
124. உறுப்புநலனழிதல்
| 1 நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண் |
| பொருள்(விளக்கம்): பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதை சொல்லி காட்டுகின்றன |
| Transliteration: Nayandhavar Nalkaamai Solluva PolumPasandhu Panivaarum Kan |
| Couplet: The eye, with sorrow wan, all wet with dew of tears, As witness of the lover's lack of love appears |
| Explanation: The discoloured eyes that shed tears profusely seem to betray the unkindness of our beloved |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 124 - உறுப்புநலனழிதல், குறள் : 1231 |
| 2 தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள் |
| பொருள்(விளக்கம்): தழுவிக் கிடந்த போது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும் |
| Transliteration: Thanandhamai Saala Arivippa PolumManandhanaal Veengiya Thol |
| Couplet: These withered arms, desertion's pangs abundantly display, That swelled with joy on that glad nuptial day |
| Explanation: The shoulders that swelled on the day of our union (now) seem to announce our separation clearly (to the public) |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 124 - உறுப்புநலனழிதல், குறள் : 1232 |
| 3 பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள் |
| பொருள்(விளக்கம்): பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் கழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக |
| Transliteration: Panaineengip Paindhoti Sorum ThunaineengithTholkavin Vaatiya Thol |
| Couplet: When lover went, then faded all their wonted charms, And armlets' golden round slips off from these poor wasted arms |
| Explanation: In the absence of your consort, your shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure gold have become loose |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 124 - உறுப்புநலனழிதல், குறள் : 1233 |
| 4 கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள் |
| பொருள்(விளக்கம்): வளையல்களும் கழன்று விழ, இருந்த அழகையும் இழந்த தோள்கள் என்னைப் பிரிந்திருக்கும் காதலரின் கொடுமையை ஊருக்கு உரைக்கின்றன |
| Transliteration: Kotiyaar Kotumai Uraikkum ThotiyotuTholkavin Vaatiya Thol |
| Couplet: These wasted arms, the bracelet with their wonted beauty gone, The cruelty declare of that most cruel one |
| Explanation: The (loosened) bracelets, and the shoulders from which the old beauty has faded, relate the cruelty of the pitiless one |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 124 - உறுப்புநலனழிதல், குறள் : 1234 |
| 5 தொடியொடு தோள்நேகிழ நோவல் அவரைக் கொடியார் எனக்கூறல் நொந்து |
| பொருள்(விளக்கம்): என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன் |
| Transliteration: Thotiyotu Tholnekizha Noval AvaraikKotiyar Enakkooral Nondhu |
| Couplet: I grieve, 'tis pain to me to hear him cruel chid, Because the armlet from my wasted arm has slid |
| Explanation: I am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosened |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 124 - உறுப்புநலனழிதல், குறள் : 1235 |
| 6 பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட் பூசல் உரைத்து |
| பொருள்(விளக்கம்): நெஞ்சே! இரக்கமற்று என்னைப் பிரிந்திருக்கும் அவருக்கும் வாடி வதங்கும் என் தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ? |
| Transliteration: Paatu Perudhiyo Nenje KotiyaarkkenVaatudhot Poosal Uraiththu |
| Couplet: My heart! say ought of glory wilt thou gain, If to that cruel one thou of thy wasted arms complain |
| Explanation: Can you O my soul! gain glory by relating to the (so-called) cruel one the clamour of my fading shoulders? |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 124 - உறுப்புநலனழிதல், குறள் : 1236 |
| 7 முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல் |
| பொருள்(விளக்கம்): இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி, பசலைநிறம் கொண்டு விட்டது |
| Transliteration: Muyangiya Kaikalai Ookkap PasandhadhuPaindhotip Pedhai Nudhal |
| Couplet: One day the fervent pressure of embracing arms I checked, Grew wan the forehead of the maid with golden armlet decked |
| Explanation: When I once loosened the arms that were in embrace, the forehead of the gold-braceleted women turned sallow |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 124 - உறுப்புநலனழிதல், குறள் : 1237 |
| 8 முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண் |
| பொருள்(விளக்கம்): இறுகத் தழுவியிருந்த போது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன |
| Transliteration: Muyakkitaith Thanvali Pozhap PasapputraPedhai Perumazhaik Kan |
| Couplet: As we embraced a breath of wind found entrance there; The maid's large liquid eyes were dimmed with care |
| Explanation: When but a breath of breeze penetrated our embrace, her large cool eyes became sallow |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 124 - உறுப்புநலனழிதல், குறள் : 1238 |
| 9 கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு |
| பொருள்(விளக்கம்): பிரிவுத் துயரால் பிறைநுதல் பசலை நிறமடைந்ததைக் கண்டு அவளது கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது |
| Transliteration: Kannin Pasappo Paruvaral EydhindreOnnudhal Seydhadhu Kantu |
| Couplet: The dimness of her eye felt sorrow now, Beholding what was done by that bright brow |
| Explanation: Was it at the sight of what the bright forehead had done that the sallowness of her eyes became sad? |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 124 - உறுப்புநலனழிதல், குறள் : 1239 |
| 10 சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண் |
| பொருள்(விளக்கம்): பிரிவுத் துன்பத்தை நமக்களித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள் அழகிழந்துபோய், மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றன |
| Transliteration: Sirumai Namakkozhiyach Chetchendraar UlliNarumalar Naanina Kan |
| Couplet: Thine eyes grown dim are now ashamed the fragrant flow'rs to see, Thinking on him, who wand'ring far, leaves us in misery |
| Explanation: While we endure the unbearable sorrow, your eyes weep for him who is gone afar, and shun (the sight of) fragrant flowers |
| பால் : காமத்துப்பால், அதிகாரம் : 124 - உறுப்புநலனழிதல், குறள் : 1240 |