
86. இகல்
| 1 இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய் |
| பொருள்(விளக்கம்): மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும் |
| Transliteration: Ikalenpa Ellaa Uyirkkum PakalennumPanpinmai Paarikkum Noi |
| Couplet: Hostility disunion's plague will bring, That evil quality, to every living thing |
| Explanation: The disease which fosters the evil of disunion among all creatures is termed hatred by the wise |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 86 - இகல், குறள் : 851 |
| 2 பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை |
| பொருள்(விளக்கம்): வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஒருவன் ஈடுபடுகிறான் என்றாலும் அவனோடு கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்குத் துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும் |
| Transliteration: Pakalkarudhip Patraa Seyinum IkalkarudhiInnaasey Yaamai Thalai |
| Couplet: Though men disunion plan, and do thee much despite 'Tis best no enmity to plan, nor evil deeds requite |
| Explanation: Though disagreeable things may be done from (a feeling of) disunion, it is far better that nothing painful be done from (that of) hatred |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 86 - இகல், குறள் : 852 |
| 3 இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் தாவில் விளக்கம் தரும் |
| பொருள்(விளக்கம்): மனமாறுபாடு என்றும் நோயை யார் தங்கள் மனத்தை விட்டு அகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும் |
| Transliteration: Ikalennum Evvanoi Neekkin ThavalillaathThaavil Vilakkam Tharum |
| Couplet: If enmity, that grievous plague, you shun, Endless undying praises shall be won |
| Explanation: To rid one-self of the distressing dtsease of hatred will bestow (on one) a never-decreasing imperishable fame |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 86 - இகல், குறள் : 853 |
| 4 இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பங் கெடின் |
| பொருள்(விளக்கம்): துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான் அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும் |
| Transliteration: Inpaththul Inpam Payakkum IkalennumThunpaththul Thunpang Ketin |
| Couplet: Joy of joys abundant grows, When malice dies that woe of woes |
| Explanation: If hatred which is the greatest misery is destroyed, it will yield the greatest delight |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 86 - இகல், குறள் : 854 |
| 5 இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிகலூக்கும் தன்மை யவர் |
| பொருள்(விளக்கம்): மனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை |
| Transliteration: Ikaledhir Saaindhozhuka Vallaarai YaareMikalookkum Thanmai Yavar |
| Couplet: If men from enmity can keep their spirits free, Who over them shall gain the victory |
| Explanation: Who indeed would think of conquering those who naturally shrink back from hatred ? |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 86 - இகல், குறள் : 855 |
| 6 இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து |
| பொருள்(விளக்கம்): மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை விரைவில் தடம்புரண்டு கெட்டொழியும் |
| Transliteration: Ikalin Mikalinidhu Enpavan VaazhkkaiThavalum Ketalum Naniththu |
| Couplet: The life of those who cherished enmity hold dear, To grievous fault and utter death is near |
| Explanation: Failure and ruin are not far from him who says it is sweet to excel in hatred |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 86 - இகல், குறள் : 856 |
| 7 மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் இன்னா அறிவி னவர் |
| பொருள்(விளக்கம்): பகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள் வெற்றிக்கு வழிகாட்டும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள் |
| Transliteration: Mikalmeval Meypporul Kaanaar IkalmevalInnaa Arivi Navar |
| Couplet: The very truth that greatness gives their eyes can never see, Who only know to work men woe, fulfilled of enmity |
| Explanation: Who only know to work men woe, fulfilled of enmity |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 86 - இகல், குறள் : 857 |
| 8 இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனை மிகலூக்கின் ஊக்குமாங் கேடு |
| பொருள்(விளக்கம்): மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும் |
| Transliteration: Ikalirku Edhirsaaidhal Aakkam AdhanaiMikalookkin Ookkumaam Ketu |
| Couplet: 'Tis gain to turn the soul from enmity; Ruin reigns where this hath mastery |
| Explanation: Shrinking back from hatred will yield wealth; indulging in its increase will hasten ruin |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 86 - இகல், குறள் : 858 |
| 9 இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை மிகல்காணும் கேடு தரற்கு |
| பொருள்(விளக்கம்): ஒருவன் தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை நினைக்காமலே இருப்பான் ஆனால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்வதென்றால் அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான் |
| Transliteration: Ikalkaanaan Aakkam Varungaal AdhanaiMikalkaanum Ketu Thararku |
| Couplet: Men think not hostile thought in fortune's favouring hour, They cherish enmity when in misfortune's power |
| Explanation: At the approach of wealth one will not think of hatred (but) to secure one's ruin, one will look to its increase |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 86 - இகல், குறள் : 859 |
| 10 இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு |
| பொருள்(விளக்கம்): மனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும் நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெருமகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும் |
| Transliteration: Ikalaanaam Innaadha Ellaam NakalaanaamNannayam Ennum Serukku |
| Couplet: From enmity do all afflictive evils flow; But friendliness doth wealth of kindly good bestow |
| Explanation: All calamities are caused by hatred; but by the delight (of friendship) is caused the great wealth of good virtues |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 86 - இகல், குறள் : 860 |