
42. கேள்வி
| 1 செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ் செல்வத்து ளெல்லாந் தலை |
| பொருள்(விளக்கம்): செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும் |
| Transliteration: Selvaththut Selvanj Chevichchelvam AchchelvamSelvaththu Lellaan Thalai |
| Couplet: Wealth of wealth is wealth acquired be ear attent; Wealth mid all wealth supremely excellent |
| Explanation: Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 42 - கேள்வி, குறள் : 411 |
| 2 செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் |
| பொருள்(விளக்கம்): செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும் |
| Transliteration: Sevikkuna Villaadha Pozhdhu SiridhuVayitrukkum Eeyap Patum |
| Couplet: When 'tis no longer time the listening ear to feed With trifling dole of food supply the body's need |
| Explanation: When there is no food for the ear, give a little also to the stomach |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 42 - கேள்வி, குறள் : 412 |
| 3 செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து |
| பொருள்(விளக்கம்): குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர் |
| Transliteration: Seviyunavir Kelvi Yutaiyaar AviyunavinAandraaro Toppar Nilaththu |
| Couplet: Who feed their ear with learned teachings rare, Are like the happy gods oblations rich who share |
| Explanation: Those who in this world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods, who enjoy the food of the sacrifices |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 42 - கேள்வி, குறள் : 413 |
| 4 கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற் கொற்கத்தின் ஊற்றாந் துணை |
| பொருள்(விளக்கம்): நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும் |
| Transliteration: Katrila Naayinung Ketka AqdhoruvarkuOrkaththin Ootraan Thunai |
| Couplet: Though learning none hath he, yet let him hear alway: In weakness this shall prove a staff and stay |
| Explanation: Although a man be without learning, let him listen (to the teaching of the learned); that will be to him a staff in adversity |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 42 - கேள்வி, குறள் : 414 |
| 5 இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல் |
| பொருள்(விளக்கம்): வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும் |
| Transliteration: Izhukkal Utaiyuzhi Ootrukkol AtreOzhukka Mutaiyaarvaaich Chol |
| Couplet: Like staff in hand of him in slippery ground who strays Are words from mouth of those who walk in righteous ways |
| Explanation: The words of the good are like a staff in a slippery place |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 42 - கேள்வி, குறள் : 415 |
| 6 எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் |
| பொருள்(விளக்கம்): நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் |
| Transliteration: Enaiththaanum Nallavai Ketka AnaiththaanumAandra Perumai Tharum |
| Couplet: Let each man good things learn, for e'en as he Shall learn, he gains increase of perfect dignity |
| Explanation: Let a man listen, never so little, to good (instruction), even that will bring him great dignity |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 42 - கேள்வி, குறள் : 416 |
| 7 பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர் |
| பொருள்(விளக்கம்): எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள் |
| Transliteration: Pizhaith Thunarndhum Pedhaimai Sollaa RizhaiththunarnTheentiya Kelvi Yavar |
| Couplet: Not e'en through inadvertence speak they foolish word, With clear discerning mind who've learning's ample lessons heard |
| Explanation: Not even when they have imperfectly understood (a matter), will those men speak foolishly, who have profoundly studied and diligently listened (to instruction) |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 42 - கேள்வி, குறள் : 417 |
| 8 கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி |
| பொருள்(விளக்கம்): இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும் |
| Transliteration: Ketpinung Kelaath Thakaiyave KelviyaalThotkap Pataadha Sevi |
| Couplet: Where teaching hath not oped the learner's ear, The man may listen, but he scarce can hear |
| Explanation: The ear which has not been bored by instruction, although it hears, is deaf |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 42 - கேள்வி, குறள் : 418 |
| 9 நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராத லரிது |
| பொருள்(விளக்கம்): தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது |
| Transliteration: Nunangiya Kelviya Rallaar VanangiyaVaayina Raadhal Aridhu |
| Couplet: 'Tis hard for mouth to utter gentle, modest word, When ears discourse of lore refined have never heard |
| Explanation: It is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choice instruction |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 42 - கேள்வி, குறள் : 419 |
| 10 செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினு மென் |
| பொருள்(விளக்கம்): செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான் |
| Transliteration: Seviyir Suvaiyunaraa Vaayunarvin MaakkalAviyinum Vaazhinum En? |
| Couplet: His mouth can taste, but ear no taste of joy can give! What matter if he die, or prosperous live |
| Explanation: What does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by the ear ? |
| பால் : பொருட்பால், அதிகாரம் : 42 - கேள்வி, குறள் : 420 |