
94. சூது
| 1 வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று |
| பொருள்(விளக்கம்): வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது அந்த வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும் விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கௌவிக் கொண்டது போலாகிவிடும் |
| Transliteration: Ventarka Vendritinum Soodhinai VendradhooumThoontirpon Meenvizhungi Atru |
| Couplet: Seek not the gamester's play; though you should win, Your gain is as the baited hook the fish takes in |
| Explanation: Though able to win, let not one desire gambling; (for) even what is won is like a fish swallowing the iron in fish-hook |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 94 - சூது, குறள் : 931 |
| 2 ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோர் ஆறு |
| பொருள்(விளக்கம்): ஒரு வெற்றியைப் பெற்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து ஆடி நூறு தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில் நலம் ஏற்பட வழி ஏது? |
| Transliteration: Ondreydhi Noorizhakkum Soodharkkum UntaangolNandreydhi Vaazhvadhor Aaru |
| Couplet: Is there for gamblers, too, that gaining one a hundred lose, some way That they may good obtain, and see a prosperous day |
| Explanation: That they may good obtain, and see a prosperous day? Is there indeed a means of livelihood that can bestow happiness on gamblers who gain one and lose a hundred? |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 94 - சூது, குறள் : 932 |
| 3 உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம் போஒய்ப் புறமே படும் |
| பொருள்(விளக்கம்): பணையம் வைத்து இடைவிடாமல் சூதாடுவதை ஒருவன் பழக்கமாகவே கொள்வானேயானால் அவன் செல்வமும் அந்தச் செல்வத்தை ஈட்டும் வழிமுறையும் அவனைவிட்டு நீங்கிவிடும் |
| Transliteration: Urulaayam Ovaadhu Koorin PorulaayamPooip Purame Patum |
| Couplet: If prince unceasing speak of nought but play, Treasure and revenue will pass from him away |
| Explanation: If the king is incessantly addicted to the rolling dice in the hope of gain, his wealth and the resources thereof will take their departure and fall into other's hands |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 94 - சூது, குறள் : 933 |
| 4 சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் வறுமை தருவதொன் றில் |
| பொருள்(விளக்கம்): பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைப் கெடுத்த, வறுமையிலும் ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான செயல் வேறொன்றும் இல்லை |
| Transliteration: Sirumai Palaseydhu Seerazhikkum SoodhinVarumai Tharuvadhondru Il |
| Couplet: Gaming brings many woes, and ruins fair renown; Nothing to want brings men so surely down |
| Explanation: There is nothing else that brings (us) poverty like gambling which causes many a misery and destroys (one's) reputation |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 94 - சூது, குறள் : 934 |
| 5 கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார் |
| பொருள்(விளக்கம்): சூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக் கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவார்கள் |
| Transliteration: Kavarum Kazhakamum Kaiyum TharukkiIvariyaar Illaaki Yaar |
| Couplet: The dice, and gaming-hall, and gamester's art, they eager sought, Thirsting for gain- the men in other days who came to nought |
| Explanation: Penniless are those who by reason of their attachment would never forsake gambling, the gamblingplace and the handling (of dice) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 94 - சூது, குறள் : 935 |
| 6 அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும் முகடியான் மூடப்பட் டார் |
| பொருள்(விளக்கம்): சூது எனப்படும் தீமையின் வலையில் விழுந்தவர்கள் வயிறார உண்ணவும் விரும்பாமல் துன்பத்திலும் உழன்று வருந்துவார்கள் |
| Transliteration: Akataaraar Allal Uzhapparsoo ThennumMukatiyaan Mootappat Taar |
| Couplet: Gambling's Misfortune's other name: o'er whom she casts her veil, They suffer grievous want, and sorrows sore bewail |
| Explanation: Those who are swallowed by the goddess called 'gambling' will never have their hunger satisfied, but suffer the pangs of hell in the next world |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 94 - சூது, குறள் : 936 |
| 7 பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின் |
| பொருள்(விளக்கம்): சூதாடும் இடத்திலேயே ஒருவர் தமது காலத்தைக் கழிப்பாரேயானால், அது அவருடைய மூதாதையர் தேடிவைத்த சொத்துகளையும் நற்பண்பையும் நாசமாக்கிவிடும் |
| Transliteration: Pazhakiya Selvamum Panpum KetukkumKazhakaththuk Kaalai Pukin |
| Couplet: Ancestral wealth and noble fame to ruin haste, If men in gambler's halls their precious moments waste |
| Explanation: To waste time at the place of gambling will destroy inherited wealth and goodness of character |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 94 - சூது, குறள் : 937 |
| 8 பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத் தல்லல் உழப்பிக்கும் சூது |
| பொருள்(விளக்கம்): பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி, அருள் நெஞ்சத்தையும் மாற்றித், துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது |
| Transliteration: Porul Ketuththup Poimer Koleei ArulketuththuAllal Uzhappikkum Soodhu |
| Couplet: Gambling wastes wealth, to falsehood bends the soul: it drives away All grace, and leaves the man to utter misery a prey |
| Explanation: Gambling destroys property, teaches falsehood, puts an end to benevolence, and brings in misery (here and hereafter) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 94 - சூது, குறள் : 938 |
| 9 உடைசெல்வம் ஊணொளி கல்வியென் றைந்தும் அடையாவாம் ஆயங் கொளின் |
| பொருள்(விளக்கம்): சூதாட்டத்திற்கு அடிமையாகி விட்டவர்களை விட்டுப் புகழும், கல்வியும், செல்வமும், உணவும், உடையும் அகன்று ஒதுங்கி விடும் |
| Transliteration: Utaiselvam Oonoli Kalviendru AindhumAtaiyaavaam Aayang Kolin |
| Couplet: Clothes, wealth, food, praise, and learning, all depart From him on gambler's gain who sets his heart |
| Explanation: The habit of gambling prevents the attainment of these five: clothing, wealth, food, fame and learning |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 94 - சூது, குறள் : 939 |
| 10 இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற் றுயிர் |
| பொருள்(விளக்கம்): பொருளை இழக்க இழக்கச் சூதாட்டத்தின் மீது ஏற்படுகிற ஆசையும், உடலுக்குத் துன்பம் தொடர்ந்து வரவர உயிர்மீது கொள்ளுகிற ஆசையும் ஒன்றேதான் |
| Transliteration: Izhaththoru�um Kaadhalikkum Soodhepol ThunpamUzhaththoru�um Kaadhatru Uyir |
| Couplet: Howe'er he lose, the gambler's heart is ever in the play; E'en so the soul, despite its griefs, would live on earth alway |
| Explanation: As the gambler loves (his vice) the more he loses by it, so does the soul love (the body) the more it suffers through it |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 94 - சூது, குறள் : 940 |