srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


அறத்துப்பால்

36. மெய்யுணர்தல்

1  பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு
பொருள்(விளக்கம்): அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும்
Transliteration: Pirappennum Pedhaimai Neengach ChirappennumSemporul Kaanpadhu Arivu
Couplet: When folly, cause of births, departs; and soul can view
The truth of things, man's dignity- 'tis wisdom true
Explanation: True knowledge consists in the removal of ignorance; which is (the cause of) births, and the perception of the True Being who is (the bestower of) heaven
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 36 - மெய்யுணர்தல், குறள் : 351
2  சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்
பொருள்(விளக்கம்): துன்பங்கள் நம்மைச் சாராமல் இருக்க வேண்டுமானால், அத்துன்பங்களுக்குக் காரணமானவற்றை உணர்ந்து அவற்றின் மீதுள்ள பற்றை விலக்கிக் கொள்ள வேண்டும்
Transliteration: Saarpunarndhu Saarpu Ketaozhukin MatrazhiththuchChaardharaa Saardharu Noi
Couplet: The true 'support' who knows- rejects 'supports' he sought before-
Sorrow that clings all destroys, shall cling to him no more
Explanation: He who so lives as to know Him who is the support of all things and abandon all desire, will be freed from the evils which would otherwise cleave to him and destroy (his efforts after absorption)
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 36 - மெய்யுணர்தல், குறள் : 352
3  காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமங் கெடக்கெடு நோய்
பொருள்(விளக்கம்): விருப்பு, வெறுப்பு, அறியாமை இவற்றுக்கு இடம் தராதவர்களை நெருங்குகிற துன்பம் அழிந்துவிடும்
Transliteration: Kaamam Vekuli Mayakkam IvaimundranNaamam Ketakketum Noi
Couplet: When lust and wrath and error's triple tyranny is o'er,
Their very names for aye extinct, then pain shall be no more
Explanation: If the very names of these three things, desire, anger, and confusion of mind, be destroyed, then will also perish evils (which flow from them)
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 36 - மெய்யுணர்தல், குறள் : 353
4  பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு
பொருள்(விளக்கம்): பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது
Transliteration: Porulalla Vatraip Porulendru UnarumMarulaanaam Maanaap Pirappu
Couplet: Of things devoid of truth as real things men deem;-
Cause of degraded birth the fond delusive dream
Explanation: Inglorious births are produced by the confusion (of mind) which considers those things to be real which are not real
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 36 - மெய்யுணர்தல், குறள் : 354
5  இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு
பொருள்(விளக்கம்): மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்ந்தால் அறியாமை அகன்று நலம் தோன்றும்
Transliteration: Irulneengi Inpam Payakkum MarulneengiMaasaru Kaatchi Yavarkku
Couplet: Darkness departs, and rapture springs to men who see,
The mystic vision pure, from all delusion free
Explanation: A clear, undimmed vision of things will deliver its possessors from the darkness of future births, and confer the felicity (of heaven)
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 36 - மெய்யுணர்தல், குறள் : 355
6  ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வான நணிய துடைத்து
பொருள்(விளக்கம்): ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்
Transliteration: Aiyaththin Neengith Thelindhaarkku VaiyaththinVaanam Naniya Thutaiththu
Couplet: When doubts disperse, and mists of error roll
Away, nearer is heav'n than earth to sage's soul
Explanation: Heaven is nearer than earth to those men of purified minds who are freed from from doubt
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 36 - மெய்யுணர்தல், குறள் : 356
7  ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு
பொருள்(விளக்கம்): உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை
Transliteration: Aiyunarvu Eydhiyak Kannum PayamindreMeyyunarvu Illaa Thavarkku
Couplet: Five-fold perception gained, what benefits accrue
To them whose spirits lack perception of the true
Explanation: Even those who have all the knowledge which can be attained by the five senses, will derive no benefit from it, if they are without a knowledge of the true nature of things
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 36 - மெய்யுணர்தல், குறள் : 357
8  எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
பொருள்(விளக்கம்): வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றிய உண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும்
Transliteration: Epporul Eththanmaith Thaayinum ApporulMeypporul Kaanpadhu Arivu
Couplet: Whatever thing, of whatsoever kind it be,
'Tis wisdom's part in each the very thing to see
Explanation: (True) knowledge is the perception concerning every thing of whatever kind, that that thing is the true thing
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 36 - மெய்யுணர்தல், குறள் : 358
9  கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி
பொருள்(விளக்கம்): துறவற வாழ்வுக்குத் தகுதியுடையவராகச் செய்திடும் அனைத்தையும் கற்று, உண்மைப் பொருள் உணர்ந்து அதன்படி ஒழுகுபவர், மீண்டும் இல்லற வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள்
Transliteration: Katreentu Meypporul Kantaar ThalaippatuvarMatreentu Vaaraa Neri
Couplet: Who learn, and here the knowledge of the true obtain,
Shall find the path that hither cometh not again
Explanation: They, who in this birth have learned to know the True Being, enter the road which returns not into this world
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 36 - மெய்யுணர்தல், குறள் : 359
10  ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு
பொருள்(விளக்கம்): உண்மையை ஆராய்ந்து உறுதியாக உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு உண்டு எனக் கருத மாட்டார்கள்
Transliteration: Orththullam Ulladhu Unarin OrudhalaiyaapPerththulla Ventaa Pirappu
Couplet: The mind that knows with certitude what is, and ponders well,
Its thoughts on birth again to other life need not to dwell
Explanation: Let it not be thought that there is another birth for him whose mind having thoroughly considered (all it has been taught) has known the True Being
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 36 - மெய்யுணர்தல், குறள் : 360
Page 36 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com