srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


காமத்துப்பால்

126. நிறையழிதல்

1  காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு
பொருள்(விளக்கம்): காதல் வேட்கை இருக்கிறதே, அது ஒரு கோடரியாக மாறி, நாணம் எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட மன அடக்கம் என்கிற கதவையே உடைத்தெறிந்து விடுகின்றது
Transliteration: Kaamak Kanichchi Utaikkum NiraiyennumNaanuththaazh Veezhththa Kadhavu
Couplet: Of womanly reserve love's axe breaks through the door,
Barred by the bolt of shame before
Explanation: The axe of lust can break the door of chastity which is bolted with the bolt of modesty
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 126 - நிறையழிதல், குறள் : 1251
2  காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்
பொருள்(விளக்கம்): காதல் வேட்கை எனப்படும் ஒன்று இரக்கமே இல்லாதது; ஏனெனில் அது என் நெஞ்சில் நள்ளிரவிலும் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்கிறது
Transliteration: Kaamam Enavondro Kannindren NenjaththaiYaamaththum Aalum Thozhil
Couplet: What men call love is the one thing of merciless power;
It gives my soul no rest, e'en in the midnight hour
Explanation: Even at midnight is my mind worried by lust, and this one thing, alas! is without mercy
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 126 - நிறையழிதல், குறள் : 1252
3  மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்
பொருள்(விளக்கம்): எவ்வளவுதான் அடக்க முயன்றாலும் கட்டுப்படாமல் தும்மல் நம்மையும் மீறி வெளிப்படுகிறதல்லவா; அதைப் போன்றதுதான் காதல் உணர்ச்சியும்; என்னதான் மறைத்தாலும் காட்டிக் கொடுத்துவிடும்
Transliteration: Maraippenman Kaamaththai Yaano KurippindrithThummalpol Thondri Vitum
Couplet: I would my love conceal, but like a sneeze
It shows itself, and gives no warning sign
Explanation: I would conceal my lust, but alas, it yields not to my will but breaks out like a sneeze
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 126 - நிறையழிதல், குறள் : 1253
4  நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம்
மறையிறந்து மன்று படும்
பொருள்(விளக்கம்): மன உறுதிகொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என் காதல், நான் மறைப்பதையும் மீறிக்கொண்டு மன்றத்திலேயே வெளிப்பட்டு விடுகிறதே
Transliteration: Niraiyutaiyen Enpenman Yaanoen KaamamMaraiyirandhu Mandru Patum
Couplet: In womanly reserve I deemed myself beyond assail;
But love will come abroad, and casts away the veil
Explanation: I say I would be firm, but alas, my malady breaks out from its concealment and appears in public
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 126 - நிறையழிதல், குறள் : 1254
5  செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன் றன்று
பொருள்(விளக்கம்): தம்மைப் பிரிந்து சென்ற காதலரைப் பகையாகக் கருதி அவரைத் தொடர்ந்து மன அடக்கம், காதல் நோயுற்றவர்க்கு இருப்பதில்லை
Transliteration: Setraarpin Sellaap Perundhakaimai KaamanoiUtraar Arivadhondru Andru
Couplet: The dignity that seeks not him who acts as foe,
Is the one thing that loving heart can never know
Explanation: The dignity that would not go after an absent lover is not known to those who are sticken by love
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 126 - நிறையழிதல், குறள் : 1255
6  செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்
பொருள்(விளக்கம்): வெறுத்துப் பிரிந்ததையும் பொறுத்துக் கொண்டு அவர் பின்னே செல்லும் நிலையை என் நெஞ்சுக்கு ஏற்படுத்திய காதல் நோயின் தன்மைதான் என்னே
Transliteration: Setravar Pinseral Venti AliththaroEtrennai Utra Thuyar
Couplet: My grief how full of grace, I pray you see!
It seeks to follow him that hateth me
Explanation: The sorrow I have endured by desiring to go after my absent lover, in what way is it excellent?
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 126 - நிறையழிதல், குறள் : 1256
7  நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்
பொருள்(விளக்கம்): நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லை
Transliteration: Naanena Ondro Ariyalam KaamaththaalPeniyaar Petpa Seyin
Couplet: No sense of shame my gladdened mind shall prove,
When he returns my longing heart to bless with love
Explanation: I know nothing like shame when my beloved does from love (just) what is desired (by me)
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 126 - நிறையழிதல், குறள் : 1257
8  பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை
பொருள்(விளக்கம்): நம்முடைய பெண்மை எனும் உறுதியை உடைக்கும் படைக்கலனாக இருப்பது, பல மாயங்களில் வல்ல கள்வராம் காதலரின் பணிவான பாகுமொழியன்றோ?
Transliteration: Panmaayak Kalvan Panimozhi AndronamPenmai Utaikkum Patai
Couplet: The words of that deceiver, versed in every wily art,
Are instruments that break through every guard of woman's heart
Explanation: Are not the enticing words of my trick-abounding roguish lover the weapon that breaks away my feminine firmness?
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 126 - நிறையழிதல், குறள் : 1258
9  புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு
பொருள்(விளக்கம்): ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துதான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்
Transliteration: Pulappal Enachchendren Pullinen NenjamKalaththal Uruvadhu Kantu
Couplet: 'I 'll shun his greeting'; saying thus with pride away I went:
I held him in my arms, for straight I felt my heart relent
Explanation: I said I would feign dislike and so went (away); (but) I embraced him the moment I say my mind began to unite with him!
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 126 - நிறையழிதல், குறள் : 1259
10  நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்
பொருள்(விளக்கம்): நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா?
Transliteration: Ninandheeyil Ittanna Nenjinaarkku UntoPunarndhooti Nirpem Enal
Couplet: 'We 'll stand aloof and then embrace': is this for them to say,
Whose hearts are as the fat that in the blaze dissolves away
Explanation: Is it possible for those whose hearts melt like fat in the fire to say they can feign a strong dislike and remain so?
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 126 - நிறையழிதல், குறள் : 1260
Page 126 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com