
2. வான் சிறப்பு
| 1 வானின் றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று |
| பொருள்(விளக்கம்): உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது |
| Transliteration: Vaannindru Ulakam Vazhangi VarudhalaalThaanamizhdham Endrunarar Paatru |
| Couplet: The world its course maintains through life that rain unfailing gives; Thus rain is known the true ambrosial food of all that lives |
| Explanation: By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 2 - வான் சிறப்பு, குறள் : 11 |
| 2 துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉ மழை |
| பொருள்(விளக்கம்): யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது |
| Transliteration: Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith ThuppaarkkuthThuppaaya Thooum Mazhai |
| Couplet: The rain makes pleasant food for eaters rise; As food itself, thirst-quenching draught supplies |
| Explanation: Rain produces good food, and is itself food |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 2 - வான் சிறப்பு, குறள் : 12 |
| 3 விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின் றுடற்றும் பசி |
| பொருள்(விளக்கம்): கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும் |
| Transliteration: Vinindru Poippin Virineer ViyanulakaththuUlnindru Utatrum Pasi |
| Couplet: If clouds, that promised rain, deceive, and in the sky remain, Famine, sore torment, stalks o'er earth's vast ocean-girdled plain |
| Explanation: If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 2 - வான் சிறப்பு, குறள் : 13 |
| 4 ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால் |
| பொருள்(விளக்கம்): மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும் |
| Transliteration: Erin Uzhaaar Uzhavar PuyalennumVaari Valangundrik Kaal |
| Couplet: If clouds their wealth of waters fail on earth to pour, The ploughers plough with oxen's sturdy team no more |
| Explanation: If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 2 - வான் சிறப்பு, குறள் : 14 |
| 5 கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை |
| பொருள்(விளக்கம்): பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும் |
| Transliteration: Ketuppadhooum Kettaarkkuch Chaarvaaimar RaangeEtuppadhooum Ellaam Mazhai |
| Couplet: 'Tis rain works all: it ruin spreads, then timely aid supplies; As, in the happy days before, it bids the ruined rise |
| Explanation: Rain by its absence ruins men; and by its existence restores them to fortune |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 2 - வான் சிறப்பு, குறள் : 15 |
| 6 விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண் பரிது |
| பொருள்(விளக்கம்): விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும் |
| Transliteration: Visumpin Thuliveezhin Allaalmar RaangePasumpul Thalaikaanpu Aridhu |
| Couplet: If from the clouds no drops of rain are shed 'Tis rare to see green herb lift up its head |
| Explanation: 4 If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 2 - வான் சிறப்பு, குறள் : 16 |
| 7 நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் |
| பொருள்(விளக்கம்): ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும் மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும் |
| Transliteration: Netungatalum Thanneermai Kundrum ThatindhezhiliThaannalkaa Thaaki Vitin |
| Couplet: If clouds restrain their gifts and grant no rain, The treasures fail in ocean's wide domain |
| Explanation: Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain) |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 2 - வான் சிறப்பு, குறள் : 17 |
| 8 சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு |
| பொருள்(விளக்கம்): வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது? |
| Transliteration: Sirappotu Poosanai Sellaadhu VaanamVarakkumel Vaanorkkum Eentu |
| Couplet: If heaven grow dry, with feast and offering never more, Will men on earth the heavenly ones adore |
| Explanation: If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 2 - வான் சிறப்பு, குறள் : 18 |
| 9 தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின் |
| பொருள்(விளக்கம்): இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும் |
| Transliteration: Thaanam Thavamirantum Thangaa ViyanulakamVaanam Vazhangaa Thenin |
| Couplet: If heaven its watery treasures ceases to dispense, Through the wide world cease gifts, and deeds of 'penitence' |
| Explanation: If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 2 - வான் சிறப்பு, குறள் : 19 |
| 10 நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு |
| பொருள்(விளக்கம்): உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும் |
| Transliteration: Neerindru Amaiyaadhu Ulakenin YaaryaarkkumVaanindru Amaiyaadhu Ozhukku |
| Couplet: When water fails, functions of nature cease, you say; Thus when rain fails, no men can walk in 'duty's ordered way' |
| Explanation: If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without rain there cannot be the flowing of water |
| பால் : அறத்துப்பால், அதிகாரம் : 2 - வான் சிறப்பு, குறள் : 20 |