srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


பொருட்பால்

60. ஊக்கமுடைமை

1  உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்
உடைய துடையரோ மற்று
பொருள்(விளக்கம்): ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர் ஊமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்
Transliteration: Utaiyar Enappatuvadhu Ookkam AqdhillaarUtaiyadhu Utaiyaro Matru
Couplet: 'Tis energy gives men o'er that they own a true control;
They nothing own who own not energy of soul
Explanation: Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess ?
பால் : பொருட்பால், அதிகாரம் : 60 - ஊக்கமுடைமை, குறள் : 591
2  உள்ள முடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்
பொருள்(விளக்கம்): ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது
Transliteration: Ullam Utaimai Utaimai PorulutaimaiNillaadhu Neengi Vitum
Couplet: The wealth of mind man owns a real worth imparts,
Material wealth man owns endures not, utterly departs
Explanation: The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not
பால் : பொருட்பால், அதிகாரம் : 60 - ஊக்கமுடைமை, குறள் : 592
3  ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்
ஒருவந்தங் கைத்துடை யார்
பொருள்(விளக்கம்): ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்
Transliteration: Aakkam Izhandhemendru Allaavaar OokkamOruvandham Kaiththutai Yaar
Couplet: 'Lost is our wealth,' they utter not this cry distressed,
The men of firm concentred energy of soul possessed
Explanation: They who are possessed of enduring energy will not trouble themselves, saying, 'we have lost our property.'
பால் : பொருட்பால், அதிகாரம் : 60 - ஊக்கமுடைமை, குறள் : 593
4  ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை
பொருள்(விளக்கம்): உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்
Transliteration: Aakkam Adharvinaaich Chellum AsaivilaaOokka Mutaiyaa Nuzhai
Couplet: The man of energy of soul inflexible,
Good fortune seeks him out and comes a friend to dwell
Explanation: Wealth will find its own way to the man of unfailing energy
பால் : பொருட்பால், அதிகாரம் : 60 - ஊக்கமுடைமை, குறள் : 594
5  வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு
பொருள்(விளக்கம்): தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும் அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்
Transliteration: Vellath Thanaiya Malarneettam MaandhardhamUllath Thanaiyadhu Uyarvu
Couplet: With rising flood the rising lotus flower its stem unwinds;
The dignity of men is measured by their minds
Explanation: The stalks of water-flowers are proportionate to the depth of water; so is men's greatness proportionate to their minds
பால் : பொருட்பால், அதிகாரம் : 60 - ஊக்கமுடைமை, குறள் : 595
6  உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து
பொருள்(விளக்கம்): நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கவேண்டும் அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது
Transliteration: Ulluva Thellaam Uyarvullal MatradhuThallinun Thallaamai Neerththu
Couplet: Whate'er you ponder, let your aim be loftly still,
Fate cannot hinder always, thwart you as it will
Explanation: In all that a king thinks of, let him think of his greatness; and if it should be thrust from him (by fate), it will have the nature of not being thrust from him
பால் : பொருட்பால், அதிகாரம் : 60 - ஊக்கமுடைமை, குறள் : 596
7  சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு
பொருள்(விளக்கம்): உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்
Transliteration: Sidhaivitaththu Olkaar Uravor PudhaiyampirPattuppaa Toondrung Kaliru
Couplet: The men of lofty mind quail not in ruin's fateful hour,
The elephant retains his dignity mind arrows' deadly shower
Explanation: The strong minded will not faint, even when all is lost; the elephant stands firm, even when wounded by a shower of arrows
பால் : பொருட்பால், அதிகாரம் : 60 - ஊக்கமுடைமை, குறள் : 597
8  உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு
பொருள்(விளக்கம்): அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை
Transliteration: Ullam Ilaadhavar Eydhaar UlakaththuValliyam Ennunj Cherukku
Couplet: The soulless man can never gain
Th' ennobling sense of power with men
Explanation: Those who have no (greatness of) mind, will not acquire the joy of saying in the world, 'we have excercised liaberality'
பால் : பொருட்பால், அதிகாரம் : 60 - ஊக்கமுடைமை, குறள் : 598
9  பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்
பொருள்(விளக்கம்): உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்
Transliteration: Pariyadhu Koorngottadhu Aayinum YaanaiVeruum Pulidhaak Kurin
Couplet: Huge bulk of elephant with pointed tusk all armed,
When tiger threatens shrinks away alarmed
Explanation: Although the elephant has a large body, and a sharp tusk, yet it fears the attack of the tiger
பால் : பொருட்பால், அதிகாரம் : 60 - ஊக்கமுடைமை, குறள் : 599
10  உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்
மரமக்க ளாதலே வேறு
பொருள்(விளக்கம்): மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை
Transliteration: Uramoruvarku Ulla Verukkaiaq ThillaarMarammakka Laadhale Veru
Couplet: Firmness of soul in man is real excellance;
Others are trees, their human form a mere pretence
Explanation: Energy is mental wealth; those men who are destitute of it are only trees in the form of men
பால் : பொருட்பால், அதிகாரம் : 60 - ஊக்கமுடைமை, குறள் : 600
Page 60 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com