srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


பொருட்பால்

62. ஆள்வினையுடைமை

1  ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்
பொருள்(விளக்கம்): ``ஊழ்'' என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள் சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்
Transliteration: Oozhaiyum Uppakkam Kaanpar UlaivindrithThaazhaadhu Ugnatru Pavar
Couplet: Who strive with undismayed, unfaltering mind,
At length shall leave opposing fate behind
Explanation: They who labour on, without fear and without fainting will see even fate (put) behind their back
பால் : பொருட்பால், அதிகாரம் : 62 - ஆள்வினையுடைமை, குறள் : 611
2  அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்
பொருள்(விளக்கம்): நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்
Transliteration: Arumai Utaiththendru Asaavaamai VentumPerumai Muyarsi Tharum
Couplet: Say not, 'Tis hard', in weak, desponding hour,
For strenuous effort gives prevailing power
Explanation: Yield not to the feebleness which says, 'this is too difficult to be done'; labour will give the greatness (of mind) which is necessary (to do it)
பால் : பொருட்பால், அதிகாரம் : 62 - ஆள்வினையுடைமை, குறள் : 612
3  வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு
பொருள்(விளக்கம்): எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும் இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்
Transliteration: Vinaikkan Vinaiketal Ompal VinaikkuraiTheerndhaarin Theerndhandru Ulaku
Couplet: In action be thou, 'ware of act's defeat;
The world leaves those who work leave incomplete
Explanation: Take care not to give up exertion in the midst of a work; the world will abandon those who abandon their unfinished work
பால் : பொருட்பால், அதிகாரம் : 62 - ஆள்வினையுடைமை, குறள் : 613
4  தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு
பொருள்(விளக்கம்): பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும்
Transliteration: Thaalaanmai Ennum Thakaimaikkan ThangitreVelaanmai Ennunj Cherukku
Couplet: In strenuous effort doth reside
The power of helping others: noble pride
Explanation: The lustre of munificence will dwell only with the dignity of laboriousness or efforts
பால் : பொருட்பால், அதிகாரம் : 62 - ஆள்வினையுடைமை, குறள் : 614
5  தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்
பொருள்(விளக்கம்): ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை
Transliteration: Thaalaanmai Illaadhaan Velaanmai PetikaiVaalaanmai Polak Ketum
Couplet: Beneficent intent in men by whom no strenuous work is wrought,
Like battle-axe in sexless being's hand availeth nought
Explanation: The liberality of him, who does not labour, will fail, like the manliness of a hermaphrodite, who has a sword in its hand
பால் : பொருட்பால், அதிகாரம் : 62 - ஆள்வினையுடைமை, குறள் : 615
6  இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்
பொருள்(விளக்கம்): தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணாவான்
Transliteration: Inpam Vizhaiyaan Vinaivizhaivaan ThankelirThunpam Thutaiththoondrum Thoon
Couplet: Whose heart delighteth not in pleasure, but in action finds delight,
He wipes away his kinsmen's grief and stands the pillar of their might
Explanation: He who desires not pleasure, but desires labour, will be a pillar to sustain his relations, wiping away their sorrows
பால் : பொருட்பால், அதிகாரம் : 62 - ஆள்வினையுடைமை, குறள் : 616
7  முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
பொருள்(விளக்கம்): முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்
Transliteration: Muyarsi Thiruvinai Aakkum MuyatrinmaiInmai Pukuththi Vitum
Couplet: Effort brings fortune's sure increase,
Its absence brings to nothingness
Explanation: Labour will produce wealth; idleness will bring poverty
பால் : பொருட்பால், அதிகாரம் : 62 - ஆள்வினையுடைமை, குறள் : 617
8  மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்
பொருள்(விளக்கம்): திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்
Transliteration: Matiyulaal Maamukati Enpa MatiyilaanThaalulaan Thaamaraiyi Naal
Couplet: In sluggishness is seen misfortune's lurid form, the wise declare;
Where man unslothful toils, she of the lotus flower is there
Explanation: They say that the black Mudevi (the goddess of adversity) dwells with laziness, and the Latchmi (the goddess of prosperity) dwells with the labour of the industrious
பால் : பொருட்பால், அதிகாரம் : 62 - ஆள்வினையுடைமை, குறள் : 618
9  பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்
தாள்வினை இன்மை பழி
பொருள்(விளக்கம்): விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்
Transliteration: Poriyinmai Yaarkkum Pazhiyandru ArivarindhuAalvinai Inmai Pazhi
Couplet: 'Tis no reproach unpropitious fate should ban;
But not to do man's work is foul disgrace to man
Explanation: Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgrace
பால் : பொருட்பால், அதிகாரம் : 62 - ஆள்வினையுடைமை, குறள் : 619
10  தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
பொருள்(விளக்கம்): கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்
Transliteration: Theyvaththaan Aakaa Theninum MuyarsidhanMeyvaruththak Kooli Tharum
Couplet: Though fate-divine should make your labour vain;
Effort its labour's sure reward will gain
Explanation: Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward
பால் : பொருட்பால், அதிகாரம் : 62 - ஆள்வினையுடைமை, குறள் : 620
Page 62 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com