srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


காமத்துப்பால்

114. நாணுத்துறைவுரைத்தல்

1  காமம் உழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி
பொருள்(விளக்கம்): காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக மடலூர்தலைத் தவிர, வலிமையான துணைவேறு எதுவுமில்லை
Transliteration: Kaamam Uzhandhu Varundhinaarkku EmamMatalalladhu Illai Vali
Couplet: To those who 've proved love's joy, and now afflicted mourn,
Except the helpful 'horse of palm', no other strength remains
Explanation: To those who after enjoyment of sexual pleasure suffer (for want of more), there is no help so efficient as the palmyra horse
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 114 - நாணுத்துறைவுரைத்தல், குறள் : 1131
2  நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து
பொருள்(விளக்கம்): எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்
Transliteration: Nonaa Utampum Uyirum MatalerumNaaninai Neekki Niruththu
Couplet: My body and my soul, that can no more endure,
Will lay reserve aside, and mount the 'horse of palm'
Explanation: Having got rid of shame, the suffering body and soul save themselves on the palmyra horse
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 114 - நாணுத்துறைவுரைத்தல், குறள் : 1132
3  நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்
பொருள்(விளக்கம்): நல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்
Transliteration: Naanotu Nallaanmai Pantutaiyen IndrutaiyenKaamutraar Erum Matal
Couplet: I once retained reserve and seemly manliness;
To-day I nought possess but lovers' 'horse of palm'
Explanation: Modesty and manliness were once my own; now, my own is the palmyra horse that is ridden by the lustful
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 114 - நாணுத்துறைவுரைத்தல், குறள் : 1133
4  காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை
பொருள்(விளக்கம்): காதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது
Transliteration: Kaamak Katumpunal Uykkum NaanotuNallaanmai Ennum Punai
Couplet: Love's rushing tide will sweep away the raft
Of seemly manliness and shame combined
Explanation: The raft of modesty and manliness, is, alas, carried-off by the strong current of lust
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 114 - நாணுத்துறைவுரைத்தல், குறள் : 1134
5  தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்
பொருள்(விளக்கம்): மேகலையையும் மெல்லிய வளையலையும் அணிந்த மங்கை மாலை மலரும் நோயான காதலையும், மடலூர்தல் எனும் வேலையையும் எனக்குத் தந்து விட்டாள்
Transliteration: Thotalaik Kurundhoti Thandhaal MatalotuMaalai Uzhakkum Thuyar
Couplet: The maid that slender armlets wears, like flowers entwined,
Has brought me 'horse of palm,' and pangs of eventide
Explanation: She with the small garland-like bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at night
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 114 - நாணுத்துறைவுரைத்தல், குறள் : 1135
6  மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படலொல்லா பேதைக்கென் கண்
பொருள்(விளக்கம்): காதலிக்காக என் கண்கள் உறங்காமல் தவிக்கின்றன; எனவே மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் நான் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்
Transliteration: Mataloordhal Yaamaththum Ulluven MandraPatalollaa Pedhaikken Kan
Couplet: Of climbing 'horse of palm' in midnight hour, I think;
My eyes know no repose for that same simple maid
Explanation: Mine eyes will not close in sleep on your mistress's account; even at midnight will I think of mounting the palmyra horse
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 114 - நாணுத்துறைவுரைத்தல், குறள் : 1136
7  கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்
பொருள்(விளக்கம்): கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும்கூடப் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை
Transliteration: Katalanna Kaamam Uzhandhum MataleraapPennin Perundhakka Thil
Couplet: There's nought of greater worth than woman's long-enduring soul,
Who, vexed by love like ocean waves, climbs not the 'horse of palm'
Explanation: There is nothing so noble as the womanly nature that would not ride the palmyra horse, though plunged a sea of lust
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 114 - நாணுத்துறைவுரைத்தல், குறள் : 1137
8  நிறையரியர் மன்னளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்
பொருள்(விளக்கம்): பாவம்; இவர், மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்திற்குரியவர்; என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல்
Transliteration: Niraiyariyar Manaliyar Ennaadhu KaamamMaraiyirandhu Mandru Patum
Couplet: In virtue hard to move, yet very tender, too, are we;
Love deems not so, would rend the veil, and court publicity
Explanation: Even the Lust (of women) transgresses its secrecy and appears in public, forgetting that they are too chaste and liberal (to be overcome by it)
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 114 - நாணுத்துறைவுரைத்தல், குறள் : 1138
9  அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம்
மறுகின் மறுகும் மருண்டு
பொருள்(விளக்கம்): என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்!
Transliteration: Arikilaar Ellaarum Endreen KaamamMarukin Marukum Maruntu
Couplet: 'There's no one knows my heart,' so says my love,
And thus, in public ways, perturbed will rove
Explanation: And thus, in public ways, perturbed will rove
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 114 - நாணுத்துறைவுரைத்தல், குறள் : 1139
10  யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு
பொருள்(விளக்கம்): காதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள்தான், அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள்
Transliteration: Yaamkannin Kaana Nakupa ArivillaarYaampatta Thaampataa Aaru
Couplet: Before my eyes the foolish make a mock of me,
Because they ne'er endured the pangs I now must drie
Explanation: Even strangers laugh (at us) so as to be seen by us, for they have not suffered
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 114 - நாணுத்துறைவுரைத்தல், குறள் : 1140
Page 114 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com