
95. மருந்து
| 1 மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று |
| பொருள்(விளக்கம்): வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும் |
| Transliteration: Mikinum Kuraiyinum Noiseyyum NoolorValimudhalaa Enniya Moondru |
| Couplet: The learned books count three, with wind as first; of these, As any one prevail, or fail; 'twill cause disease |
| Explanation: If (food and work are either) excessive or deficient, the three things enumerated by (medical) writers, flatulence, biliousness, and phlegm, will cause (one) disease |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 95 - மருந்து, குறள் : 941 |
| 2 மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய தற்றது போற்றி உணின் |
| பொருள்(விளக்கம்): உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை |
| Transliteration: Marundhena Ventaavaam Yaakkaikku ArundhiyadhuAtradhu Potri Unin |
| Couplet: No need of medicine to heal your body's pain, If, what you ate before digested well, you eat again |
| Explanation: No medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 95 - மருந்து, குறள் : 942 |
| 3 அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு |
| பொருள்(விளக்கம்): உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும் |
| Transliteration: Atraal Aravarindhu Unka AqdhutampuPetraan Netidhuykkum Aaru |
| Couplet: Who has a body gained may long the gift retain, If, food digested well, in measure due he eat again |
| Explanation: If (one's food has been) digested let one eat with moderation; (for) that is the way to prolong the life of an embodied soul |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 95 - மருந்து, குறள் : 943 |
| 4 அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து |
| பொருள்(விளக்கம்): உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும் |
| Transliteration: Atradhu Arindhu Kataippitiththu MaarallaThuykka Thuvarap Pasiththu |
| Couplet: Knowing the food digested well, when hunger prompteth thee, With constant care, the viands choose that well agree |
| Explanation: (First) assure yourself that your food has been digested and never fail to eat, when very hungry, whatever is not disagreeable (to you) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 95 - மருந்து, குறள் : 944 |
| 5 மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபா டில்லை உயிர்க்கு |
| பொருள்(விளக்கம்): உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை |
| Transliteration: Maarupaatu Illaadha Unti MaruththunninOorupaatu Illai Uyirkku |
| Couplet: With self-denial take the well-selected meal; So shall thy frame no sudden sickness feel |
| Explanation: There will be no disaster to one's life if one eats with moderation, food that is not disagreeable |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 95 - மருந்து, குறள் : 945 |
| 6 இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய் |
| பொருள்(விளக்கம்): அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதம் இயற்கை |
| Transliteration: Izhivarindhu Unpaankan Inpampol NirkumKazhiper Iraiyaankan Noi |
| Couplet: On modest temperance as pleasures pure, So pain attends the greedy epicure |
| Explanation: As pleasure dwells with him who eats moderately, so disease (dwells) with the glutton who eats voraciously |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 95 - மருந்து, குறள் : 946 |
| 7 தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும் |
| பொருள்(விளக்கம்): பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும் |
| Transliteration: Theeyala Vandrith Theriyaan PeridhunninNoyala Vindrip Patum |
| Couplet: Who largely feeds, nor measure of the fire within maintains, That thoughtless man shall feel unmeasured pains |
| Explanation: He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 95 - மருந்து, குறள் : 947 |
| 8 நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் |
| பொருள்(விளக்கம்): நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்) |
| Transliteration: Noinaati Noimudhal Naati AdhudhanikkumVaainaati Vaaippach Cheyal |
| Couplet: Disease, its cause, what may abate the ill: Let leech examine these, then use his skill |
| Explanation: Let the physician enquire into the (nature of the) disease, its cause and its method of cure and treat it faithfully according to (medical rule) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 95 - மருந்து, குறள் : 948 |
| 9 உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல் |
| பொருள்(விளக்கம்): நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும் |
| Transliteration: Utraan Alavum Piniyalavum KaalamumKatraan Karudhich Cheyal |
| Couplet: The habitudes of patient and disease, the crises of the ill These must the learned leech think over well, then use his skill |
| Explanation: The learned (physician) should ascertain the condition of his patient; the nature of his disease, and the season (of the year) and (then) proceed (with his treatment) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 95 - மருந்து, குறள் : 949 |
| 10 உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென் றப்பானாற் கூற்றே மருந்து |
| பொருள்(விளக்கம்): நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது |
| Transliteration: Utravan Theerppaan Marundhuzhaich ChelvaanendruAppaal Naar Kootre Marundhu |
| Couplet: For patient, leech, and remedies, and him who waits by patient's side, The art of medicine must fourfold code of laws provide |
| Explanation: Medical science consists of four parts, viz, patient, physician, medicine and compounder; and each of these (again) contains four sub-divisions |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 95 - மருந்து, குறள் : 950 |