
45. பெரியாரை துணைக்கோடல்
| 1 அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல் |
| பொருள்(விளக்கம்): அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் |
| Transliteration: Aranarindhu Mooththa Arivutaiyaar KenmaiThiranarindhu Therndhu Kolal |
| Couplet: As friends the men who virtue know, and riper wisdom share, Their worth weighed well, the king should choose with care |
| Explanation: Let (a king) ponder well its value, and secure the friendship of men of virtue and of mature knowledge |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 45 - பெரியாரை துணைக்கோடல், குறள் : 441 |
| 2 உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல் |
| பொருள்(விளக்கம்): வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும் |
| Transliteration: Utranoi Neekki Uraaamai MurkaakkumPetriyaarp Penik Kolal |
| Couplet: Cherish the all-accomplished men as friends, Whose skill the present ill removes, from coming ill defends |
| Explanation: Let (a king) procure and kindly care for men who can overcome difficulties when they occur, and guard against them before they happen |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 45 - பெரியாரை துணைக்கோடல், குறள் : 442 |
| 3 அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல் |
| பொருள்(விளக்கம்): பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும் |
| Transliteration: Ariyavatru Lellaam Aridhe PeriyaaraipPenith Thamaraak Kolal |
| Couplet: To cherish men of mighty soul, and make them all their own, Of kingly treasures rare, as rarest gift is known |
| Explanation: To cherish great men and make them his own, is the most difficult of all difficult things |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 45 - பெரியாரை துணைக்கோடல், குறள் : 443 |
| 4 தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை |
| பொருள்(விளக்கம்): அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும் |
| Transliteration: Thammir Periyaar Thamaraa OzhukudhalVanmaiyu Lellaan Thalai |
| Couplet: To live with men of greatness that their own excels, As cherished friends, is greatest power that with a monarch dwells |
| Explanation: So to act as to make those men, his own, who are greater than himself is of all powers the highest |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 45 - பெரியாரை துணைக்கோடல், குறள் : 444 |
| 5 சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் |
| பொருள்(விளக்கம்): கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும் |
| Transliteration: Soozhvaarkan Naaka Ozhukalaan MannavanSoozhvaaraik Soozhndhu Kolal |
| Couplet: The king, since counsellors are monarch's eyes, Should counsellors select with counsel wise |
| Explanation: As a king must use his ministers as eyes (in managing his kingdom), let him well examine their character and qualifications before he engages them |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 45 - பெரியாரை துணைக்கோடல், குறள் : 445 |
| 6 தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில் |
| பொருள்(விளக்கம்): அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது |
| Transliteration: Thakkaa Rinaththanaaith Thaanozhuka VallaanaichChetraar Seyakkitandha Thil |
| Couplet: The king, who knows to live with worthy men allied, Has nought to fear from any foeman's pride |
| Explanation: There will be nothing left for enemies to do, against him who has the power of acting (so as to secure) the fellowship of worthy men |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 45 - பெரியாரை துணைக்கோடல், குறள் : 446 |
| 7 இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே கெடுக்குந் தகைமை யவர் |
| பொருள்(விளக்கம்): இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு? |
| Transliteration: Itikkun Thunaiyaarai Yaalvarai YaareKetukkun Thakaimai Yavar |
| Couplet: What power can work his fall, who faithful ministers Employs, that thunder out reproaches when he errs |
| Explanation: Who are great enough to destroy him who has servants that have power to rebuke him ? |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 45 - பெரியாரை துணைக்கோடல், குறள் : 447 |
| 8 இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் |
| பொருள்(விளக்கம்): குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும் |
| Transliteration: Itippaarai Illaadha Emaraa MannanKetuppaa Rilaanung Ketum |
| Couplet: The king with none to censure him, bereft of safeguards all, Though none his ruin work, shall surely ruined fall |
| Explanation: The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be no one to destroy him |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 45 - பெரியாரை துணைக்கோடல், குறள் : 448 |
| 9 முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ் சார்பிலார்க் கில்லை நிலை |
| பொருள்(விளக்கம்): கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும் |
| Transliteration: Mudhalilaarkku Oodhiya Millai MadhalaiyaanjjchAarpilaark Killai Nilai |
| Couplet: Who owns no principal, can have no gain of usury; Who lacks support of friends, knows no stability |
| Explanation: 56 There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanence to |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 45 - பெரியாரை துணைக்கோடல், குறள் : 449 |
| 10 பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் |
| பொருள்(விளக்கம்): நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும் |
| Transliteration: Pallaar Pakai Kolalir Paththatuththa TheemaiththeNallaar Thotarkai Vital |
| Couplet: Than hate of many foes incurred, works greater woe Ten-fold, of worthy men the friendship to forego |
| Explanation: It is tenfold more injurious to abandon the friendship of the good, than to incur the hatred of the many |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 45 - பெரியாரை துணைக்கோடல், குறள் : 450 |