
108. கயமை
| 1 சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல கொல்லப் பயன்படும் கீழ் |
| பொருள்(விளக்கம்): குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரி பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும் |
| Transliteration: Sollap Payanpatuvar Saandror KarumpupolKollap Payanpatum Keezh |
| Couplet: The good to those will profit yield fair words who use; The base, like sugar-cane, will profit those who bruise |
| Explanation: The great bestow (their alms) as soon as they are informed; (but) the mean, like the sugar-cane, only when they are tortured to death |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 108 - கயமை, குறள் : 1071 |
| 2 உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ் |
| பொருள்(விளக்கம்): ஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டுகூட பெறாமைப்படுகிற கயவன், அவர்மீது வேண்டுமென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான் |
| Transliteration: Utuppadhooum Unpadhooum Kaanin PirarmelVatukkaana Vatraakum Keezh |
| Couplet: If neighbours clothed and fed he see, the base Is mighty man some hidden fault to trace |
| Explanation: The base will bring an evil (accusation) against others, as soon as he sees them (enjoying) good food |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 108 - கயமை, குறள் : 1072 |
| 3 எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால் விற்றற் குரியர் விரைந்து |
| பொருள்(விளக்கம்): ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரிய தகுதியாகும் |
| Transliteration: Etrir Kuriyar Kayavarondru UtrakkaalVitrarku Uriyar Viraindhu |
| Couplet: For what is base man fit, if griefs assail? Himself to offer, there and then, for sale |
| Explanation: The base will hasten to sell themselves as soon as a calamity has befallen them. For what else are they fitted ? |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 108 - கயமை, குறள் : 1073 |
| 4 மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில் |
| பொருள்(விளக்கம்): குணத்தில் கயவராக இருப்பர் ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார் மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும் |
| Transliteration: Makkale Polvar Kayavar AvarannaOppaari Yaanganta Thil |
| Couplet: The base resemble men in outward form, I ween; But counterpart exact to them I've never seen |
| Explanation: The base resemble men perfectly (as regards form); and we have not seen such (exact) resemblance (among any other species) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 108 - கயமை, குறள் : 1074 |
| 5 நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத் தவலம் இலர் |
| பொருள்(விளக்கம்): எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களைவிட எதைப் பற்றியும் கவலைப்படாமலிருக்கும் கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்! |
| Transliteration: Nandrari Vaarir Kayavar ThiruvutaiyarNenjaththu Avalam Ilar |
| Couplet: Than those of grateful heart the base must luckier be, Their minds from every anxious thought are free |
| Explanation: The low enjoy more felicity than those who know what is good; for the former are not troubled with anxiety (as to the good) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 108 - கயமை, குறள் : 1075 |
| 6 தேவ ரனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான் |
| பொருள்(விளக்கம்): புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம் |
| Transliteration: Thevar Anaiyar Kayavar AvarundhaamMevana Seydhozhuka Laan |
| Couplet: The base are as the Gods; they too Do ever what they list to do |
| Explanation: The base resemble the Gods; for the base act as they like |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 108 - கயமை, குறள் : 1076 |
| 7 அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ் |
| பொருள்(விளக்கம்): பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவான குணமுடையோரைக் கண்டால், அவர்களைவிடத் தாம் சிறந்தவர்கள் என்ற கர்வம் கொள்வார்கள் |
| Transliteration: Akappatti Aavaaraik Kaanin AvarinMikappattuch Chemmaakkum Keezh |
| Couplet: When base men those behold of conduct vile, They straight surpass them, and exulting smile |
| Explanation: The base feels proud when he sees persons whose acts meaner than his own |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 108 - கயமை, குறள் : 1077 |
| 8 அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம் அவாவுண்டேல் உண்டாம் சிறிது |
| பொருள்(விளக்கம்): தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும்போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள் மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தின் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள் |
| Transliteration: Achchame Keezhkaladhu Aasaaram EchchamAvaavuntel Untaam Siridhu |
| Couplet: Fear is the base man's virtue; if that fail, Intense desire some little may avail |
| Explanation: (The principle of) behaviour in the mean is chiefly fear; if not, hope of gain, to some extent |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 108 - கயமை, குறள் : 1078 |
| 9 அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க் குய்த்துரைக்க லான் |
| பொருள்(விளக்கம்): மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில், ஓடிச் சென்று பிறருக்குச் சொல்லுகிற கயவர்களைத், தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம் |
| Transliteration: Araiparai Annar Kayavardhaam KettaMaraipirarkku Uyththuraikka Laan |
| Couplet: The base are like the beaten drum; for, when they hear The sound the secret out in every neighbour's ear |
| Explanation: The base are like a drum that is beaten, for they unburden to others the secrets they have heard |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 108 - கயமை, குறள் : 1079 |
| 10 ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங் கூன்கையர் அல்லா தவர்க்கு |
| பொருள்(விளக்கம்): கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக் கொடுப்பார்களேயல்லாமல், ஈகைக் குணமில்லாத கயவர்கள் ஏழை எளியோருக்காகத் தமது எச்சில் கைகைக்கூட உதற மாட்டார்கள் |
| Transliteration: Eerngai Vidhiraar Kayavar KotirutaikkumKoonkaiyar Allaa Thavarkku |
| Couplet: From off their moistened hands no clinging grain they shake, Unless to those with clenched fist their jaws who break |
| Explanation: The mean will not (even) shake off (what sticks to) their hands (soon after a meal) to any but those who would break their jaws with their clenched fists |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 108 - கயமை, குறள் : 1080 |