srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


பொருட்பால்

46. சிற்றின‌‍ஞ்சேராமை

1  சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்
பொருள்(விளக்கம்): பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேர மாட்டார்கள் ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்
Transliteration: 451 Sitrinam Anjum Perumai SirumaidhaanSutramaach Choozhndhu Vitum
Couplet: The great of soul will mean association fear;
The mean of soul regard mean men as kinsmen dear
Explanation: (True) greatness fears the society of the base; it is only the low - minded who will regard them as friends
பால் : பொருட்பால், அதிகாரம் : 46 - சிற்றின‌‍ஞ்சேராமை, குறள் : 451
2  நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு
பொருள்(விளக்கம்): சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்
Transliteration: Nilaththiyalpaal Neerdhirin Thatraakum MaandharkkuInaththiyalpa Thaakum Arivu
Couplet: The waters' virtues change with soil through which they flow;
As man's companionship so will his wisdom show
Explanation: As water changes (its nature), from the nature of the soil (in which it flows), so will the character of men resemble that of their associates
பால் : பொருட்பால், அதிகாரம் : 46 - சிற்றின‌‍ஞ்சேராமை, குறள் : 452
3  மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னா னெனப்படுஞ் சொல்
பொருள்(விளக்கம்): ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொருத்து அமையும் அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும் கூட்டத்தைப் பொருத்து அமையும்
Transliteration: Manaththaanaam Maandhark Kunarchchi InaththaanaamInnaan Enappatunj Chol
Couplet: Perceptions manifold in men are of the mind alone;
The value of the man by his companionship is known
Explanation: The power of knowing is from the mind; (but) his character is from that of his associates
பால் : பொருட்பால், அதிகாரம் : 46 - சிற்றின‌‍ஞ்சேராமை, குறள் : 453
4  மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்
கினத்துள தாகும் அறிவு
பொருள்(விளக்கம்): ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்
Transliteration: Manaththu Ladhupolak Kaatti OruvarkuInaththula Thaakum Arivu
Couplet: Man's wisdom seems the offspring of his mind;
'Tis outcome of companionship we find
Explanation: Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions
பால் : பொருட்பால், அதிகாரம் : 46 - சிற்றின‌‍ஞ்சேராமை, குறள் : 454
5  மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்
பொருள்(விளக்கம்): ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும்
Transliteration: Manandhooimai Seyvinai Thooimai IrantumInandhooimai Thoovaa Varum
Couplet: Both purity of mind, and purity of action clear,
Leaning no staff of pure companionship, to man draw near
Explanation: Chaste company is the staff on which come, these two things, viz, purity of mind and purity of conduct
பால் : பொருட்பால், அதிகாரம் : 46 - சிற்றின‌‍ஞ்சேராமை, குறள் : 455
6  மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்
கில்லைநன் றாகா வினை
பொருள்(விளக்கம்): மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால் நற்செயல்களும் விளையும்
Transliteration: Manandhooyaark Kechchamnan Raakum InandhooyaarkkuIllainan Raakaa Vinai
Couplet: From true pure-minded men a virtuous race proceeds;
To men of pure companionship belong no evil deeds
Explanation: To the pure-minded there will be a good posterity By those whose associates are pure, no deeds will be done that are not good
பால் : பொருட்பால், அதிகாரம் : 46 - சிற்றின‌‍ஞ்சேராமை, குறள் : 456
7  மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழுந் தரும்
பொருள்(விளக்கம்): மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும்
Transliteration: Mananalam Mannuyirk Kaakkam InanalamEllaap Pukazhum Tharum
Couplet: Goodness of mind to lives of men increaseth gain;
And good companionship doth all of praise obtain
Explanation: Goodness of mind will give wealth, and good society will bring with it all praise, to men
பால் : பொருட்பால், அதிகாரம் : 46 - சிற்றின‌‍ஞ்சேராமை, குறள் : 457
8  மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
கினநலம் ஏமாப் புடைத்து
பொருள்(விளக்கம்): மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை வந்து வாய்க்கும்
Transliteration: Mananalam Nankutaiya Raayinum SaandrorkkuInanalam Emaap Putaiththu
Couplet: To perfect men, though minds right good belong,
Yet good companionship is confirmation strong
Explanation: Yet good companionship is confirmation strong
பால் : பொருட்பால், அதிகாரம் : 46 - சிற்றின‌‍ஞ்சேராமை, குறள் : 458
9  மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தி னேமாப் புடைத்து
பொருள்(விளக்கம்): நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும்
Transliteration: Mananalaththin Aakum Marumaimar RaqdhumInanalaththin Emaap Putaiththu
Couplet: Although to mental goodness joys of other life belong,
Yet good companionship is confirmation strong
Explanation: Future bliss is (the result) of goodness of mind; and even this acquires strength from the society of the good
பால் : பொருட்பால், அதிகாரம் : 46 - சிற்றின‌‍ஞ்சேராமை, குறள் : 459
10  நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉ மில்
பொருள்(விளக்கம்): நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை
Transliteration: Nallinaththi Noongun Thunaiyillai TheeyinaththinAllar Patuppadhooum Il
Couplet: Than good companionship no surer help we know;
Than bad companionship nought causes direr woe
Explanation: There is no greater help than the company of the good; there is no greater source of sorrow than the company of the wicked
பால் : பொருட்பால், அதிகாரம் : 46 - சிற்றின‌‍ஞ்சேராமை, குறள் : 460
Page 46 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com