
83. கூடா நட்பு
| 1 சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு |
| பொருள்(விளக்கம்): மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின் நட்பானது, ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போல் இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பாகும் |
| Transliteration: Seeritam Kaanin Eridharkup PattataiNeraa Nirandhavar Natpu |
| Couplet: Anvil where thou shalt smitten be, when men occasion find, Is friendship's form without consenting mind |
| Explanation: The friendship of those who behave like friends without inward affection is a weapon that may be thrown when a favourable opportunity presents itself |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 83 - கூடா நட்பு, குறள் : 821 |
| 2 இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும் |
| பொருள்(விளக்கம்): உற்றாராக இல்லாமல் உற்றார்போல நடிப்பவர்களின் நட்பு, மகளிருக்குரிய நற்பண்பு இல்லாமல் அப்பண்பு உள்ளவர் போல நடிக்கும் விலை மகளிரின் மனம்போல உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கும் |
| Transliteration: Inampondru Inamallaar Kenmai MakalirManampola Veru Patum |
| Couplet: Friendship of those who seem our kin, but are not really kind Will change from hour to hour like woman's mind |
| Explanation: The friendship of those who seem to be friends while they are not, will change like the love of women |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 83 - கூடா நட்பு, குறள் : 822 |
| 3 பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது |
| பொருள்(விளக்கம்): அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வு படைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும் |
| Transliteration: Palanalla Katrak Kataiththu MananallarAakudhal Maanaark Karidhu |
| Couplet: To heartfelt goodness men ignoble hardly may attain, Although abundant stores of goodly lore they gain |
| Explanation: Though (one's) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 83 - கூடா நட்பு, குறள் : 823 |
| 4 முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும் |
| பொருள்(விளக்கம்): சிரித்துப் பேசி நம்மைச் சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்கு அஞ்சி ஒதுங்கிட வேண்டும் |
| Transliteration: Mukaththin Iniya Nakaaa AkaththinnaaVanjarai Anjap Patum |
| Couplet: 'Tis fitting you should dread dissemblers' guile, Whose hearts are bitter while their faces smile |
| Explanation: One should fear the deceitful who smile sweetly with their face but never love with their heart |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 83 - கூடா நட்பு, குறள் : 824 |
| 5 மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற் றன்று |
| பொருள்(விளக்கம்): மனம் வேறு செயல் வேறாக இருப்பவர்களின் வார்த்தைகளை நம்பி எந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க இயலாது |
| Transliteration: Manaththin Amaiyaa Thavarai EnaiththondrumSollinaal Therarpaatru Andru |
| Couplet: When minds are not in unison, 'its never; just, In any words men speak to put your trust |
| Explanation: In nothing whatever is it proper to rely on the words of those who do not love with their heart |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 83 - கூடா நட்பு, குறள் : 825 |
| 6 நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும் |
| பொருள்(விளக்கம்): பகைவர், நண்பரைப்போல இனிமையாகப் பேசினாலும் அந்தச் சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும் |
| Transliteration: Nattaarpol Nallavai Sollinum OttaarsolOllai Unarap Patum |
| Couplet: Though many goodly words they speak in friendly tone, The words of foes will speedily be known |
| Explanation: Though (one's) foes may utter good things as though they were friends, once will at once understand (their evil, import) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 83 - கூடா நட்பு, குறள் : 826 |
| 7 சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான் |
| பொருள்(விளக்கம்): பகைவரிடம் காணப்படும் சொல் வணக்கம் என்பது வில்லின் வணக்கத்தைப் போல் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால், அதனை நம்பக் கூடாது |
| Transliteration: Solvanakkam Onnaarkan Kollarka VilvanakkamTheengu Kuriththamai Yaan |
| Couplet: To pliant speech from hostile lips give thou no ear; 'Tis pliant bow that show the deadly peril near |
| Explanation: Since the bending of the bow bespeaks evil, one should not accept (as good) the humiliating speeches of one's foes |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 83 - கூடா நட்பு, குறள் : 827 |
| 8 தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து |
| பொருள்(விளக்கம்): பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்கள், கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும் |
| Transliteration: Thozhudhakai Yullum Pataiyotungum OnnaarAzhudhakan Neerum Anaiththu |
| Couplet: In hands that worship weapon ten hidden lies; Such are the tears that fall from foeman's eyes |
| Explanation: A weapon may be hid in the very hands with which (one's) foes adore (him) (and) the tears they shed are of the same nature |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 83 - கூடா நட்பு, குறள் : 828 |
| 9 மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து நட்பினுட் சாப்புல்லற் பாற்று |
| பொருள்(விளக்கம்): வெளித்தோற்றத்திற்கு நண்பரைப்போல் நகைமுகம் காட்டி மகிழ்ந்து, உள்ளுக்குள் பகையுணர்வுடன் இகழ்பவரின் நட்பை, நலிவடையுமாறு செய்திட நாமும் அதே முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் |
| Transliteration: Mikachcheydhu Thammellu Vaarai NakachcheydhuNatpinul Saappullar Paatru |
| Couplet: 'Tis just, when men make much of you, and then despise, To make them smile, and slap in friendship's guise |
| Explanation: It is the duty of kings to affect great love but make it die (inwardly); as regard those foes who shew them great friendship but despise them (in their heart) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 83 - கூடா நட்பு, குறள் : 829 |
| 10 பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட் டகநட் பொரீஇ விடல் |
| பொருள்(விளக்கம்): பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் நட்பையும் விட்டுவிட வேண்டும் |
| Transliteration: Pakainatpaam Kaalam Varungaal MukanattuAkanatpu Oreei Vital |
| Couplet: When time shall come that foes as friends appear, Then thou, to hide a hostile heart, a smiling face may'st wear |
| Explanation: When one's foes begin to affect friendship, one should love them with one's looks, and, cherishing no love in the heart, give up (even the former) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 83 - கூடா நட்பு, குறள் : 830 |