
10. இனியவை கூறல்
| 1 இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது |
| பொருள்(விளக்கம்): இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்? |
| Transliteration: Insol Inidheendral Kaanpaan EvankoloVansol Vazhangu Vadhu? |
| Couplet: Who sees the pleasure kindly speech affords, Why makes he use of harsh, repellant words |
| Explanation: Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ? |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 10 - இனியவை கூறல், குறள் : 91 |
| 2 இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று |
| பொருள்(விளக்கம்): இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும் |
| Transliteration: Iniya Ulavaaka Innaadha KooralKaniiruppak Kaaikavarn Thatru |
| Couplet: When pleasant words are easy, bitter words to use, Is, leaving sweet ripe fruit, the sour unripe to choose |
| Explanation: To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 10 - இனியவை கூறல், குறள் : 92 |
| 3 இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் |
| பொருள்(விளக்கம்): ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும் |
| Transliteration: Insolaal Eeram Alaiip PatiruilavaamSemporul Kantaarvaaich Chol |
| Couplet: Pleasant words are words with all pervading love that burn; Words from his guileless mouth who can the very truth discern |
| Explanation: Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 10 - இனியவை கூறல், குறள் : 93 |
| 4 அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் |
| பொருள்(விளக்கம்): முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும் |
| Transliteration: Akanamarndhu Eedhalin Nandre MukanamarndhuInsolan Aakap Perin |
| Couplet: A pleasant word with beaming smile's preferred, Even to gifts with liberal heart conferred |
| Explanation: Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 10 - இனியவை கூறல், குறள் : 94 |
| 5 முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம் |
| பொருள்(விளக்கம்): முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும் |
| Transliteration: Mukaththaan Amarndhuinidhu Nokki AkaththaanaamInso Linadhe Aram |
| Couplet: With brightly beaming smile, and kindly light of loving eye, And heart sincere, to utter pleasant words is charity |
| Explanation: Sweet speech, flowing from the heart (uttered) with a cheerful countenance and a sweet look, is true virtue |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 10 - இனியவை கூறல், குறள் : 95 |
| 6 துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு |
| பொருள்(விளக்கம்): இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு `நட்பில் வறுமை' எனும் துன்பமில்லை |
| Transliteration: Thunpurooum Thuvvaamai Illaakum YaarmaattumInpurooum Inso Lavarkku |
| Couplet: The men of pleasant speech that gladness breathe around, Through indigence shall never sorrow's prey be found |
| Explanation: Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 10 - இனியவை கூறல், குறள் : 96 |
| 7 பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற |
| பொருள்(விளக்கம்): அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது |
| Transliteration: Panivutaiyan Insolan Aadhal OruvarkuAniyalla Matrup Pira |
| Couplet: Humility with pleasant speech to man on earth, Is choice adornment; all besides is nothing worth |
| Explanation: Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments) |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 10 - இனியவை கூறல், குறள் : 97 |
| 8 அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின் |
| பொருள்(விளக்கம்): தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும் |
| Transliteration: Allavai Theya Aramperukum NallavaiNaati Iniya Solin |
| Couplet: Who seeks out good, words from his lips of sweetness flow; In him the power of vice declines, and virtues grow |
| Explanation: If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 10 - இனியவை கூறல், குறள் : 98 |
| 9 நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் |
| பொருள்(விளக்கம்): நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும் |
| Transliteration: Nayan Eendru Nandri Payakkum PayaneendruPanpin Thalaippiriyaach Chol |
| Couplet: The words of sterling sense, to rule of right that strict adhere, To virtuous action prompting, blessings yield in every sphere |
| Explanation: That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world) |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 10 - இனியவை கூறல், குறள் : 99 |
| 10 சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும் |
| பொருள்(விளக்கம்): சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும் |
| Transliteration: Sirumaiyul Neengiya Insol MarumaiyumImmaiyum Inpam Tharum |
| Couplet: Sweet kindly words, from meanness free, delight of heart, In world to come and in this world impart |
| Explanation: Sweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 10 - இனியவை கூறல், குறள் : 100 |