srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


பொருட்பால்

88. பகைத்திரந்தெறிதல்

1  பகையென்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று
பொருள்(விளக்கம்): பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக்கூடாது
Transliteration: Pakaiennum Panpi Ladhanai OruvanNakaiyeyum Ventarpaatru Andru
Couplet: For Hate, that ill-conditioned thing not e'en in jest
Let any evil longing rule your breast
Explanation: The evil of hatred is not of a nature to be desired by one even in sport
பால் : பொருட்பால், அதிகாரம் : 88 - பகைத்திரந்தெறிதல், குறள் : 871
2  வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை
பொருள்(விளக்கம்): படைக்கலன்களை உடைய வீரர்களிடம் கூடப் பகை கொள்ளலாம் ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெருமக்களுடன் பகை கொள்ளக் கூடாது
Transliteration: Viller Uzhavar Pakaikolinum KollarkaSoller Uzhavar Pakai
Couplet: Although you hate incur of those whose ploughs are bows,
Make not the men whose ploughs are words your foes
Explanation: Though you may incur the hatred of warriors whose ploughs are bows, incur not that of ministers whose ploughs are words
பால் : பொருட்பால், அதிகாரம் : 88 - பகைத்திரந்தெறிதல், குறள் : 872
3  ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்
பொருள்(விளக்கம்): தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும்
Transliteration: Emur Ravarinum Ezhai ThamiyanaaipPallaar Pakaikol Pavan
Couplet: Than men of mind diseased, a wretch more utterly forlorn,
Is he who stands alone, object of many foeman's scorn
Explanation: He who being alone, incurs the hatred of many is more infatuated than even mad men
பால் : பொருட்பால், அதிகாரம் : 88 - பகைத்திரந்தெறிதல், குறள் : 873
4  பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற் றுலகு
பொருள்(விளக்கம்): பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பெருந்தன்மையான பண்பை இந்த உலகமே போற்றிப் புகழும்
Transliteration: Pakainatpaak Kontozhukum Panputai YaalanThakaimaikkan Thangitru Ulaku
Couplet: The world secure on his dexterity depends,
Whose worthy rule can change his foes to friends
Explanation: Whose worthy rule can change his foes to friends
பால் : பொருட்பால், அதிகாரம் : 88 - பகைத்திரந்தெறிதல், குறள் : 874
5  தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன்
இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று
பொருள்(விளக்கம்): தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்
Transliteration: Thandhunai Indraal Pakaiyirantaal ThaanoruvanIndhunaiyaak Kolkavatrin Ondru
Couplet: Without ally, who fights with twofold enemy o'ermatched,
Must render one of these a friend attached
Explanation: He who is alone and helpless while his foes are two should secure one of them as an agreeable help (to himself)
பால் : பொருட்பால், அதிகாரம் : 88 - பகைத்திரந்தெறிதல், குறள் : 875
6  தேறினுந் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்
பொருள்(விளக்கம்): பகைவரைப்பற்றி ஆராய்ந்து தெளிவடைந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அதற்கிடையே ஒரு கேடு வரும்போது அந்தப் பகைவருடன் அதிகம் நெருங்காமல் நட்புக் காட்டியும் அவர்களைப் பிரிந்து விடாமலேயே பகை கொண்டும் இருப்பதே நலமாகும்
Transliteration: Thera�num Theraa Vitinum AzhivinkanTheraan Pakaaan Vital
Couplet: Whether you trust or not, in time of sore distress,
Questions of diff'rence or agreement cease to press
Explanation: Though (one's foe is) aware or not of one's misfortune one should act so as neither to join nor separate (from him)
பால் : பொருட்பால், அதிகாரம் : 88 - பகைத்திரந்தெறிதல், குறள் : 876
7  நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து
பொருள்(விளக்கம்): தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது
Transliteration: Novarka Nondhadhu Ariyaarkku MevarkaMenmai Pakaivar Akaththu
Couplet: To those who know them not, complain not of your woes;
Nor to your foeman's eyes infirmities disclose
Explanation: Relate not your suffering even to friends who are ignorant of it, nor refer to your weakness in the presence of your foes
பால் : பொருட்பால், அதிகாரம் : 88 - பகைத்திரந்தெறிதல், குறள் : 877
8  வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு
பொருள்(விளக்கம்): வழிவகை உணர்ந்து, தன்னையும் வலிமைப்படுத்திக் கொண்டு, தற்காப்பும் தேடிக் கொண்டவரின் முன்னால் பகையின் ஆணவம் தானாகவே ஒடுங்கி விடும்
Transliteration: Vakaiyarindhu Tharseydhu Tharkaappa MaayumPakaivarkan Patta Serukku
Couplet: Know thou the way, then do thy part, thyself defend;
Thus shall the pride of those that hate thee have an end
Explanation: The joy of one's foes will be destroyed if one guards oneself by knowing the way (of acting) and securing assistance
பால் : பொருட்பால், அதிகாரம் : 88 - பகைத்திரந்தெறிதல், குறள் : 878
9  இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து
பொருள்(விளக்கம்): முள்மரத்தை, அது சிறிய கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவது போல, பகையையும், அது முற்றுவதற்கு முன்பே வீழ்த்திட வேண்டும்
Transliteration: Ilaidhaaka Mulmaram Kolka KalaiyunarKaikollum Kaazhththa Itaththu
Couplet: Destroy the thorn, while tender point can work thee no offence;
Matured by time, 'twill pierce the hand that plucks it thence
Explanation: A thorny tree should be felled while young, (for) when it is grown it will destroy the hand of the feller
பால் : பொருட்பால், அதிகாரம் : 88 - பகைத்திரந்தெறிதல், குறள் : 879
10  உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்
பொருள்(விளக்கம்): பகைவரின் ஆணவத்தைக் குலைக்க முடியாதவர்கள், சுவாசிக்கிற காரணத்தினாலேயே, உயிரோடிருப்பதாக நிச்சயமாகச் சொல்ல முடியாது
Transliteration: Uyirppa Ularallar Mandra SeyirppavarSemmal Sidhaikkalaa Thaar
Couplet: But breathe upon them, and they surely die,
Who fail to tame the pride of angry enemy
Explanation: Those who do not destroy the pride of those who hate (them) will certainly not exist even to breathe
பால் : பொருட்பால், அதிகாரம் : 88 - பகைத்திரந்தெறிதல், குறள் : 880
Page 88 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com