srirangam
srirangam

Thirukkural in Tamil with English Meaning


காமத்துப்பால்

129. புணர்ச்சிவிதும்பல்

1  பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்
பொருள்(விளக்கம்): என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை
Transliteration: Penaadhu Petpave Seyyinum KonkanaikKaanaa Thamaiyala Kan
Couplet: Although his will his only law, he lightly value me,
My heart knows no repose unless my lord I see
Explanation: Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 129 - புணர்ச்சிவிதும்பல், குறள் : 1281
2  ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதென் னெஞ்சு
பொருள்(விளக்கம்): ஊடுவதற்காகச் சென்றாலும்கூட அதை நெஞ்சம் மறந்து விட்டுக் கூடுவதற்கு இணங்கி விடுவதே காதலின் சிறப்பு
Transliteration: Ootarkan Sendrenman Thozhi AdhumarandhuKootarkan Sendradhu En Nenju
Couplet: My friend, I went prepared to show a cool disdain;
My heart, forgetting all, could not its love restrain
Explanation: My heart, forgetting all, could not its love restrain
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 129 - புணர்ச்சிவிதும்பல், குறள் : 1282
3  எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண்
பழிகாணேன் கண்ட இடத்து
பொருள்(விளக்கம்): கண்ணில் மை தீட்டிக் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும் கோலைக் காணாதது போலவே, காதலனைக் காணும்பொழுது அவன் என்னைப் பிரிந்து சென்ற குற்றத்தை மறந்து விடுகிறேன்
Transliteration: Ezhudhungaal Kolkaanaak Kannepol KonkanPazhikaanen Kanta Itaththu
Couplet: The eye sees not the rod that paints it; nor can I
See any fault, when I behold my husband nigh
Explanation: Like the eyes which see not the pencil that paints it, I cannot see my husband's fault (just) when I meet him
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 129 - புணர்ச்சிவிதும்பல், குறள் : 1283
4  காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை
பொருள்(விளக்கம்): அவரைக் காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை
Transliteration: Kaanungaal Kaanen Thavaraaya KaanaakkaalKaanen Thavaral Lavai
Couplet: When him I see, to all his faults I 'm blind;
But when I see him not, nothing but faults I find
Explanation: When I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but faults
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 129 - புணர்ச்சிவிதும்பல், குறள் : 1284
5  உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து
பொருள்(விளக்கம்): வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன?
Transliteration: Uyththal Arindhu Punalpaai PavarepolPoiththal Arindhen Pulandhu
Couplet: As those of rescue sure, who plunge into the stream,
So did I anger feign, though it must falsehood seem
Explanation: Like those who leap into a stream which they know will carry them off, why should a wife feign dislike which she knows cannot hold out long?
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 129 - புணர்ச்சிவிதும்பல், குறள் : 1285
6  இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு
பொருள்(விளக்கம்): என்னுள்ளம் கவர்ந்த கள்வனே! இழிவு தரக்கூடிய துன்பத்தை நீ எனக்கு அளித்தாலும் கூட, கள்ளை உண்டு களித்தவர்க்கு மேலும் மேலும் அந்தக் கள்ளின் மீது விருப்பம் ஏற்படுவது போலவே என்னையும் மயங்கச் செய்கிறது உன் மார்பு
Transliteration: Iliththakka Innaa Seyinum KaliththaarkkukKallatre Kalvanin Maarpu
Couplet: Though shameful ill it works, dear is the palm-tree wine
To drunkards; traitor, so to me that breast of thine
Explanation: O you rogue! your breast is to me what liquor is to those who rejoice in it, though it only gives them an unpleasant disgrace
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 129 - புணர்ச்சிவிதும்பல், குறள் : 1286
7  மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்
பொருள்(விளக்கம்): காதல் இன்பம், மலரைவிட மென்மையானது அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்
Transliteration: Malarinum Mellidhu Kaamam SilaradhanSevvi Thalaippatu Vaar
Couplet: Love is tender as an opening flower In season due
To gain its perfect bliss is rapture known to few
Explanation: Sexual delight is more delicate than a flower, and few are those who understand its real nature
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 129 - புணர்ச்சிவிதும்பல், குறள் : 1287
8  கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று
பொருள்(விளக்கம்): விழிகளால் ஊடலை வெளியிட்டவள், கூடித் தழுவுவதில் என்னைக் காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள்
Transliteration: Kannin Thuniththe Kalanginaal PulludhalEnninum Thaanvidhup Putru
Couplet: Her eye, as I drew nigh one day, with anger shone:
By love o'erpowered, her tenderness surpassed my own
Explanation: She once feigned dislike in her eyes, but the warmth of her embrace exceeded my own
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 129 - புணர்ச்சிவிதும்பல், குறள் : 1288
9  உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு
பொருள்(விளக்கம்): மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால் காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம்
Transliteration: Ullak Kaliththalum Kaana MakizhdhalumKallukkil Kaamaththir Kuntu
Couplet: Gladness at the thought, rejoicing at the sight,
Not palm-tree wine, but love, yields such delight
Explanation: To please by thought and cheer by sight is peculiar, not to liquor but lust
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 129 - புணர்ச்சிவிதும்பல், குறள் : 1289
10  தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்
பொருள்(விளக்கம்): பனையளவாகக் காதல் பெருகிடும் போது தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க வேண்டும்
Transliteration: Thinaiththunaiyum Ootaamai Ventum Panaith ThunaiyumKaamam Niraiya Varin
Couplet: When as palmyra tall, fulness of perfect love we gain,
Distrust can find no place small as the millet grain
Explanation: If women have a lust that exceeds even the measure of the palmyra fruit, they will not desire (to feign) dislike even as much as the millet
பால் : காமத்துப்பால், அதிகாரம் : 129 - புணர்ச்சிவிதும்பல், குறள் : 1290
Page 129 of 133 — 1330 record(s)

திருக்குறள் அதிகாரங்கள் . All 1330 Thirukkural Couplets

© Srirangaminfo.com