srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


காமத்துப்பால்

128. குறிபரிவுறுத்தல்

1  கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு
பொருள்(விளக்கம்): வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல்
Transliteration: Karappinung Kaiyikan Thollaanin UnkanUraikkal Uruvadhon Runtu
Couplet: Thou hid'st it, yet thine eye, disdaining all restraint,
Something, I know not, what, would utter of complaint
Explanation: Though you would conceal (your feelings), your painted eyes would not, for, transgressing (their bounds), they tell (me) something
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 128 - குறிபரிவுறுத்தல், குறள் : 1271
2  கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது
பொருள்(விளக்கம்): கண்நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் கொண்ட என் காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே பேரழகாகும்
Transliteration: Kanniraindha Kaarikaik Kaamperdhot PedhaikkupPenniraindha Neermai Peridhu
Couplet: The simple one whose beauty fills mine eye, whose shoulders curve
Like bambu stem, hath all a woman's modest sweet reserve
Explanation: Unusually great is the female simplicity of your maid whose beauty fills my eyes and whose shoulders resemble the bamboo
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 128 - குறிபரிவுறுத்தல், குறள் : 1272
3  மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன் றுண்டு
பொருள்(விளக்கம்): மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது
Transliteration: Maniyil Thikazhdharu Noolpol MatandhaiAniyil Thikazhvadhondru Untu
Couplet: As through the crystal beads is seen the thread on which they 're strung
So in her beauty gleams some thought cannot find a tongue
Explanation: There is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gems
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 128 - குறிபரிவுறுத்தல், குறள் : 1273
4  முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு
பொருள்(விளக்கம்): மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது
Transliteration: Mukaimokkul Ulladhu Naatrampol PedhaiNakaimokkul Ulladhon Runtu
Couplet: As fragrance in the opening bud, some secret lies
Concealed in budding smile of this dear damsel's eyes
Explanation: There is something in the unmatured smile of this maid like the fragrance that is contained in an unblossomed bud
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 128 - குறிபரிவுறுத்தல், குறள் : 1274
5  செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன் றுடைத்து
பொருள்(விளக்கம்): வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் வடிவழகியின் குறும்புத்தனமான பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது
Transliteration: Seridhoti Seydhirandha Kallam UrudhuyarTheerkkum Marundhondru Utaiththu
Couplet: The secret wiles of her with thronging armlets decked,
Are medicines by which my raising grief is checked
Explanation: The well-meant departure of her whose bangles are tight-fitting contains a remedy that can cure my great sorrow
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 128 - குறிபரிவுறுத்தல், குறள் : 1275
6  பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து
பொருள்(விளக்கம்): ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவதானது மீண்டும் அவர் என்னைப் பிரிந்து செல்லப் போகிற குறிப்பை உணர்த்துவது போல் இருக்கிறதே
Transliteration: Peridhaatrip Petpak Kalaththal AridhaatriAnpinmai Soozhva Thutaiththu
Couplet: While lovingly embracing me, his heart is only grieved:
It makes me think that I again shall live of love bereaved
Explanation: The embrace that fills me with comfort and gladness is capable of enduring (my former) sorrow and meditating on his want of love
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 128 - குறிபரிவுறுத்தல், குறள் : 1276
7  தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை
பொருள்(விளக்கம்): குளிர்ந்த நீர்த் துறைக்கு உரிய காதலன் உடலால் கூடியிருக்கும் போது, உள்ளத்தால் பிரியும் நினைவு கொண்டதை என் வளையல்கள் எனக்கு முன்னரே உணர்ந்து கழன்றன போலும்!
Transliteration: Thannan Thuraivan Thanandhamai NamminumMunnam Unarndha Valai
Couplet: My severance from the lord of this cool shore,
My very armlets told me long before
Explanation: My bracelets have understood before me the (mental) separation of him who rules the cool seashore
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 128 - குறிபரிவுறுத்தல், குறள் : 1277
8  நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து
பொருள்(விளக்கம்): நேற்றுத்தான் எம் காதலர் பிரிந்து சென்றார்; எனினும், பல நாட்கள் கழிந்தன என்பது போல் பசலை நிறம் எம்மைப் பற்றிக் கொண்டதே
Transliteration: Nerunatruch Chendraarem Kaadhalar YaamumEzhunaalem Meni Pasandhu
Couplet: My loved one left me, was it yesterday?
Days seven my pallid body wastes away
Explanation: It was but yesterday my lover departed (from me); and it is seven days since my complexion turned sallow
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 128 - குறிபரிவுறுத்தல், குறள் : 1278
9  தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது
பொருள்(விளக்கம்): பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவன் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினான்
Transliteration: Thotinokki Mendholum Nokki AtinokkiAqdhaan Tavalsey Thadhu
Couplet: She viewed her tender arms, she viewed the armlets from them slid;
She viewed her feet: all this the lady did
Explanation: She looked at her bracelets, her tender shoulders, and her feet; this was what she did there (significantly)
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 128 - குறிபரிவுறுத்தல், குறள் : 1279
10  பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு
பொருள்(விளக்கம்): காதல் வேட்கையைக் கண்களால் உணர்த்திக் காதலனுடன் போவதற்கு இரந்து நிற்கும்போது பெண்மைக்குப் பெண்மை சேர்த்தாற் போன்று இருக்கின்றது
Transliteration: Penninaal Penmai Utaiththenpa KanninaalKaamanoi Solli Iravu
Couplet: To show by eye the pain of love, and for relief to pray,
Is womanhood's most womanly device, men say
Explanation: To express their love-sickness by their eyes and resort to begging bespeaks more than ordinary female excellence
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 128 - குறிபரிவுறுத்தல், குறள் : 1280
Page 128 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com