srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


அறத்துப்பால்

20. பயனிலசொல்லாமை

1  பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்
பொருள்(விளக்கம்): பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்
Transliteration: Pallaar Muniyap Payanila SolluvaanEllaarum Ellap Patum
Couplet: Words without sense, while chafe the wise,
Who babbles, him will all despise
Explanation: He who to the disgust of many speaks useless things will be despised by all
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 20 - பயனிலசொல்லாமை, குறள் : 191
2  பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கட் செய்தலிற் றீது
பொருள்(விளக்கம்): பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்
Transliteration: Payanila Pallaarmun Sollal NayanilaNattaarkan Seydhalir Reedhu
Couplet: Words without sense, where many wise men hear, to pour
Than deeds to friends ungracious done offendeth more
Explanation: To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 20 - பயனிலசொல்லாமை, குறள் : 192
3  நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை
பொருள்(விளக்கம்): பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்
Transliteration: Nayanilan Enpadhu Sollum PayanilaPaarith Thuraikkum Urai
Couplet: Diffusive speech of useless words proclaims
A man who never righteous wisdom gains
Explanation: That conversation in which a man utters forth useless things will say of him 'he is without virtue.'
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 20 - பயனிலசொல்லாமை, குறள் : 193
4  நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து
பொருள்(விளக்கம்): பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்
Transliteration: Nayansaaraa Nanmaiyin Neekkum PayansaaraapPanpilsol Pallaa Rakaththu
Couplet: Unmeaning, worthless words, said to the multitude,
To none delight afford, and sever men from good
Explanation: 25 The words devoid of profit or pleasure which a man speaks will, being inconsistent with virtue,
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 20 - பயனிலசொல்லாமை, குறள் : 194
5  சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்
பொருள்(விளக்கம்): நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்
Transliteration: Seermai Sirappotu Neengum PayanilaNeermai Yutaiyaar Solin
Couplet: Gone are both fame and boasted excellence,
When men of worth speak of words devoid of sense
Explanation: If the good speak vain words their eminence and excellence will leave them
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 20 - பயனிலசொல்லாமை, குறள் : 195
6  பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்
பொருள்(விளக்கம்): பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்
Transliteration: Payanil Sol Paaraattu Vaanai MakanenalMakkat Padhati Yenal
Couplet: Who makes display of idle words' inanity,
Call him not man, -chaff of humanity
Explanation: Call not him a man who parades forth his empty words Call him the chaff of men
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 20 - பயனிலசொல்லாமை, குறள் : 196
7  நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று
பொருள்(விளக்கம்): பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது
Transliteration: Nayanila Sollinunj Cholluka SaandrorPayanila Sollaamai Nandru
Couplet: Let those who list speak things that no delight afford,
'Tis good for men of worth to speak no idle word
Explanation: Let the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless things
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 20 - பயனிலசொல்லாமை, குறள் : 197
8  அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்
பெரும்பய னில்லாத சொல்
பொருள்(விளக்கம்): அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்
Transliteration: Arumpayan Aayum Arivinaar SollaarPerumpayan Illaadha Sol
Couplet: The wise who weigh the worth of every utterance,
Speak none but words of deep significance
Explanation: The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 20 - பயனிலசொல்லாமை, குறள் : 198
9  பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்
பொருள்(விளக்கம்): மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்
Transliteration: Poruldheerndha Pochchaandhunj Chollaar MaruldheerndhaMaasaru Kaatchi Yavar
Couplet: The men of vision pure, from wildering folly free,
Not e'en in thoughtless hour, speak words of vanity
Explanation: Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 20 - பயனிலசொல்லாமை, குறள் : 199
10  சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்
பொருள்(விளக்கம்): பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்
Transliteration: Solluka Sollir Payanutaiya SollarkaSollir Payanilaach Chol
Couplet: If speak you will, speak words that fruit afford,
If speak you will, speak never fruitless word
Explanation: Speak what is useful, and speak not useless words
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 20 - பயனிலசொல்லாமை, குறள் : 200
Page 20 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com