
75. அரண்
| 1 ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள் |
| பொருள்(விளக்கம்): பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும் |
| Transliteration: Aatru Pavarkkum Aranporul AnjiththarPotru Pavarkkum Porul |
| Couplet: A fort is wealth to those who act against their foes; Is wealth to them who, fearing, guard themselves from woes |
| Explanation: A fort is an object of importance to those who march (against their foes) as well as to those who through fear (of pursuers) would seek it for shelter |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 75 - அரண், குறள் : 741 |
| 2 மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண் |
| பொருள்(விளக்கம்): ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே அரணாகும் |
| Transliteration: Manineerum Mannum Malaiyum AninizharKaatum Utaiya Tharan |
| Couplet: A fort is that which owns fount of waters crystal clear, An open space, a hill, and shade of beauteous forest near |
| Explanation: A fort is that which has everlasting water, plains, mountains and cool shady forests |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 75 - அரண், குறள் : 742 |
| 3 உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல் |
| பொருள்(விளக்கம்): உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும் |
| Transliteration: Uyarvakalam Thinmai Arumaiin NaankinAmaivaran Endruraikkum Nool |
| Couplet: Height, breadth, strength, difficult access: Science declares a fort must these possess |
| Explanation: The learned say that a fortress is an enclosure having these four (qualities) viz, height, breadth, strength and inaccessibility |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 75 - அரண், குறள் : 743 |
| 4 சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை ஊக்கம் அழிப்ப தரண் |
| பொருள்(விளக்கம்): உட்பகுதி பரந்த இடமாக அமைந்து, பாதுகாக்கப் படவேண்டிய பகுதி சிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை அழிக்கக் கூடியதே அரண் எனப்படும் |
| Transliteration: Sirukaappir Peritaththa Thaaki UrupakaiOokkam Azhippa Tharan |
| Couplet: A fort must need but slight defence, yet ample be, Defying all the foeman's energy |
| Explanation: A fort is that which has an extensive space within, but only small places to be guarded, and such as can destroy the courage of besieging foes |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 75 - அரண், குறள் : 744 |
| 5 கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் நிலைக்கெளிதாம் நீர தரண் |
| பொருள்(விளக்கம்): முற்றுகையிட்டுக் கைப்பற்ற முடியாமல், உள்ளேயிருக்கும் படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய உணவுடன், எதிரிகளுடன் போர் புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும் |
| Transliteration: Kolarkaridhaaik Kontakoozhth Thaaki AkaththaarNilaikkelidhaam Neeradhu Aran |
| Couplet: Impregnable, containing ample stores of food, A fort for those within, must be a warlike station good |
| Explanation: A fort is that which cannot be captured, which abounds in suitable provisions, and affords a position of easy defence to its inmates |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 75 - அரண், குறள் : 745 |
| 6 எல்லாப் பொருளும் உடைத்தா யிடத்துதவும் நல்லா ளுடைய தரண் |
| பொருள்(விளக்கம்): போருக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் கொண்டதாகவும், களத்தில் குதிக்கும் வலிமை மிக்க வீரர்களை உடையதாகவும் இருப்பதே அரண் ஆகும் |
| Transliteration: Ellaap Porulum Utaiththaai ItaththudhavumNallaal Utaiyadhu Aran |
| Couplet: A fort, with all munitions amply stored, In time of need should good reserves afford |
| Explanation: A fort is that which has all (needful) things, and excellent heroes that can help it against destruction (by foes) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 75 - அரண், குறள் : 746 |
| 7 முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் பற்றற் கரிய தரண் |
| பொருள்(விளக்கம்): முற்றுகையிட்டோ, முற்கையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும் |
| Transliteration: Mutriyum Mutraa Therindhum AraippatuththumPatrar Kariyadhu Aran |
| Couplet: A fort should be impregnable to foes who gird it round, Or aim there darts from far, or mine beneath the ground |
| Explanation: A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining it |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 75 - அரண், குறள் : 747 |
| 8 முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் பற்றியார் வெல்வ தரண் |
| பொருள்(விளக்கம்): முற்றுகையிடும் வலிமைமிக்க படையை எதிர்த்து, உள்ளேயிருந்து கொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும் |
| Transliteration: Mutraatri Mutri Yavaraiyum PatraatripPatriyaar Velvadhu Aran |
| Couplet: Howe'er the circling foe may strive access to win, A fort should give the victory to those who guard within |
| Explanation: That is a fort whose inmates are able to overcome without losing their ground, even abler men who have besieged it |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 75 - அரண், குறள் : 748 |
| 9 முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறெய்தி மாண்ட தரண் |
| பொருள்(விளக்கம்): போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்nயிருந்து கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும் |
| Transliteration: Munaimukaththu Maatralar Saaya VinaimukaththuVeereydhi Maanta Tharan |
| Couplet: At outset of the strife a fort should foes dismay; And greatness gain by deeds in every glorious day |
| Explanation: A fort is that which derives excellence from the stratagems made (by its inmates) to defeat their enemies in the battlefield |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 75 - அரண், குறள் : 749 |
| 10 எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்ல தரண் |
| பொருள்(விளக்கம்): கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூட உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது |
| Transliteration: Enaimaatchith Thaakiyak Kannum VinaimaatchiIllaarkan Illadhu Aran |
| Couplet: Howe'er majestic castled walls may rise, To craven souls no fortress strength supplies |
| Explanation: Although a fort may possess all (the above-said) excellence, it is, as it were without these, if its inmates possess not the excellence of action |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 75 - அரண், குறள் : 750 |