srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


பொருட்பால்

87. பகைமாட்சி

1  கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி
பொருள்(விளக்கம்): போர்முறை கற்றிடாத பகைவர்களைக்கூட எதிர்ப்பதற்குத் தயக்கம் காட்டுகிறவர்கள், உண்மையான வீரர்களை எப்படி எதிர்கொள்வார்கள் எனக் கேலி புரிந்து, புகழ் அவர்களை அணுகாமலே விலகிப் போய்விடும்
Transliteration: Kallaan Vekulum Siruporul EgngnaandrumOllaanai Ollaa Tholi
Couplet: The task of angry war with men unlearned in virtue's lore
Who will not meet, glory shall meet him never more
Explanation: The light (of fame) will never be gained by him who gains not the trifling reputation of having fought an unlearned (foe)
பால் : பொருட்பால், அதிகாரம் : 87 - பகைமாட்சி, குறள் : 861
2  வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை
பொருள்(விளக்கம்): மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும்
Transliteration: Valiyaarkku Maaretral Ompuka OmpaaMeliyaarmel Meka Pakai
Couplet: With stronger than thyself, turn from the strife away;
With weaker shun not, rather court the fray
Explanation: Avoid offering resistance to the strong; (but) never fail to cherish enmity towards the weak
பால் : பொருட்பால், அதிகாரம் : 87 - பகைமாட்சி, குறள் : 862
3  அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்றுவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு
பொருள்(விளக்கம்): உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல், தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்?
Transliteration: Anpilan Aandra Thunaiyilan ThaandhuvvaanEnpariyum Edhilaan Thuppu
Couplet: No kinsman's love, no strength of friends has he;
How can he bear his foeman's enmity
Explanation: How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe ?
பால் : பொருட்பால், அதிகாரம் : 87 - பகைமாட்சி, குறள் : 863
4  அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு
பொருள்(விளக்கம்): அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும், இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்
Transliteration: Anjum Ariyaan Amaivilan EekalaanThanjam Eliyan Pakaikku
Couplet: A craven thing! knows nought, accords with none, gives nought away;
To wrath of any foe he falls an easy prey
Explanation: In the estimation of foes miserably weak is he, who is timid, ignorant, unsociable and niggardly
பால் : பொருட்பால், அதிகாரம் : 87 - பகைமாட்சி, குறள் : 864
5  நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது
பொருள்(விளக்கம்): சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம்
Transliteration: Neengaan Vekuli Niraiyilan EgngnaandrumYaanganum Yaarkkum Elidhu
Couplet: His wrath still blazes, every secret told; each day
This man's in every place to every foe an easy prey
Explanation: He who neither refrains from anger nor keeps his secrets will at all times and in all places be easily conquered by all
பால் : பொருட்பால், அதிகாரம் : 87 - பகைமாட்சி, குறள் : 865
6  வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க் கினிது
பொருள்(விளக்கம்): நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்
Transliteration: Vazhinokkaan Vaaippana Seyyaan PazhinokkaanPanpilan Patraarkku Inidhu
Couplet: No way of right he scans, no precepts bind, no crimes affright,
No grace of good he owns; such man's his foes' delight
Explanation: (A) pleasing (object) to his foes is he who reads not moral works, does nothing that is enjoined by them cares not for reproach and is not possessed of good qualities
பால் : பொருட்பால், அதிகாரம் : 87 - பகைமாட்சி, குறள் : 866
7  காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்
பொருள்(விளக்கம்): சிந்திக்காமலே சினம் கொள்பனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்
Transliteration: Kaanaach Chinaththaan Kazhiperung KaamaththaanPenaamai Penap Patum
Couplet: Blind in his rage, his lustful passions rage and swell;
If such a man mislikes you, like it well
Explanation: Highly to be desired is the hatred of him whose anger is blind, and whose lust increases beyond measure
பால் : பொருட்பால், அதிகாரம் : 87 - பகைமாட்சி, குறள் : 867
8  கொடுத்துங் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை
பொருள்(விளக்கம்): தன்னோடு இருந்துகொண்டே தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனைப் பொருள் கொடுத்தாவது பகைவனாக்கிக் கொள்ள வேண்டும்
Transliteration: Kotuththum Kolalventum Mandra AtuththirundhuMaanaadha Seyvaan Pakai
Couplet: Unseemly are his deeds, yet proffering aid, the man draws nigh:
His hate- 'tis cheap at any price- be sure to buy
Explanation: It is indeed necessary to obtain even by purchase the hatred of him who having begun (a work) does what is not conductive (to its accomplishment)
பால் : பொருட்பால், அதிகாரம் : 87 - பகைமாட்சி, குறள் : 868
9  குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்
கினனிலனாம் ஏமாப் புடைத்து
பொருள்(விளக்கம்): குணக்கேடராகவும், குற்றங்கள் மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால், அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார்
Transliteration: Kunanilanaaik Kutram Palavaayin MaatraarkkuInanilanaam Emaap Putaiththu
Couplet: No gracious gifts he owns, faults many cloud his fame;
His foes rejoice, for none with kindred claim
Explanation: He will become friendless who is without (any good) qualities and whose faults are many; (such a character) is a help to (his) foes
பால் : பொருட்பால், அதிகாரம் : 87 - பகைமாட்சி, குறள் : 869
10  செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்
பொருள்(விளக்கம்): அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும் பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும்
Transliteration: Seruvaarkkuch Chenikavaa Inpam ArivilaaAnjum Pakaivarp Perin
Couplet: The joy of victory is never far removed from those
Who've luck to meet with ignorant and timid foes
Explanation: There will be no end of lofty delights to the victorious, if their foes are (both) ignorant and timid
பால் : பொருட்பால், அதிகாரம் : 87 - பகைமாட்சி, குறள் : 870
Page 87 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com