srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


பொருட்பால்

85. புல்லறிவாண்மை

1  அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு
பொருள்(விளக்கம்): அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும் மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது
Transliteration: Arivinmai Inmaiyul Inmai PiridhinmaiInmaiyaa Vaiyaa Thulaku
Couplet: Want of knowledge, 'mid all wants the sorest want we deem;
Want of other things the world will not as want esteem
Explanation: The want of wisdom is the greatest of all wants; but that of wealth the world will not regard as such
பால் : பொருட்பால், அதிகாரம் : 85 - புல்லறிவாண்மை, குறள் : 841
2  அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்
பொருள்(விளக்கம்): அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருதவேண்டும்
Transliteration: Arivilaan Nenjuvandhu Eedhal PiridhiyaadhumIllai Peruvaan Thavam
Couplet: The gift of foolish man, with willing heart bestowed, is nought,
But blessing by receiver's penance bought
Explanation: (The cause of) a fool cheerfully giving (something) is nothing else but the receiver's merit (in a former birth)
பால் : பொருட்பால், அதிகாரம் : 85 - புல்லறிவாண்மை, குறள் : 842
3  அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது
பொருள்(விளக்கம்): எதிரிகளால்கூட வழங்க முடியாத வேதனையை, அறிவில்லாதவர்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள்
Transliteration: Arivilaar Thaandhammaip Peezhikkum PeezhaiSeruvaarkkum Seydhal Aridhu
Couplet: With keener anguish foolish men their own hearts wring,
Than aught that even malice of their foes can bring
Explanation: The suffering that fools inflict upon themselves is hardly possible even to foes
பால் : பொருட்பால், அதிகாரம் : 85 - புல்லறிவாண்மை, குறள் : 843
4  வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு
பொருள்(விளக்கம்): ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்
Transliteration: Venmai Enappatuva Thiyaadhenin OnmaiUtaiyamyaam Ennum Serukku
Couplet: What is stupidity? The arrogance that cries,
'Behold, we claim the glory of the wise.'
Explanation: What is called want of wisdom is the vanity which says, 'We are wise'
பால் : பொருட்பால், அதிகாரம் : 85 - புல்லறிவாண்மை, குறள் : 844
5  கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்
பொருள்(விளக்கம்): அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக இருக்கிறாரோ அதைப் பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும்
Transliteration: Kallaadha Merkon Tozhukal KasataraValladhooum Aiyam Tharum
Couplet: If men what they have never learned assume to know,
Upon their real learning's power a doubt 'twill throw
Explanation: Fools pretending to know what has not been read (by them) will rouse suspicion even as to what they have thoroughly mastered
பால் : பொருட்பால், அதிகாரம் : 85 - புல்லறிவாண்மை, குறள் : 845
6  அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி
பொருள்(விளக்கம்): நமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும்
Transliteration: Atram Maraiththalo Pullarivu ThamvayinKutram Maraiyaa Vazhi
Couplet: Fools are they who their nakedness conceal,
And yet their faults unveiled reveal
Explanation: Even to cover one's nakedness would be folly, if (one's) faults were not covered (by forsaking them)
பால் : பொருட்பால், அதிகாரம் : 85 - புல்லறிவாண்மை, குறள் : 846
7  அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு
பொருள்(விளக்கம்): நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்
Transliteration: Arumarai Sorum Arivilaan SeyyumPerumirai Thaane Thanakku
Couplet: From out his soul who lets the mystic teachings die,
Entails upon himself abiding misery
Explanation: The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himself
பால் : பொருட்பால், அதிகாரம் : 85 - புல்லறிவாண்மை, குறள் : 847
8  ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்
பொருள்(விளக்கம்): சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்
Transliteration: Evavum Seykalaan Thaandheraan AvvuyirPoom Alavumor Noi
Couplet: Advised, he heeds not; of himself knows nothing wise;
This man's whole life is all one plague until he dies
Explanation: The fool will not perform (his duties) even when advised nor ascertain them himself; such a soul is a
பால் : பொருட்பால், அதிகாரம் : 85 - புல்லறிவாண்மை, குறள் : 848
9  காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு
பொருள்(விளக்கம்): அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான் அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்
Transliteration: Kaanaadhaan Kaattuvaan Thaankaanaan KaanaadhaanKantaanaam Thaankanta Vaaru
Couplet: That man is blind to eyes that will not see who knowledge shows;-
The blind man still in his blind fashion knows
Explanation: One who would teach a fool will (simply) betray his folly; and the fool would (still) think himself 'wise in his own conceit'
பால் : பொருட்பால், அதிகாரம் : 85 - புல்லறிவாண்மை, குறள் : 849
10  உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்
தலகையா வைக்கப் படும்
பொருள்(விளக்கம்): ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் ``பேய்''களின் பட்டியலின்தான் வைக்க வேண்டும்
Transliteration: Ulakaththaar Untenpadhu Illenpaan VaiyaththuAlakaiyaa Vaikkap Patum
Couplet: Who what the world affirms as false proclaim,
O'er all the earth receive a demon's name
Explanation: He who denies the existence of what the world believes in will be regarded as a demon on earth
பால் : பொருட்பால், அதிகாரம் : 85 - புல்லறிவாண்மை, குறள் : 850
Page 85 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com