srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


அறத்துப்பால்

6. வாழ்க்கை துணைநலம்

1  பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு
பொருள்(விளக்கம்): நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்
Transliteration: Petraar Perinperuvar Pentir PerunjirappupPuththelir Vaazhum Ulaku
Couplet: If wife be wholly true to him who gained her as his bride,
Great glory gains she in the world where gods bliss abide
Explanation: If women shew reverence to their husbands, they will obtain great excellence in the world where the gods flourish
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 6 - வாழ்க்கை துணைநலம், குறள் : 51
2  புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை
பொருள்(விளக்கம்): புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்
Transliteration: Pukazhpurindha Illilorkku Illai IkazhvaarmunErupol Peetu Natai
Couplet: Who have not spouses that in virtue's praise delight,
They lion-like can never walk in scorner's sight
Explanation: The man whose wife seeks not the praise (of chastity) cannot walk with lion-like stately step, before those who revile them
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 6 - வாழ்க்கை துணைநலம், குறள் : 52
3  மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு
பொருள்(விளக்கம்): குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது
Transliteration: Mangalam Enpa Manaimaatchi Matru AdhanNankalam Nanmakkat Peru
Couplet: The house's 'blessing', men pronounce the house-wife excellent;
The gain of blessed children is its goodly ornament
Explanation: The excellence of a wife is the good of her husband; and good children are the jewels of that goodness
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 6 - வாழ்க்கை துணைநலம், குறள் : 53
4  மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
பொருள்(விளக்கம்): இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்
Transliteration: Manaikdhakka Maanputaiyal Aakiththar KontaanValaththakkaal Vaazhkkaith Thunai
Couplet: As doth the house beseem, she shows her wifely dignity;
As doth her husband's wealth befit, she spends: help - meet is she
Explanation: She who has the excellence of home virtues, and can expend within the means of her husband, is a help in the domestic state
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 6 - வாழ்க்கை துணைநலம், குறள் : 54
5  மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்
பொருள்(விளக்கம்): நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது
Transliteration: Manaimaatchi Illaalkan Illaayin VaazhkkaiEnaimaatchith Thaayinum Il
Couplet: If household excellence be wanting in the wife,
Howe'er with splendour lived, all worthless is the life
Explanation: If the wife be devoid of domestic excellence, whatever (other) greatness be possessed, the conjugal state, is nothing
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 6 - வாழ்க்கை துணைநலம், குறள் : 55
6  இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை
பொருள்(விளக்கம்): நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும் அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது
Transliteration: Illadhen Illaval Maanpaanaal UlladhenIllaval Maanaak Katai?
Couplet: There is no lack within the house, where wife in worth excels,
There is no luck within the house, where wife dishonoured dwells
Explanation: If his wife be eminent (in virtue), what does (that man) not possess ? If she be without excellence, what does (he) possess ?
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 6 - வாழ்க்கை துணைநலம், குறள் : 56
7  பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்
பொருள்(விளக்கம்): கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?
Transliteration: Pennin Perundhakka Yaavula KarpennumThinmaiun Taakap Perin
Couplet: If woman might of chastity retain,
What choicer treasure doth the world contain
Explanation: What is more excellent than a wife, if she possess the stability of chastity ?
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 6 - வாழ்க்கை துணைநலம், குறள் : 57
8  தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
பொருள்(விளக்கம்): கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்
Transliteration: Theyvam Thozhaaal Kozhunan ThozhudhezhuvaalPeyyenap Peyyum Mazhai
Couplet: No God adoring, low she bends before her lord;
Then rising, serves: the rain falls instant at her word
Explanation: If she, who does not worship God, but who rising worships her husband, say, 'let it rain,' it will rain
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 6 - வாழ்க்கை துணைநலம், குறள் : 58
9  தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்
பொருள்(விளக்கம்): கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்
Transliteration: Tharkaaththuth Tharkontaar Penith ThakaisaandraSorkaaththuch Chorvilaal Pen
Couplet: Who guards herself, for husband's comfort cares, her household's fame,
In perfect wise with sleepless soul preserves, -give her a woman's name
Explanation: She is a wife who unweariedly guards herself, takes care of her husband, and preserves an unsullied fame
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 6 - வாழ்க்கை துணைநலம், குறள் : 59
10  சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை
பொருள்(விளக்கம்): தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்
Transliteration: Siraikaakkum Kaappevan Seyyum MakalirNiraikaakkum Kaappe Thalai
Couplet: Of what avail is watch and ward?
Honour's woman's safest guard
Explanation: What avails the guard of a prison ? The chief guard of a woman is her chastity
பால் : அறத்துப்பால், அதிகாரம் : 6 - வாழ்க்கை துணைநலம், குறள் : 60
Page 6 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com