srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


அறத்துப்பால்

5. இல்வாழ்க்கை

1  இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
பொருள்(விளக்கம்): பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்
Transliteration: Ilvaazhvaan Enpaan Iyalputaiya MoovarkkumNallaatrin Nindra Thunai
Couplet: The men of household virtue, firm in way of good, sustain
The other orders three that rule professed maintain
Explanation: 7 He will be called a (true) householder, who is a firm support to the virtuous of the three orders in
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 5 - இல்வாழ்க்கை, குறள் : 41
2  துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை
பொருள்(விளக்கம்): பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்
Transliteration: Thurandhaarkkum Thuvvaa Dhavarkkum IrandhaarkkumIlvaazhvaan Enpaan Thunai
Couplet: To anchorites, to indigent, to those who've passed away,
The man for household virtue famed is needful held and stay
Explanation: He will be said to flourish in domestic virtue who aids the forsaken, the poor, and the dead
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 5 - இல்வாழ்க்கை, குறள் : 42
3  தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை
பொருள்(விளக்கம்): வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம்
Transliteration: Thenpulaththaar Theyvam Virundhokkal ThaanendraanguAimpulaththaaru Ompal Thalai
Couplet: The manes, God, guests kindred, self, in due degree,
These five to cherish well is chiefest charity
Explanation: The chief (duty of the householder) is to preserve the five-fold rule (of conduct) towards the manes, the Gods, his guests, his relations and himself
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 5 - இல்வாழ்க்கை, குறள் : 43
4  பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல
பொருள்(விளக்கம்): பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது
Transliteration: Pazhiyanjip Paaththoon Utaiththaayin VaazhkkaiVazhiyenjal Egngnaandrum Il
Couplet: Who shares his meal with other, while all guilt he shuns,
His virtuous line unbroken though the ages runs
Explanation: His descendants shall never fail who, living in the domestic state, fears vice (in the acquisition of property) and shares his food (with others)
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 5 - இல்வாழ்க்கை, குறள் : 44
5  அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
பொருள்(விளக்கம்): இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை
Transliteration: Anpum Aranum Utaiththaayin IlvaazhkkaiPanpum Payanum Adhu
Couplet: If love and virtue in the household reign,
This is of life the perfect grace and gain
Explanation: If the married life possess love and virtue, these will be both its duty and reward
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 5 - இல்வாழ்க்கை, குறள் : 45
6  அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்
பொருள்(விளக்கம்): அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது
Transliteration: Araththaatrin Ilvaazhkkai Aatrin PuraththaatrilPooip Peruva Thevan?
Couplet: If man in active household life a virtuous soul retain,
What fruit from other modes of virtue can he gain
Explanation: What will he who lives virtuously in the domestic state gain by going into the other, (ascetic) state ?
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 5 - இல்வாழ்க்கை, குறள் : 46
7  இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை
பொருள்(விளக்கம்): நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்
Transliteration: Iyalpinaan Ilvaazhkkai Vaazhpavan EnpaanMuyalvaarul Ellaam Thalai
Couplet: In nature's way who spends his calm domestic days,
'Mid all that strive for virtue's crown hath foremost place
Explanation: Among all those who labour (for future happiness) he is greatest who lives well in the household state
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 5 - இல்வாழ்க்கை, குறள் : 47
8  ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து
பொருள்(விளக்கம்): தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்
Transliteration: Aatrin Ozhukki Aranizhukkaa IlvaazhkkaiNorpaarin Nonmai Utaiththu
Couplet: Others it sets upon their way, itself from virtue ne'er declines;
Than stern ascetics' pains such life domestic brighter shines
Explanation: The householder who, not swerving from virtue, helps the ascetic in his way, endures more than those who endure penance
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 5 - இல்வாழ்க்கை, குறள் : 48
9  அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று
பொருள்(விளக்கம்): பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்
Transliteration: Aran Enap Pattadhe Ilvaazhkkai AqdhumPiranpazhippa Thillaayin Nandru
Couplet: The life domestic rightly bears true virtue's name;
That other too, if blameless found, due praise may claim
Explanation: The marriage state is truly called virtue The other state is also good, if others do not reproach it
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 5 - இல்வாழ்க்கை, குறள் : 49
10  வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
பொருள்(விளக்கம்): தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்
Transliteration: Vaiyaththul Vaazhvaangu Vaazhpavan Vaanu�ryumTheyvaththul Vaikkap Patum
Couplet: Who shares domestic life, by household virtues graced,
Shall, mid the Gods, in heaven who dwell, be placed
Explanation: He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the Gods who dwell in heaven
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 5 - இல்வாழ்க்கை, குறள் : 50
Page 5 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com