
54. பொச்சாவாமை
| 1 இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு |
| பொருள்(விளக்கம்): அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது |
| Transliteration: Irandha Vekuliyin Theedhe SirandhaUvakai Makizhchchiyir Sorvu |
| Couplet: 'Tis greater ill, it rapture of o'erweening gladness to the soul Bring self-forgetfulness than if transcendent wrath control |
| Explanation: More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 54 - பொச்சாவாமை, குறள் : 531 |
| 2 பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு |
| பொருள்(விளக்கம்): நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும் |
| Transliteration: Pochchaappuk Kollum Pukazhai ArivinaiNichcha Nirappuk Kon Raangu |
| Couplet: Perpetual, poverty is death to wisdom of the wise; When man forgets himself his glory dies |
| Explanation: Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 54 - பொச்சாவாமை, குறள் : 532 |
| 3 பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத் தெப்பானூ லோர்க்குந் துணிவு |
| பொருள்(விளக்கம்): மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும் |
| Transliteration: Pochchaappaark Killai Pukazhmai AdhuulakaththuEppaalnoo Lorkkum Thunivu |
| Couplet: 'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school |
| Explanation: Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 54 - பொச்சாவாமை, குறள் : 533 |
| 4 அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு |
| பொருள்(விளக்கம்): பயத்தினால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்கான அரண் கட்டப்பட்டிருந்தாலும் எந்தப் பயனுமில்லை அதைப் போலவே என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மறதி உடையவர்களுக்கு அந்த நிலையினால் எந்தப் பயனுமில்லை |
| Transliteration: Achcha Mutaiyaarkku Aranillai AangillaiPochchaap Putaiyaarkku Nanku |
| Couplet: 'To cowards is no fort's defence'; e'en so The self-oblivious men no blessing know |
| Explanation: Just as the coward has no defence (by whatever fortifications ha may be surrounded), so the thoughtless has no good (whatever advantages he may possess) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 54 - பொச்சாவாமை, குறள் : 534 |
| 5 முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை பின்னூ றிரங்கி விடும் |
| பொருள்(விளக்கம்): முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன், துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும் |
| Transliteration: Munnurak Kaavaadhu Izhukkiyaan ThanpizhaiPinnooru Irangi Vitum |
| Couplet: To him who nought foresees, recks not of anything, The after woe shall sure repentance bring |
| Explanation: The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwards repent for his fault |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 54 - பொச்சாவாமை, குறள் : 535 |
| 6 இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுவொப்ப தில் |
| பொருள்(விளக்கம்): ஒருவரிடம், மறவாமை என்னும் பண்பு தவறாமல் பொருந்தியிருக்குமேயானால், அதைவிட அவருக்கு நன்மை தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது |
| Transliteration: Izhukkaamai Yaarmaattum Endrum VazhukkaamaiVaayin Adhuvoppadhu Il |
| Couplet: Towards all unswerving, ever watchfulness of soul retain, Where this is found there is no greater gain |
| Explanation: There is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times; and towards all persons |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 54 - பொச்சாவாமை, குறள் : 536 |
| 7 அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக் கருவியாற் போற்றிச் செயின் |
| பொருள்(விளக்கம்): மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை |
| Transliteration: Ariyaendru Aakaadha Illaipoch ChaavaakKaruviyaal Potrich Cheyin |
| Couplet: Though things are arduous deemed, there's nought may not be won, When work with mind's unslumbering energy and thought is done |
| Explanation: There is nothing too difficult to be accomplished, if a man set about it carefully, with unflinching endeavour |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 54 - பொச்சாவாமை, குறள் : 537 |
| 8 புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா திகழ்ந்தார்க் கெழுமையும் இல் |
| பொருள்(விளக்கம்): புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச் செய்திடல் வேண்டும் அப்படிச் செய்யாமல் புறக்கணிக்கப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லை |
| Transliteration: Pukazhndhavai Potrich Cheyalventum SeyyaadhuIkazhndhaarkku Ezhumaiyum Il |
| Couplet: Let things that merit praise thy watchful soul employ; Who these despise attain through sevenfold births no joy |
| Explanation: Let (a man) observe and do these things which have been praised (by the wise); if he neglects and fails to perform them, for him there will be no (happiness) throughout the seven births |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 54 - பொச்சாவாமை, குறள் : 538 |
| 9 இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து |
| பொருள்(விளக்கம்): மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும் |
| Transliteration: Ikazhchchiyin Kettaarai Ulluka ThaandhamMakizhchchiyin Maindhurum Pozhdhu |
| Couplet: Think on the men whom scornful mind hath brought to nought, When exultation overwhelms thy wildered thought |
| Explanation: Let (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joy |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 54 - பொச்சாவாமை, குறள் : 539 |
| 10 உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளிய துள்ளப் பெறின் |
| பொருள்(விளக்கம்): கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும் |
| Transliteration: Ulliyadhu Eydhal Elidhuman MatrundhaanUlliyadhu Ullap Perin |
| Couplet: 'Tis easy what thou hast in mind to gain, If what thou hast in mind thy mind retain |
| Explanation: It is easy for (one) to obtain whatever he may think of, if he can again think of it |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 54 - பொச்சாவாமை, குறள் : 540 |