour of his wealth bereave.' |
| Explanation: Even the thought (of sin) is sin; think not then of crafiily stealing the property of another |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 29 - கள்ளாமை, குறள் : 282 |
| 3 களவினா லாகிய ஆக்கம் அளவிறந் தாவது போலக் கெடும் |
| பொருள்(விளக்கம்): கொள்ளயடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும் |
| Transliteration: Kalavinaal Aakiya Aakkam AlavirandhuAavadhu Polak Ketum |
| Couplet: The gain that comes by fraud, although it seems to grow With limitless increase, to ruin swift shall go |
| Explanation: The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 29 - கள்ளாமை, குறள் : 283 |
| 4 களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமந் தரும் |
| பொருள்(விளக்கம்): களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும் |
| Transliteration: Kalavinkan Kandriya Kaadhal VilaivinkanVeeyaa Vizhumam Tharum |
| Couplet: The lust inveterate of fraudful gain, Yields as its fruit undying pain |
| Explanation: The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 29 - கள்ளாமை, குறள் : 284 |
| 5 அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்க ணில் |
| பொருள்(விளக்கம்): மறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது |
| Transliteration: Arulkarudhi Anputaiya Raadhal PorulkarudhipPochchaappup Paarppaarkan Il |
| Couplet: 'Grace' is not in their thoughts, nor know they kind affection's power, Who neighbour's goods desire, and watch for his unguarded hour |
| Explanation: The study of kindness and the exercise of benevolence is not with those who watch for another's forgetfulness, though desire of his property |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 29 - கள்ளாமை, குறள் : 285 |
| 6 அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண் கன்றிய காத லவர் |
| பொருள்(விளக்கம்): ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள் |
| Transliteration: Alavinkan Nindrozhukal Aatraar KalavinkanKandriya Kaadha Lavar |
| Couplet: They cannot walk restrained in wisdom's measured bound, In whom inveterate lust of fraudful gain is found |
| Explanation: They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 29 - கள்ளாமை, குறள் : 286 |
| 7 களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்க ணில் |
| பொருள்(விளக்கம்): அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது |
| Transliteration: Kalavennum Kaarari Vaanmai AlavennumAatral Purindhaarkanta Il |
| Couplet: Practice of fraud's dark cunning arts they shun, Who long for power by 'measured wisdom' won |
| Explanation: That black-knowledge which is called fraud, is not in those who desire that greatness which is called rectitude |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 29 - கள்ளாமை, குறள் : 287 |
| 8 அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங் களவறிந்தார் நெஞ்சில் கரவு |
| பொருள்(விளக்கம்): நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும் |
| Transliteration: Alavarindhaar Nenjath Tharampola NirkumKalavarindhaar Nenjil Karavu |
| Couplet: As virtue dwells in heart that 'measured wisdom' gains; Deceit in hearts of fraudful men established reigns |
| Explanation: Deceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the minds of those who are conversant with rectitude |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 29 - கள்ளாமை, குறள் : 288 |
| 9 அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர் |
| பொருள்(விளக்கம்): அளவு என்பதைத் தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள் |
| Transliteration: Alavalla Seydhaange Veevar KalavallaMatraiya Thetraa Thavar |
| Couplet: Who have no lore save that which fraudful arts supply, Acts of unmeasured vice committing straightway die |
| Explanation: Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission of transgression |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 29 - கள்ளாமை, குறள் : 289 |
| 10 கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தே ளுலகு |
| பொருள்(விளக்கம்): களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது |
| Transliteration: Kalvaarkkuth Thallum Uyirnilai KalvaarkkuthThallaadhu Puththe Lulaku |
| Couplet: The fraudful forfeit life and being here below; Who fraud eschew the bliss of heavenly beings know |
| Explanation: Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 29 - கள்ளாமை, குறள் : 290 |